Posts

Showing posts from April, 2015

போட்டு வைத்த காதல் திட்டம் - சிறுகதை

”எத்தன தடவ கேக்குறேன், டூர் கூட்டிட்டுப்போடான்னு, இதே விஜி கேட்டிருந்தா மட்டும் ஈன்னு இளிச்சுட்டு போயிருப்ப, நான்னா ஒனக்கு அவ்ளோ எளக்காரமா? ஓவராப்பண்ணாதடா” ”ச்சீ மூடு, இந்த வாரம் கூட்டிப்போறேன்னு சொன்னேன்ல,I’ll keep up my word.” “நீ keep up பண்றதத்தான் போன மாசமே பாத்தனே. ஏற்காடு போலான்னு சொல்லிட்டு கடசீ நேரத்துல கழுத்தறுத்த” “ஓய்.. கொன்னுடுவேன். நீதான் அப்ப வயித்துவலின்னு சொன்ன. அதான் கேன்சல் பண்ணேன்” “அது வந்தா ஒனக்கென்னடா?” “எனக்கென்னவா? அப்புறம் ஏற்காட் போய் என்ன யூஸ்?” ”டேய் பொறம்போக்கு, நான் ஒன்ன கூட்டிட்டு போகச்சொன்னது ஊர் சுத்திப்பாக்க” “நீ ஊர் சுத்திப்பாரு, நான் ஒன்ன சுத்திப்பாக்குறேன்.” “இந்தக்கேவலவாதி ஜோக்கெல்லாம் விஜிகிட்ட சொல்லு. இதுக்குன்னே காத்துட்டிருந்த மாதிரி கெக்கேபெக்கேன்னு சிரிக்கும் அது. EMI போட்டாச்சும் என்ன next week tour கூட்டிட்டு போகல.., that’s it.” ப்ரதீப் ஹரிதாஸ். 8000 ரூபாய்க்கு branded ஷு பளபளக்க தரமணி புழுதிக்குள் லட்சரூபாய் பைக்கில் பறக்கும் ஐடிக்காரன். ரகசியமாகவும், சில சமயம் நேரடியாகவுமே பெண்களின் சைட்டடித்தலுக்குள்ளாகும் Smarty.

#SuMuWedding

Image
The power of a programming language lies in creating things that the inventor hasn’t ever dreamt of. – MaGrumpy    இத ஏன் இப்ப சொல்றேன்னா தண்ணி பாட்டில் பத்து ரூபாய்க்கு விக்குது மக்களே, அது மட்டுமில்லாம குரியகோஸ் புஸ்கோவ்ஸ்கி, Brishi chopsey (ரிஷி ஆப்சினு உச்சரிக்கனும்) என்பது போன்ற சைனீஸ், தாய், இட்டாலியன் பேர்களை, நானறிந்த இலக்கியவாதிகளிலே என்ற ரேஞ்சில் அவ்வப்போது அவுத்துவிட்டாத்தான் இங்க தாக்குப்பிடிக்க முடியும்.        தமிழன் என்றோர் இனமுண்டு தனியே எமக்கோர் குணமுண்டுன்னு சொல்லுவாங்க. இது டுட்டருக்கு மிகப்பொருத்தம். இங்லிஸ் இந்தி மல்லு இப்புடி பல உலகங்கள்ள டுட்டர் செயல்பட்டாலும் இங்லிஸ்க்கு அடுத்து டுட்டர வெச்சு என்னென்னமோ பண்ணுனது தமிழ் டுட்டர்தான் (அத 'சந்து'ன்னு அன்போடு அழைப்போம்) காலை அரும்பி பகலெல்லாம் போதாமலாகி மாலையிலும் மலரும் இந்நோய் ( வள்ளுவர் இன்று இருந்தால் இதான் சொல்லிருப்பார்னு நான் சொல்ல வரேன்னு உங்களுக்கே தெரியும் . அதனால அத strike out பண்ணிட்டேன்)    பல ஃபேஸ்புக்வாசிகளுக்கு டுட்டரும் டுட்டர்சும் அலர்ஜி. ஏன்னு தெரியல. அவங்களோட உள்வட்டத