Posts

Showing posts from March, 2015

பயணம்

விப்ரோ பெங்ளூரில் இருந்தபோது ஊருக்கு ப்ரைவேட் ட்ராவல்சில்தான் போவேன் ( பர்வீன் Travels விளம்பரக் கட்டணம் அளிக்கும் பட்சத்தில் அது எந்த ட்ராவல்ஸ் எனச்சொல்வேன் ). மடிவாளா வீட்டுப் பக்கம் , ஊருக்குக் கிளம்பும் பல கேரள ஜிகிடிகளின் தரிசனம் போன்ற பல Love கீக சௌகரியங்களுக்காக அப்பிரைவேட் ட்ராவல்சைத் தேர்ந்தெடுத்தேன் .    ஒரு நல்ல விசயம் தொடர்ந்து நடந்தா விதிக்கு பொறுக்காதே . இங்கும் வந்தது , என் நண்பன் ஒருவன் ரூபத்தில் . ” மச்சி எதுக்குடா இவ்ளோ செலவு பண்ணிப்போற ? என் ப்ரெண்டு வாரா வாரம் மதுரைக்கு SETC ல தான் போவா . செம சீப் ” என்றான் . ( அதற்கு அவனிடம் நான் கேட்ட டவுட்டை எழுதினால் அவன் என் வம்சத்தையே அகழ்வாய்வு செய்து திட்டியதையும் எழுதவேண்டுமென்றபடியால் அது சாய்சில் விடப்படுகிறது) .  “ அவகிட்ட சொல்லி உனக்கும் புக் பண்ண சொல்றேன் , ஒன்னாவே போய்டுங்க , அவள்ட்ட நீ பே பண்ணிடு ” என்றான் . இந்த ' ஒன்னாவே ' எனும் வார்த்தைக்காகவெல்லாம் சபலப்பட்டு பல்லிளித்துக்கொண்டு நான் சென்றிருப்பேன் என நீங