Posts

Showing posts from 2022

காதல்...

(நேரம் பகல் சுமார் 11:30ish)  "எங்கப்பா எது சொன்னாலும் அத நம்பாத, சீரியசா எடுத்துக்காத."  "எத்தனவாட்டிடா அதையே சொல்லுவ? இன்னும் எத்தன ஃப்லோர் ஏறனும்?" "நாலாவது மாடின்னு சொன்னன்ல."  அந்த 7G ரெயின்போ காலனித்தோற்ற கட்டடங்களில் ஒன்றில் படியேறினர் இருவரும்.  நான்காம் மாடியில் ஒரு அரக்கு நிறக்கதவுக்கு முன் போடப்பட்டிருக்கும் கருப்பு இரும்புக் கேட்டைத் திறந்து கதவைத் தட்டினான் சரவணன்.  "இரு நாம்போறேன்" என உள்ளிருந்து அவனின் அப்பாவின் குரல் கேட்டது. (Imagine படவா கோபி) ஒரு கதவைத் திறந்தார் கோபி. வெளியே மகன் சரவணன் நின்றுகொண்டிருந்தான். கோபியின் கையில் காய் நறுக்கிக்கொண்டிருந்த கத்தி.  'என்ன?' எனக்கேட்பதைப்போல் தலையை (மற்றும் புருவத்தை) மட்டும் அசைத்தார்.  இவர் வழியை மறித்துக்கொண்டிருக்க, "ம்மா" என சற்றே கடுப்பில் வெளியிலிருந்தே சத்தமாக அழைத்தான் சரவணன். "ஏ வசு, எதோ பிச்சக்காரன் வந்துருக்கான் பாரு. எதாச்சு பழசு இருந்தா போடு" எனக்கூறியபடி அங்கிருந்து நகர்கிறார். ஒரு பழுப்பு நிற ரௌண்ட் நெக் பனியன், நீல நிற லுங்கி சகிதம் நடு ஹாலில

டாட்டூ

தொடர்தீயில் நன்கு காய்ந்து கிடக்கும் தோசைக்கல்லில் தெளிக்கப்பட்ட நீர், துடிதுடித்து ஆடுவதை ஸ்லோ மோஷனில் பார்ப்பது போலிருந்தது, அவனின் ஒவ்வொரு சீண்டலுக்கும் இசைந்து அவளின் உடல் துடித்தது. ஒரு மிக நீண்ட பெருமூச்சு விட்டாள்.  "Is this sigh your cigarette after sex?" '(இ)ஹ்ஹும்' என நொடிப்பொழுது சிரித்தாள். டாட்டூக்களினால் நிறைந்த அவளின் வயிறு அச்சிரிப்பை ஒருதரம் கக்கி அடங்கியது.  "வெளிய மட்டும் தெரிஞ்சா..." எனப் பேசத்துவங்கியவனை "ப்ச்" எனக் கண்டித்து நிறுத்தினாள்.  "I'm sorry" என்றான். "பெரிய தங்கக்கூண்டுல வாழ்ந்துட்டிருக்கல்ல?" எனப் பேச்சை மாற்றியவனிடம் "ப்ச், cliché" என்றாள். பக்கத்தில் குப்புறப் படுத்திருந்தவளை இழுத்து தன்மேல் இட்டுக்கொண்டான்.  "நசுங்குதே வலிக்குதா?" "அதுங்ககிட்டயே கேளு."  கேட்டான். "ஸ்ஸ்...இப்ப வலிக்குது" என்றாள். "அவுஹ்ங்சொஹ்ங்க்ட்ம்" "என்னது? அதுலருந்து வாய எடுத்துட்டு சொல்லு." "வலிக்குதுன்னு அதுங்க சொல்லட்டும்" என்று மீண்டும் தொடர்ந்து

மூங்கையான்

அந்த நாள் மற்ற எல்லா நாட்களைப்போல்தான் துவங்கியது. அதே ஆரஞ்சுச் சூரியன், அதே பால் பாக்கெட் வினியோகம், பீச்சிலும் பார்க்கிலும் நடை பயிலுனர்கள், கூட்டமெடுக்கும் ட்ராஃபிக், ஏறிக்கொண்டே இருக்கும் பரபரப்பு. எல்லோருக்கும் ஏறக்குறைய அதே தினம் தான். மம்மக்கருக்கு மட்டும் கூடுதலாய், பொண்டாட்டி ஓடிப்போயிருந்தாள்.  பொதுவாக இப்படியான வகையில் ஏதேனும் சம்பவம் நிகழ்கையில், அதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர் மீது அனைவருக்கும் இரக்கமும் பரிதாபமும் வரும். அவனுடைய சொந்தத் தம்பியோடே ஓடிப்போயிருந்ததால் அந்த இரக்கக் கொடுப்பினைகூட அவனுக்கு முழுதாகக் கொடுத்து வைக்கவில்லை. உச்சுக் கொட்டி குசலம் விசாரிப்போரில் பலருக்கு இதழோரத்தில் ஓர் ஏளனச் சிரிப்பும் இருந்தது.  அது ஒரு சாவு விழுந்த வீடு போல இருந்தது. தனது அறையில், கைகளைக் கோத்தும் பிசைந்தபடியும் எதிலும் சிந்தனையற்றுப்போன நிலையிலும் அனைத்து சிந்தனையும் மண்டைக்குள் குழப்பிய நிலையும் கட்டிலில் அமர்ந்திருந்தான். நெற்றியைச் சுருக்கியபடியே வெகுநேரம் இருந்ததால் புருவத்தின் மத்தியில் வலித்தது. உடல் முழுவதும் சூடாக இருந்தது.  மம்மக்கர் அதிர்ந்தே பேசாதவன். சொல்லப்போனால்

இடிப்பாரை...

Image
2000க்கு முன்னாடி வரை வெளியூர்களுக்கு ரயில் பயணம் போகணும்னா சில மாசங்களுக்கு (கொறஞ்சது வாரங்களுக்கு) முன்னமே திட்டமிடணும். ரயில்வே ஸ்டேசனுக்குப் போயி பழுப்பு காயிதத்துல பயணிகள் பேர எழுதிக்குடுத்து பயணத்துக்கான முன்பதிவு டிக்கட் கைல வாங்குறதே ஒரு பெரிய குஷியாகும். ரெண்டாயிரம் வாக்குல irctc சைட் வந்துது. அந்த சைட் சுலோவா இருக்குங்குற புகார்ல இருந்து தத்கல் புக் பண்ற வெற்றி வரைக்கும் அதுக்கப்பறம் பிரபலமாச்சு.  முந்தி டயல் அப் மாடம் இருக்கும். அந்த நெட் கனெக்சன்ல வெள்ளப்பேப்பர் கூகுல் ஓபனாகவே ஒரு நிமிசமாகும். அதுக்கப்பறம் ப்ராட்பேண்ட் வர ஆரமிச்சதும் சுலோ இண்டர்நெட் பிரச்சினைகள் கொஞ்சங்கொஞ்சமா சால்வ் ஆக ஆரமிச்சிது.  வேக, அதி வேக, அதி உயர் வேக இணையச் சேவை ஒரு பக்கம் எல்லா இணையத் தேவைகளையும் fastஆ தீர்த்த அதே வேளை, கண்ணுக்குத் தெரியாத இன்னொரு psychological / behavioral disorderரையும் உண்டாக்கிருச்சு. இங்க behavioral disorderருங்குற சொல் சிலருக்கு அதீதமா தெரியலாம். Behavioral disorders என்னென்னனு ஒரு எட்டு பாத்தீங்கன்னா அந்த சொல் சரிதான்னு ஒத்துப்பீங்க. 2010கள்ல கணினி வரை இருந்த இணையச்சேவை நம்

ஒரு சொல்

நமக்கு இருக்குற ஒரு நல்ல குணமா சிலர் சொல்லக்கேட்டது empatheticகா இருக்கறது. எனக்கு இருக்கற கெட்ட குணம்னு நான் நெனைக்குறதும் அதுதான். அந்த குணம் இயல்புல வந்ததுலாம் இல்ல. அதுக்குக் காரணமா இருந்தது நான் படிச்ச, பார்த்த பலர்னாலும் முதல் காரணமா நெனைக்கறது என்னோட அக்கா ஒருத்தங்க.  Empatheticகா இருக்கறதுக்கான முதல் விதை அவங்கதான் போட்டாங்க. அது எப்பன்னு கூட நெனவிருக்கு. 90களின் பிற்பகுதி. உடன்பிறந்த, ஒண்ணுவிட்ட, தூரத்துன்னு அத்தனை சொந்தங்களும் ஊருக்குப் போயிருந்தோம். Must be some marriage or ramzan or annual vacation. எங்க வீட்டு வாசலுக்கு முன்ன நெறய எடமிருக்கும். ஒரு லாரி, கார் மற்றும் ஒரு மாட்டுக் கொட்டகையளவு அகலம். அங்க கிட்டத்தட்ட 12+ உருப்படிகள் விளாண்டுட்டு இருந்தோம். இப்பிடி கூட்டமா புள்ளைங்க இருந்தாலே அங்க ஐஸ்வண்டிக்காரர் வரது இயற்கை தான? சைக்கிள்ல ஐஸ் வித்துட்டு வந்தார். அப்பல்லாம் கொஞ்சம் வசதியாதான் இருந்தோம். அப்பல்லாம் ஐசும் சீப்பாதான் இருந்துது. ஆகவ குச்சைஸ், பாலைஸ், கப்பைஸ், சேமியா ஐஸுன்னு ரெவ்வெண்டு கைலயும் அள்ளினோம். எங்கூரு வெயிலுக்கு வெல்டிங் நெருப்புல காட்ன மெழுகுவத்தி மாதி

Social Mafia

Image
சமீபமாக ஒரு குறிப்பிட்ட போக்கு அதிகரித்திருக்கிறது. Dissect செய்து பார்த்தால் அடிமட்டத்தில் அவை நடைபெறுவது எல்லாம் சுய பிழைப்புவாதத்திற்காகத்தான் என்றாலும் இவற்றால் ஏற்படும் social impact அதிகம் என்பதால் இதைக் குறித்துப் பேச வேண்டி இருக்கிறது.  பொதுவாக எந்த மாஃபியாவும் தன்னை மாஃபியா எனக் கூறிக் கொள்ளமாட்டர். அது போலவே இந்த சோசியல் மாஃபியாக்களும். அவர்கள் செய்வதாகச் சொல்வதென்னவோ நெட்வொர்க் & மார்க்கெட்டிங்தான். ஆனால் அதைச் சமைக்கும் விதம்தான் பல்லிளிக்கிறது.  ஆதி காலம் தொட்டே எந்தவொரு தொழிலுக்கும் மார்க்கெட்டிங் தேவைப்பட்டிருக்கிறது. திருவிழாக்கூட்டங்களில் ரேடியோக் குழாய் அறிவிப்பில் தொடங்கி, பிட் நோட்டிஸ், சுவர் விளம்பரம், போஸ்டர், கட்டௌட் என அது காலத்துக்குத் தக்கவாறு evolve ஆகி வந்திருக்கிறது.  பிசினஸ்களின் objective தங்கள் brandடையோ சர்வீசையோ மக்கள் மனத்தில் ஒரு ஓரத்தில் நினைவில் நிறுத்துவது. இதைச் செய்து விட்டாலேயே தொழில் பாதி சக்சஸ். அதற்குத் தான் அவர்கள் மார்க்கெட்டிங்கை நாடுகிறார்கள்.  ஒரு சிறு self test: சட்டென உங்கள் நினைவுக்கு வரும் பெய்ண்ட், டூத் ப்ரஷ், நைட்டி, சமையல் எண