Posts

Showing posts from November, 2014

நாகராஜண்ணே... நல்லாருக்கியாண்ணே?

"ச்சை என்ன ஒலகமோ என்ன வாழ்க்கையோ. ஏன் பெரும்பாலும் ஏறுக்குமாறாவே நடக்குது? நல்லவனுக்கெல்லாம் சோதனை வருது. அடுத்தவன் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன் தான் கஷ்டப்படுறான். மனசாலகூட கெட்டது நினைக்காதவனுக்கு எல்லா கெட்டதும் நடக்குது. எங்க திரும்பினாலும் பாவம், கெட்டது, அசிங்கம். இது எல்லாம் இல்லாத, மழை பேஞ்ச அடுத்த நாள் பளிச்சுன்னு இருக்க மர இலைமாதிரி சுத்தமான உலகமே அமையாதா? கடவுளே, என்னை உன் பிரியத்துக்குரியவனா நினைச்சா எனக்கு ஒரு பதில் தருவியா" மனத்தில் நினைத்தான் நாவராஸ் (நாகராஜ்). எங்கும் தன் ஆட்சியைக்குத்த வைத்திருக்கும் கடவுளாச்சே, மெசேஜ் அனுப்பி ஊதா டிக் வருமுன் வந்து நின்றார், அவன் முன். "என்னதாம்ப்பா ஒனக்கு ப்ரச்சன?" "எல்லா எடத்துலயும் ப்ரச்சன, அதான் என் ப்ரச்சன. என்ன சுத்தி நடக்குற அசிங்கம், அநீதி, எக்ஸ்ப்ளாய்ட்டேஷன் எதையும் என்னால பொறுத்துக்க முடியல. Do something and stop them." படபடவெனப்பேசி முடித்தான். "இதெல்லாம் இல்லன்னா சுவாரசியமிருக்காது. சீரியஸ்லி. ப்லீவ் மீ" என்றார் இவர். "அதெல்லாம் சால்ஜாப்பு. ஒனக்கு நலந்தானா வாசிக்கத்தெரிய

நல்ல பேரை வாங்கவேண்டும்

        என்னோடு ஒட்டியிருக்கும் ஒரே காரணத்தினால் , முத்தலிப் - முத்தாலிப் - அமுத்தலிப் - அமுதலிப் - முத்த ’ லிப் என அத்தனை கபீம்குபாம் காம்பினேசனிலும் தொடர்ந்து சிதைக்கப்படும் ஒரு ஜந்து என் பெயர் . கலாஷ்நிக்கோவ் , ஷ்வாஷ்நேகர் , சிங்கிஸ் ஐத்மாத்தவ் , முருகேசி என ரேர் பீசான பெயர் வைத்திருப்பவரெல்லாம் நிம்மதியாக, சொல்வதெல்லாம் உண்மையிலோ , லிங்கா டீசரிலோ ( டீசரில் ரஜினி ஏன் வாயை ஆர்ச் மாதிரி வெச்சிட்டிருக்கார் என டுட்டர் நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார் ) மூழ்கி இருக்க , ஒவ்வொரு முறையும் என் பெயர் தவறாக, டிஜாங்கோ எனப்படும்போதெல்லாம் டி சைலண்ட் டி சைலண்ட் என உரக்கக்கத்திக்கத்தி என் தொண்டைத்தண்ணி வற்றிப்போனது . சரி , கடனுக்கு வீராணம் குழாயிலிருந்து தண்ணி எடுப்போம் என்றால் அதற்குள் அமர்ந்து கதிரேசன் எனும் காம்ரேட் ஒருவர் கம்னிஸ்ட் வகுப்பு எடுப்பதாய்த்தகவல் வந்ததால் திட்டம் கைவிடப்பட்டது .         எனக்கு நிகழ்ந்த பெயர் சூட்டு விழா குறித்து சேகரித்த செய்திகளாவன : செலவை மிச்சப்படுத்துவதற்காக , எனக்கும்