Posts

Showing posts from September, 2023

விடுதலை

மற்றொரு தற்கொலை செய்தியோட இன்னைய நாள் விடிஞ்சிருக்கு . சில்க் ஸ்மிதாவும் இன்னக்கிதான் தூக்குப்போட்டு செத்துப்போச்சு .   தற்கொலை செஞ்சுக்கறவங்க கிட்ட மன்னிப்பும் அவங்க குடும்பத்துக்கு ஆறுதலையும் தரதத் தவிர நம்மகிட்ட எதுவுமே இல்ல . We as a society failed to save them from it.   தண்ணி குடிக்கிறப்ப சில நேரம் பொரையேறி இருமுவோம் . அது ஒடம்போட reflex / defense mechanism. சுவாச குழாய்ல தண்ணியோ உணவோ போயிட்டா அத வெளியேத்தறதுக்காக இயற்கை உண்டாக்கினது . இது உடலுக்கு . மனசுக்கு அதேமாதிரி அதனால தாங்கவே முடியாத ஒரு அழுத்தம் வரப்ப உயிர இப்பிடி வெளியேத்திக்கலாம்னு mind சொல்ற ஒரு false alarm mechanism தற்கொலை . தன்னுயிர போக்கிக்கறவங்ககிட்ட எனக்கு மரியாத இருக்கு . அவ்ளோ உச்ச breakdown னுக்குப் போனப்பறம் தன்னையே கொல்ல துணிஞ்சப்பறமும் மத்தவங்கள கொல்லாம அத தன்னோட நிறுத்திக்கறாங்களே , அதுக்காக அவங்க மேல மரியாதை உண்டு .   தற்கொலை பண்ணிக்கறவங்ககிட்ட இந்த so called உயிரோட இருக்க நபர்கள் கொண்டு வர அபத்தமான அட்வைஸ்கள பாத்தா செத்தவங்க