Posts

Showing posts from January, 2015

புஃபே எனும் Buffet!

Image
சன் டிவியோட டாப் டென் மூவீஸ் சுரேஷவிட அதிகமா, தேவையான அளவு பொன்வண்டு டிச் வாஷ் பார் போட்டு அலசு அலசுன்னு எல்லாரும் அலசிட்டாலும் , ஜனநாயகக் கடமைன்னு ஒன்னு இருக்கில்லியா ? இதோ , எனது சென்னைப் புத்தகக்காட்சி கதை . ( புத்தகக் கண்காட்சின்னு சொல்லாம வெறுமனே காட்சின்னு ஏன் சொல்றாங்க ? any specific reasons?) காய்தேமில்லத் காலத்துலருந்தே புக் ஃபேர் போறது ரொம்பப் புடிக்கும் . பிறகு செயிண்ட் ஜார்ஜ் ஸ்கூல் , பின் , இப்போது நந்தனத்தில் போடப்படுவது வரை இன்னும் வண்டி ஓடிட்டிருக்கு . புக் ஃபேர்னா எனக்கு முதல்ல நினைவுக்கு வர்றது ** ** ( ஒரு டிவி நடிகை , நித்யானந்தர் சிஷ்யை ). பல வருஷங்களுக்கு முன் போன ஒரு புக்ஃபேர்ல , அவங்கதான் நாம்பாத்த முதல் செலிப்ரிட்டி . எதார்த்தமா எதோ ஒரு புக்கெடுத்துட்டே நான் திரும்ப , அப்ப பதார்த்தமா அவங்க எதுக்கோ குனிய , சரி விடுங்க ... அன்று முதல் ஆரம்பித்தது , என் இலக்கிய வேட்கை . கிராமத்துல வளராத காரணத்துனால , திருவிழாக்கள கண்டு களிக்கும் கொடுப்பினை இல்லாமப் போச்சு . அதை இந்த புக்