Posts

சாஸ்வதம்

ஆனந்தக்கண்ணனுக்கு இரண்டு அதிர்ச்சிகள்.   செந்திலிடமிருந்து “hi dude” என்று வந்திருந்த வாட்சப் நோட்டிபிகேசன். குரூப்பில் அவசரத்தேவைகளுக்கு கேட்கும் கேள்விகளைக்கூட கண்டும் பதில் சொல்லாமல் seen zoneல் போடுபவன் இப்போது தனி மெசேஜ், அதுவும் அதிகாலையிலேயே அனுப்பியிருப்பது.   “என்னடா ஒடம்புகிடம்பு எதும் சரியில்லையா? புதுசா திடீர்னு மெசேஜ் எல்லாம் அனுப்புற?” “இல்ல டூட் சும்மாதான்.” “டேய் கடன்கிடன் கேக்கப்போறன்னா இப்பவே சொல்லிடுறேன். என் அக்கௌண்ட் பாழடஞ்சு போயி வவ்வால் எல்லாம் தொங்க ஆரமிச்சிருச்சு. பைசாக்காசு இல்ல கைல.”   “டேய் ஃப்ரெண்டாச்சேன்னு விசாரிக்க அனுப்புனேண்டா.”   “அவ்ளோ நல்லவன் இல்லியே நீலாம். சரி விஷயத்துக்கு வா.”   “டூட் மெசேஜ்ல வேணாம். நேர்ல மீட் பண்ணலாமா?” “எங்க?”   “ககனர்ஸ் காஃபிஷாப்ல.” “டேய், எதாச்சும் MLMல சேந்திருந்தன்னா, அதப்பத்தி பேசப்போறன்னா இப்பவே ஆள உடு.” “எப்பப்பாத்தாலும் நெகடிவா பேசாதடா. இது ஒரு முக்கியமான விஷயம். நேர்ல வா சொல்றேன்.”   [விவரணைகளை விரும்புவோர் அடுத்த பத்தியைப் படிக்கவும். வேண்டாதோர் தவிர்த்துவிட்டு அதற்கு அடுத்த பத்திக்குச் செல்லவும்] அடுத்த பத்தி: தினம்த

யோ! வா!

வணங்கப்படும் எண்ணற்ற கடவுளர்களில் ஒருவரின் கஸின் சன் யீஸ் ஒலிவமலைக்குப் போனார் .   சும்மா ஊருக்குள்ளேயே சுற்றி வருவதால் போர்டம் வர , ஒரு ரிஜுவனேசனுக்காக மலைக்கு ட்ரெக்கிங் போனார் .   வீக்கெண்ட் முடிந்து மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது , மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள் .   சரி சும்மாதானே இருக்கிறோம் , இவன்களும் சும்மாதானே வந்திருக்கான்கள் என அவரும் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார் . ( ஆனியன் ரோஸ்ட் சேனலில் டெய்லி ரோஸ்ட் வராத போது பூமர்கள் மூவர் பேசிக்கொண்டிருப்பரே , அப்படி .) மக்கள் எல்லோரும் வந்தார்கள் என்றுதானே படித்தீர்கள் . அவர்கள் எப்படி வந்தார்கள் எனத் தெரியாதுதானே ? மலெனா எனும் போர்ப்படம் ஒன்றுண்டு . அதை பிட்டுப்படம் என மலினப் படுத்தும் பாவிகளும் இங்குண்டு . அப்படத்தில் ஓர் உச்சக் காட்சியில் ஊரே கூடி பொள பொள ( பொல என வாசிக்க ) என மோனிக்கா நாச்சியைப் பொளந்துவிடும் . அது போல கேகே எனக்கூடி வந்தார்கள் மக்கள் .   அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ண