Posts

ஜெயந்தி

 பள்ளியில் நடக்கும் ஜெயந்தி விழாவுக்கு வேடப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால் பாலகர்கள் கிருஷ்ணன் வேடமணிந்து வரலாம் என சர்க்குலர் வந்தது. மாலை குழந்தைகளை பிக்கப் செய்ய வந்த பேரண்ட்சுகளிடம் இந்தச் செய்தி சொல்லப்பட்டதும் குதூகலமாகினர் சில பேரண்ட்ஸ்கள். அதே கோல், அதே மயிலிறகு, அதே நெத்திச்சுட்டி, அதே சிலுக்கு வேட்டி, ஆனால் அதற்குள் ஒரு வேறுபாடு காட்டி, எப்படியேனும் தாங்கள் வெற்றி பெற்றுவிடவேண்டும் என முனைப்பு காட்டினர் peer pressured பேரண்ட்ஸ்.  நம் கதையின் நாயகி, ஜெயந்தி என்று வைத்துக்கொள்வோம். அப்பள்ளியின் முந்தைய வருட ஜெயந்திப்போட்டிகளின் போட்டோக்களையெல்லாம் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டாள்.  அது மட்டுமின்றி சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்ட, பரவிய போட்டோக்களையும் பார்த்துக் குறித்தாள். இந்த முறை வெற்றி பெறுவது மட்டுமல்ல, புகழும் பெற வேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டாள். டைலரிடம் சென்று ஆடை எப்படி இருக்க வேண்டும். நீளமென்ன, அகலமென்ன, வடிவமென்ன இன்னும் என்னவென்னவெல்லாம் இருக்கிறதோ அத்தனையும் கூறி போட்டிக்கு ஒரு வாரத்துக்கு முன்னமே வடிவமைக்கப்பட்ட ஆடை வந்தே ஆக வேண்டுமென்று கண்டிசனாக

குதிரை

 ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் ட்ட்டட டப் குதிரைகள் தங்கள் கால்குளம்பால் ஓசையெழுப்பி மெரினாவின் மணலைத்தெறிக்கவைத்து விரைந்த காட்சியை  மிகவும் ஆச்சர்யத்தோடு பார்த்தாள் ஹெலன்.  “அம்மா அம்மா அங்க பாருங்க எவ்ளோப்பெரிய குர்துர குடுகுடுன்னு ஓடுது. எப்டி இவ்ளோ ஃபாஸ்ட்டா ஓடுது? கால் வலிக்காதா?” “குர்துர சொல்லக்கூடாது, குதுரன்னு சொல்லனும்” என்றாள் அம்மா  “ஆமாண்டி, நல்லா சொல்லிக்குடு குதுர கதுரன்னு... பூர்ணிம்மா.. குதிரைன்னு சொல்லனும் அத” என்றார் அப்பா. ”குதிரை குதிரை” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஷானாஸ். விடாது அடித்துக்கொண்டிருந்த உப்புப்பிசுபிசுப்பு மிகுந்த கடற்காற்றும், தொடர்ந்த அலைச்சத்தமும், அவ்வப்போது காற்றில் மிதந்து வந்த, எங்கோ இசைக்கப்பட்ட புல்லாங்குழலின் இசையும், பரபரப்பாக வியாபாரத்தில் முனைப்போடிருக்கும் சுண்டல், டீ, ஜோசியக்காரர்களும் மற்றும் போதும்போதுமெனுமளவு குவிந்திருந்த மக்கள் தலைகளுமாயிருந்தது ஞாயிறு பீச். ரோகிணிக்கு எதற்கெடுத்தாலும் கேள்வி, என்ன பதில் சொன்னாலும் அதற்கும் ஒரு கேள்வி. இரண்டாம் வகுப்பே படித்தாலும், எட்டாம் வகுப்பு வரை கேட்க வேண்டியவற

நான் கடவுள் - ஒரு short film story (18+)

1. [INT. வீடு - DAY] போனில் காதலியோடு கத்தி, சண்டையிட்டு, கால் கட் செய்து, வெறுப்பு மற்றும் ஆத்திரத்தோடு ஃபோனைப் பார்க்கிறான். அவளிடமிருந்து GET LOST AND FUCK OFF என மெசேஜ் வருகிறது. Block செய்தும் விடுகிறாள். EMI debited, account balance low என பேங்கிலிருந்து மெசேஜ் வருகிறது. கடுப்பில் லேப்டாப்பைத் திறக்கிறான். We regret to inform you that you are not selected for the job என மெய்ல் நோடிபிகேசன் வருகிறது. வாட்சப்பைத் திறக்கிறான். நண்பனின் கல்யாணத்துக்கு வாட்சப் க்ரூப் ஆரமித்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கைத் திறக்கிறான், சக நண்பர்கள் ஆன்சைட் சென்றது, குழந்தை பெற்றது, ஐலவ்மை ஒய்ஃப் என வரிசையாக ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்கள். LinkedInனைத் திறக்க, கலீக் மற்றும் எக்ஸ் கலீகுகள் ப்ரொமோஷன், புதிய வேலை குறித்த அப்டேட்ஸ். இவனது ப்ரொஃபைல் Open to work எனக்காட்டுகிறது. கோபத்தோடு லேப்டாப்பை (வேகமாக) மூடுகிறான். கடுப்புகள் அடுக்கடுக்காய்ச் சேர்ந்து மேலும் கடுப்பாகி புலம்ப ஆரம்பிக்கிறான். கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குது? என்ன ஏன் மனுசனா படச்ச? நீ மட்டும் கைல கெடச்ச, ஓத்தா அவ்ளதான் என்கிறான். 2. ம

மாஸ்டர்

2024 AD. அல்லது BC. எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ***** [அன்று] சிலபல நாட்களாகவே தன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த ஒன்றை, தயங்கித் தயங்கி அன்று வகுப்பில் மதிய இடைவேளையின்போது அர்ஜூனிடம் கேட்டே விட்டான் கலைவாணன்.“அர்ஜூன் நீ ட்ரோன் ரேசுக்காக ஒரு அகாடமி போறல்ல, எனக்கு அங்க சேர சான்ஸ் கெடைக்குமா?” “டேய், நீ ட்ரோன்லாம் fly பண்ணுவியா? இத்தன நாள் சொல்லவே இல்ல, எங்க கத்துக்கிட்ட?” “இல்லடா, எங்க ஏரியா ஃபோட்டோக்ராபர் அண்ணன் ஒருத்தருக்கு  வ்லாக் எடுக்க, மேரேஜ் ஃபங்ஷன்ஸுனு ஹெல்ப் பண்ண போவேன். அப்ப தான் அவரோட ட்ரோன் ஆப்பரேட் பண்ண கத்துக்கிட்டேன். போகப்போக கொஞ்ச நாள்ல அது மேல ரொம்ப craze ஆகிடுச்சு. அந்த அண்ணாவும் நெறய ஹெல்ப் பண்ணாரு. அவர்தான் drone racing league பத்தியும் அகாடமி பத்தியும் சொன்னாரு. இப்ப நான் பார்ட் டைமா வேலைக்கு போறதுலாம் கூட ரேஸ்ல கலந்துக்க நல்ல ட்ரோன் வாங்கறதுக்குதான். என்னதான் ட்ரோன் ஆப்பரேட் பண்ண தெரிஞ்சாலும் இண்டிவிஜுவல்சால ரேஸ்ல கலந்துக்க முடியாதுல்ல. ரேசுக்கு போகணும்னா அது அகாடமி வழியாதான் போகமுடியும்னு ரூல்ஸ் இருக்குல. அதான் உன் கிட்ட கேக்கணும்னு ரொம்ப நாளாவே தோணிட்

மாடர்ன் கேப்

 அவ்வூரை டவுன் எனச்சொன்னால் டவுன்கள் கோபித்துக்கொள்ளும் . கிராமம் எனச் சொன்னால் அவ்வூரே கோபித்துக்கொள்ளும் . இப்படி இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு ஊர் . இலக்கணச் சுத்தமாக , ஓர் ஊர் .   பத்திரிகைகளிலும் செய்திகளிலும் வரவே வராத சில ஊர்கள் இருக்குமல்லவா ? ஊடக வெளிச்சம் மறைக்கப்பட்டதால் அல்ல , குறிப்பிடத்தகுந்த எந்த நிகழ்வுமே நிகழாததால் . அப்பேர்ப்பட்ட ஊரது .   அண்மையில் அரும்பு மீசை விடத்துவங்கியவர்கள் , அம்மீசையையே தங்களுக்கு முளைத்த சிறகாகக் கருதிச் செய்யும் முதல் தாக்குதலே “ இதையல்லாம் ஊர்னு இழுத்து சொல்லாதிங்கடா , வேணும்னா உர்னு சுருக்கமா சொல்லிக்கோங்க ” என்பது தான் .   அத்தனை வசவுகளையும் பழிப்புரைகளையும் வாங்கிக்கொண்டு ( ம் ), தன்பாட்டுக்கு யார் வம்புக்கும் போகாமல் தேமேயெனக் கிடக்கும் அவ்வூர் . சிறிது வசதி வாய்ப்புகள் வந்ததும் அதுவரை கும்பிட்டு வந்த குலசாமியைச் சற்று ஓரம்கட்டிவிட்டு posh- ஆன பாபாக்களுக்கு மிடில்க்ளாஸ்கள் மாறுவதுபோல , அவ்வூரில் கொஞ்சம் வளர்ந்ததும் மக்கள் செய்யும் முதல் காரியம் அவ்வூரைக் காலி செய்த