Posts

விறகு வெட்டி

  நெஜமாவா சொல்ற? ஓலுடாத என்றான் கக்கன். அட உண்மயாதாண்டா சொல்றேன். உங்கிட்ட பொய் சொல்லி என்ன ஆகப்போவுது. வேணுமின்னா சாந்தரமா வீட்டுக்கு வா மூனு கோடாரியும் காட்றேன். என்னால நம்பவே முடீலடா. இத்தின் நாளா நானும் அந்தக்காட்லதான் மரொன்வ்வெட்றேன். அந்தக் கொள்த்த தாண்டிதான் எப்பவும் போவேன். ஒருதடவகூட அதுல நீ சொல்றாப்போல லேடீச பாத்ததில்லியே. அதான் மச்சான் எனக்கும் புர்ல. கொள்த்தாண்ட இருக்கற மரத்த ஓங்கி வெட்னுருக்கசொல்ல கைஸ்லிப்பாகி கோடாலி கொள்த்துல உழ்ந்துட்ச்சி. இத்த நம்பிதான பொழப்பு ஓடுது, இது போய்ச்சின்னா என்னா செய்றதுனு பெஜாராகிடுச்சு. கொள்த்து உள்ள நெரிய்ய சேறு வேற இருக்குதா, எறங்கர்துக்கும் யோசன. எல்ப்புக்கு ஆள யார்னா கூப்புல்லான்னா அங்க யாரிமே இல்ல. அய வந்துட்ச்சி. கொள்த்த பாத்துனே வக்காய்ஞ்சிருந்தேன். திடீர்னு பொலொபொலொனு தண்ணிலருந்து காத்து கொப்புள்ச்சினு வர்து. திக்குனு ஆய்ப்போச்சு. மொதலகிதல எதனா வர்தாண்ட்டு. பாத்தா உள்ளாரந்து ஒரு லேடிஸ். கையில ஒரு கோடாலி. தங்கத்துல தகதகதகன்னு மின்னுது. இந்தா உன் கோடாரின்னுச்சு. எனுக்கு மொதுல்ல பயோ(ம்). மோகினி டைப்ல எதுவும் பிசாசான்னுட்டு. நாபாட்டுக்கு

ரைலு

         எச்செம் சார் காலை ப்ரேயர் கூட்டத்தில் அந்த அறிவிப்பைச் சொன்னதிலிருந்து காத்தூன் பாத்திமாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ”அடுத்த வாரம் மானாமதுர ரயிலடிக்கு பள்ளியிலிருந்து ஒரு நாள் சுற்றுலா போகப்போறோம். விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் வகுப்பாசிரியரிடம் பெயரைப்பதிவு செய்துகொள்ளவும்” என்றதும், மகிழ்ச்சியில் மாணவர் கூட்டம் “ஏஏஏஏ” என ஆர்ப்பரித்தது. உற்சாக மிகுதியில் சீட்டி அடித்த சிற்சில சில்வண்டுகள் பீட்டி வாத்தியின் மெல்லிய பிரம்படிக்கு இலக்காயின.             மெற்றாஸிலிருந்து, ஊருக்கு வரும்போதெல்லாம் ரயிலைப்பற்றி கதை கதையாய்ச் சொல்லும் ரபீக் மாமுவின் சுவாரசியப்பேச்சில், ரயிலைக் காணாமலேயே தன் கற்பனையில் ஒரு ரயில் செய்திருந்தாள் காத்தூன்.  “நீள்ள்ள்ள்ளமா இருக்கும். முன்னாடி இழுவ இஞ்சின்லருந்து பொஹ பொஹையா வரும்.வெள்ளச்சட்ட போட்டு நைட்டு பெட்டில ஏறி உக்காந்தா காலைல கறுப்புச்சட்டையோடதான் எறங்குவோம். அம்புட்டுப் பொஹ. ரயிலு அப்பப்ப வீல் வீல்னு கத்தும். தடக்கு தடக்குனு சத்தத்தோட ஆடிக்கிட்டும் குலுங்கிக்கிட்டும் வரும். நம்மூரு டௌன்பஸ்ஸு இருக்குல்ல, அதுல போறதவிட கொள்ளப்பேரு போவாங்க.” ரபீக் மா

காதலுடன்

அன்புள்ள ரகுவுக்கு, இல்லை. அன்பெல்லாம் நம் மத்தியில் இல்லை. நீ என் எதிரி. எக்காலத்திலும் என்னால் மறக்கவியலா எதிரி. நீ செய்த அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? நான் மன்னிப்பது இருக்கட்டும். உன்னாலேயே உன்னை மன்னிக்க முடியுமா? நினைத்துப்பார். பார்கவியும் முத்துராமனும் ஓடிக்கொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருந்தனருக்கு முன் ”மூச்சிரைக்க”வும், மூச்சிரைக்கவிற்கு முன் ”உயிரைக்கையில்பிடித்தபடி” எனவும் சொன்னால் அவர்கள் இருந்த சூழ்நிலைக்குச் சரியாக இருக்கும். காதல். வெவ்வேறு ஜாதி. முன்னதைப்பின்னது துரத்திக்கொண்டு இதோ அரிவாளும் கத்திகளும் இரண்டு பூக்களைக்கொய்ய. அடேய் கொடூரனே. உனக்கு நினைவிருக்கிறதா? இருக்காது. உனக்கெப்படி இருக்கும்?   ஒன்றா இரண்டா நீ செய்த கொடூரங்கள், உன் நினைவில் தங்க? உன்னையெல்லாம் தெய்வம் நின்று நிதானித்து, ஆழமாகக்கொல்ல வேண்டும் என எத்தனையோ நாள் பிரார்த்தித்திருப்பேன். இப்போது நினைத்தாலும் என் உடம்பெல்லாம் கூசுகிறது. ”இன்னும் எவ்ளோ தூரம் ஓடப்போறோண்டா? என்னால ஓட முடியல. நாக்கு வறண்டு மூச்சு எளைக்குது” “எப்ப முடியும்னு தெரியல. அவனுங்ககிட்டருந்து தப்பிச்சிட்டா போதும். உயி

கூர்க்கன்

Image
அந்தச் செடி ஒரு பிரியாணி விருந்தின்போது என்னை அடைந்தது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் பணிபுரியும் நேரங்களுக்கு இடையில் இந்திய உணவைப்பற்றி விதந்தோதிக் கொண்டே இருக்க, “Since you all are drooling, let me propose a delicious south indian lunch at my place this weekend, whoever wants to join can come. All are welcome” என்றேன்.  இந்திய உணவு என்றதும் அவரவர் தத்தமது உற்சாகத்திற்கேற்ப தத்தங்கள் குரலில் உற்சாகவொலியெழுப்பினர். அவர்களின் உற்சாகக்crux, “that's awesome man, can't wait” என்றது. பனிரெண்டு பேர் வருவதாக முடிவானது. ப்ரசீலியன், மெக்சிகள், வியட்னாமி, அர்ஹெந்தீனியர், நைஜீரியை, இரானியர், டச்சு, போர்த்துகீசியள், பங்களாதேஷி என உலகத்தட்டையின் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் இருந்தனர் விருந்தினர் [உலகம் உருண்டை என்பது ஒரு hoax என்பது என் faith].  விருந்துக்கு வரப்போவது பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒவ்வொரு நாட்டினரின் நாக்குகளுக்குமேற்றாற்போல் கார அளவு இருக்க, அவர்களின் நா-கார-தாங்குதிறன் குறித்து கேட்டுக்கொண்டேன். டச்சு நாக்குக்கு நம் சர்க்கரையே கூட காரம். மெக்சிகளுக்கு பச்சை ம