மாயா மாயா

Sarvam Maya ஒரு சச்ச ப்ரீஸி படம். ஒரு பேய்ப்படத்துல இத்தன எமோஷன், லௌவ், காமடின்னு நல்லா எழுதிருக்கானுக. ஒரு கட்டத்துல நமக்கே தட் பேய்கூடயே இருந்துர்லாமேடானு நெனைக்கறப்ப அடுத்த பாம எறக்குறானுக. அத பாத்ததும் தெரிஞ்சுருது இந்த ஜில்லேபி கூடத்தான் ஜுகல்பந்தி வெளாடப்போறான்னு. அதே மாதிரி நடக்குது. அப்பறம் பொசசிவ்னஸ் சண்டைகள்னு போகுது. கல்லாப்பட்டி சிங்காரம் என்ன சொல்றாப்லன்னா, அதான் பேயுன்னு ஆயிருச்சே, வெளி ஒலகத்துக்கும் தெரிய மாட்டுது, கூடவே இருக்குறேன்னுது. சரிம்மா ஆனது ஆச்சுன்னு ரெண்டையும் வச்சு ஓட்ட வேண்டிதான. உனிவர்சுல எவனுக்கும் கெடைக்காத சான்சு இவனுக்கு கெடச்சுருக்கு. அதப்பண்ணாம ப்ரைவசி வேணும்னு சொல்லி அடிபடத் திரிஞ்சான். இந்தக்குட்டிப்பேய வச்சே நாட்டின் பெரிய பேயோட்டி ஆகிருக்கலாம். பேஷனுக்கு கொஞ்சம் மீசிக்கி. போடுறதுக்கு ஐ மீன் இசை போடுறதுக்கு தட் மீசிசியன் எஜண்ட்டு ஒய்புனு வாழ்ந்துருக்கலாம். ஆனா இதல்லாம் மேட்டரில்ல. pookieயாட்டம் இருக்க தட் பேயவிட, cutieயாருந்த தட் மீசிக் ஈரோயினவிட படத்தோட கடேசி பத்துநிமிசத்துல ஒரு பைஞ்சு செகண்ட் ஒரு ஸ்கூல் ப்ரின்சிபல் வருவாங்க தட் மேம் deity லெவல். அவிக ஐடியத்தான் தேடிட்டிருக்கேன் இன்னம் அகப்படல. கண்ணுக்குள்ளியே கால் வலிக்க நிக்கிறாங்க இன்னமும். இதயத்துல சேர் போட்டு உக்கார வெக்கலாம் அவிங்கள. 


தட் யக்ஷி மேம்


----

அசுரன்ல ரேபிட் சுட்டுத்திங்கிற சீனுக்கு இன்ஸ்பிரேசன் சுராசிக் பார்க் தான் போல. 








----



ஐன்ஸ்டைன் கூற்றுப்படி
ஸ்பேசும் டைமும் intertwine செய்துகிடப்பதுபோல்
இந்தக் கருளும் குளிரும் பின்னிப்பிணைந்து கிடக்கும்
இந்த விண்டரதிகாலையில்,
ஸ்பேஸ்டைம் கருங்குளிர் போன்றே
நம்மிருவர் கால்களும்
பிணைந்து,
ஒருவரோடொருவர் ஒட்டிக் கலந்து,
வுடல்களின்
அணுக்கச்சூட்டினைப் பகிர்ந்து,
ஆழ்ந்து வெளிவரும்
பெரும் மூச்சுக்காற்றின் வெப்பத்தில்
திளைத்து,
அவ்வப்போது 
எதேச்சை எதேச்சையாக 
வறண்ட உதட்டின்
எச்சில்படா முத்தத்தை
அந்நெற்றிக்குப் பரப்பி,
கலந்துறவாடிக்கிடக்க வேண்டிய
நம்மை,
நான்கு மணி முப்பது நிமிடத்திற்கு
அலாரம் வைத்து
அவசரவசரமாக எழுந்து கிளம்பி,
அர்த்தராவில் பைசாசம்போல்
ஆபிசுக்கு ஓட வைக்கிறதே...
தம்பீ கேள்!
அதுதான் கேப்பிடலிசம். 



----

மீண்டும் ஸ்டெல்லார் வாட்ச்!

ஃபோர்ஷேடோவிங் செய்திருக்கிறார் தலைவர்!





எத்தனை முறை பார்த்தாலும் கூஸ்பம்பிவிடும் காட்சி. 



போலவே பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு கதைக்கு ஐடியா கொடுக்கும் கிட்டங்கி ஸ்டெல்லார்! 



------

பாலதந்தர், பேட்டைக்கொடுத்தர், ஸ்டம்பிங்செய்தர்... வேற வேற?



-----

 Walkக்கையில் நல்லதே நடக்கும். 

-----





-----


வாழ்க்கை குறித்து அச்சமும் தைரியமும் ஒருங்கே வரும் தருணங்கள், இப்படியெல்லாம் போஸ்ட் பார்க்கையில் வரும். 





------------------

சும்மாதான் கால் பண்ணேன்
என்பவர்கள்
சும்மாவே செல்வதில்லை


சும்மாதான் பாக்க வந்தேன் 
என்பவர்கள்
சும்மாவோடு செல்வதில்லை

சும்மாதான் மெசேஜ் பண்ணேன்
என்பவர்கள்
சும்மா பண்ணுவதில்லை

சும்மா வருவது 
சும்மா போகாது

------

சும்மா தேமேயெனக் கிடக்கும்
canalலை
சும்மா மணிக்கணக்கில்
பார்த்துக் கொண்டிருக்க 
முடியாத வாழ்வென்ன
வாழ்வு? 

-----

துயில்வதிலிருந்து
எழுவதுவரை
அரக்கப் பறக்கவே
அலைபாய்ந்து கொண்டிருக்கும்
இச்சூனியத்தில்
செத்த நேரம் சும்மா இருக்க முடிகிறதா?



-----

பராரிப் பரதேசிக்கு
பாரசீகமென்றாலென்ன
பாரடைசென்றாலென்ன




Comments