எமிரேட்ஸ் செமித்தல்

ஒரு அவசர எமர்ஜன்சிக்காக திடீரென ஊர்ப்பயணம். டிக்கெட்ட அர வருசம் முன்னாடி போட்டாலே இருக்கற அன்றாயர் வரைக்கும் உருவிட்டு உடுவானுக. ரெண்டு நாள் முன்ன போட்டா வெளங்கவா? கடும் உழைப்பின் கடேசிச்சொட்டு வரை உறிஞ்சிட்டானுக. 


முழுசா லீவுமில்ல. ஒரு வாரம் எமர்ஜன்சிக்கி ஒதுக்கிட்டு மறு வாரத்த ஒர்க்ஃப்ரம்ஹோம்னு திட்டம். 


இனிமே வெகேசன்னு வந்தா இந்த ரிமோட் ஒர்க் வேலைகள செய்யக்கூடாது. நாம கால்குலேட் பண்ணது, காலைல லோக்கல் வேலைகள முடிச்சுட்டு மதியம் முதல் நைட்டு வரை ஆம்ஸ் டைம்சோன்ல வேல பாக்கலாம்னு. ஆனா அது சூர டயர்டாவுது. 

காலைல சுமார் ஆறேழுக்கு எந்திரிச்சு 1 மணிக்குள்ள கொஞ்ச வேலைகள முடிச்சுட்டு 1- ராத்திரி 10 மணி வரைக்கும் வேல செய்யறது மெண்டலி பிசிக்கலி எக்சாஸ்டிவா ஆகுது. சொல்லப்போனா ஒவ்வொரு நாளும் ஒன்ற நாளோட வேலைகள பாக்கறாப்ல ஆகுது. ஆக இனிமே ஒர்க் லேப்டாப்ப கூட விட்டுட்டுத்தான் விமானமேறனும். இல்ல இந்திய நேரத்துலயே வேல செய்றேன்னுடனும். 


நாலு மனுச மக்கள பாக்க முடியறது லஞ்சிலயும் டின்னர்லியுந்தான். கரெக்டா அது லாக்காகிட்டு எதுமே அசைய முடியல. நாமளும் ஒரு கட கண்ணிகளுக்கு போக முடியல. அட்லீஸ்ட் ஓவர்லாப்பிங் ஜாஸ்தியாருந்தாலும் பரால்ல. ஒரேமுட்டா பத்து வரைக்கும் இழுக்கறது இன்னும் டயரிங்.

----------

யூடூபான் ஸ்பீடு மாத்தறதுக்கு என்னத்தையோ புதுசா ஒட்டி கொணாந்துருக்கான். வேகத்த மாத்தவே முடியல. ஸ்க்ரோல் பாரும் வேல செய்யல ஒரு எளவும் இல்ல. நமக்கு 2X தவிர வேற எதுல கேட்டாலும் மண்ட காயும். 




------------------

லச்சக்கணக்குல காசு வாங்கறானுக. ஆனா போர்டல் பொளந்துட்டு போறாப்ல இருக்குது. முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மோளம் அடிச்சுட்டு இருக்கான் எமிரேட்டான். பூராப்பயலையும் செமிச்சு விட்டாத்தான் அடங்குவானுக. 




---------

ஒரு நண்பரின் ஃபார்மஸியில் கொஞ்ச நேரம் கடையப்பாத்துக்க எனக் கொடுத்து விட்டுச்சென்றார். சரி சும்மா இருக்கறதுக்கு நாலு பொருள் எடுத்து தொடச்சு அடுக்கி வெப்பமேன்னு வெச்ச நம்ம அரும்பணிய பாராட்டுவீர்களா கைய்ஸ்? 1 பாராட்டு 1 செயார். 


----------

ஒரு ரோட்டோர டிப்பன் கடையில் காலை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் நம் பக்கத்தில் வந்தமர்ந்தார் ஒரு கருப்புச்சட்டை. சாப்பிட்டு முடித்துவிட்டு, காசு கொடுக்கையில் அந்தக்கடையில் இருந்த இந்த போட்டோவைப் பார்த்துவிட்டு, இது வீட்டுக்கு ஆகாது. அவர் போட்டோவைக்கூட வீட்டில் வைக்க மாட்டார்கள், நீக்கி விடுங்கள் எனக்கூறினார். கருப்புச்சட்டை என்பதால் எல்லா போட்டாவையும் அகற்றச் சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் குறிப்பிட்ட அந்தப் போட்டோவை மட்டும்தான் கூறினார். அந்த உணவகக் கடைக்காரரோ, யாரோ ஒருவர் வந்து கடையில் ஒட்டி விட்டுச் சென்றதாகக் கூறினார். மீதி எல்லாம் இருக்கறது ஓகே. இது இருக்கற வரைக்கும் கஸ்டம் வரும் என்றார். அப்படி ஏதும் சாங்கியம் இருக்கிறதா என்ன? 






Comments