தடையில்லாக்கரண்டு...

 எக்கரைக்கும் அக்கரை பச்சை...



-------------

லேட்டரல் திங்கிங் மீமீ


இந்த உல்லக்க அழ்ழக்கி நாந்தான் பாடல் குறித்த மற்றொது டிரிவியா. இதன் யூடூபு விசிட் கௌட்டைப்பாருங்கள். அதில் எத்தனை டிஜிட்டுகள் இருந்தாலும் அதனை n-1 டைம்ஸ் பார்த்தது அயம்தான் என்பதில் தனீக்கருவமும் பெருமையும் உண்டெனக்கு. 


----------------

பெர்ப்பச்சுவல் மோசனர்கள் >>> தண்ணீரில் வண்டி ஓட வைக்கும் மூலிகை டீசல் ராமர்கள் >>> கண்டதுலருந்தும் கரண்டு எனர்ஜி கண்டுபிடிப்பாளர்கள் 



இவனுகளுக்கு சொல்றது இதுதான்...




--------

சமீபத்தில்தான் சயனைடு சிக்கங்கறி டாக்குமெண்டரி பார்த்தேன். அதிலும் சயனைடு குறித்து வந்தது. இதோ இந்த கலம்காவல் படத்திலும்...



சிக்கங்கறி சயனைடுவில் ஏதோ ஒரு பிசிறு தட்டுகிறது. பட் ஐ கேனாட் புரூவிட், ஜஸ்ட்டொரு ராகவன் இன்ஸ்டிங்க்ட். அது கிடக்கிறது. சயனைடைப் பற்றி நாம் முதலில் கேள்விப்பட்டது பள்ளிக்காலத்தில். அதைச் சப்பினாலே செத்துவிடுவோம் எனவும், அதனாலேயே சயனைடின் சுவை என்னவென்று யாருக்குமே தெரியாதெனவும் கேள்விப்பட்டேன். எல்லாவிடத்திலும் ஒரு ஓலா ஓட்டுபவன் இருப்பானல்லவா? அப்பிடி ஒரு பிக்காலி இஸ்குல் படிக்கையில் என்ன சொன்னதென்றால், சயனைடின் சுவை என்னவென்று கண்டுபிடிப்பதற்காக ஒருவன் தன்னையே தியாகம் செய்ய வந்தானென்றும், அவன் சயனைடைச் சப்பி, அதன் சுவையைச் சொல்ல S என்றானாம், அப்போதே உயிர் போகிவிட்டதாம். 

S என்றால் அது சுவீட்டா, ஸ்பைசியா, சோவரா, சேவரியா, சால்ட்டியா என யாருக்கும் தெரியாது. Sசிலேயே அவன் உயிர் எஸ்ஸாகிவிட்டது என்றான். நாமும் ஒரு பேமுடாக்கு போல் அந்தக் கதையை வெகுநாளாக நம்பி வந்திருக்கிறோம். இப்போது கொஞ்சம் வயதுகளுக்கு வந்தபின் தான் தெரிகிறது எப்பேற்பட்ட மட்டிக்குவாக இருந்திருக்கிறோம் என்பது. 

சயனைடை தின்ன நாய் என்ன spellbeeயா விளையாடப்போகுது? சஸ்பென்சாக ஒவ்வொரு எழுத்தாகச் சொல்ல?

ஆனாலும் இந்தக் கதை கோர் மெமரியில் பதிந்துவிட்டதால் எப்போதெல்லாம் சயனைடு கண்ணில் படுகிறதோ, அப்போதெல்லாம் இது நினைவுக்கு வரும்.

பைதவே, சைனைடின் சுவை அப்படி என்னதான் இருக்கும்? கொஞ்சம் டேஸ்ட் பண்ணி சொல்றேளா?


-----





Comments