ஆயர்தம் மாயா!

தமிழ்நாட்டுலருந்து அரசு ஸ்கூல் புள்ளைகள  வெளிநாடுகளுக்கு கூட்டிட்டுப்போறது நல்ல செயல். அப்பிடி போறதுனால நாமளும் இப்பிடி கடல் தாண்டனும்னு உந்துதல் வரும் புள்ளைகளுக்கு. 

போவ முந்தி பல பயிற்சிகள் குடுக்கப்படும். அதுல குறிப்பா நமக்கு குறுகுறுப்பாருக்கது ஒரு குறிப்பிட்ட பயிற்சி குடுக்கப்படுதா, எப்புடி குடுக்கப்படுதுன்றதுதான். 

எல்லாம் தொடச்சுப்போடுற மேட்டர்தான். நம்மள மாதிரி ஓசிடி பார்ட்டிகளுக்கு அதெல்லாம் மரணவேதனையா இருந்துது ஆரம்பத்துல. தண்ணியால சுத்தம் பண்றப்ப ஒரு நன்னம்பிக்கையின் அடிப்படையில கொஞ்சநேரம் கன்ல தண்ணி காட்டிட்டு சுத்தமாவிருக்கும்னு கெளம்பறவங்க உண்டு. இன்னம் சில அதிசுத்த விரும்பிகள் கையாலயும் ஒரு அலசு அலசி விடுவதுண்டு. 

நாம கண்ணால எதையும் காங்கத்தேவ இல்ல. அதுபாட்டுக்கு பொறவாசல்ல ஓடிரும். இந்த பேப்பர்ல தொடைக்கிறது மொதல்ல ஒவ்வாமையாகி ஓங்கரிச்சுட்டு வரும். அத சரி பண்ணவே நாட்களாச்சு. அப்பிடி தொடைகறது தண்ணியவிட நல்லதுன்னாலும் ரேஷனல் மனசு அத ஏத்துக்க வழியுண்டு. இது பேக்வார்டுல போற முறைன்றதால மனச அதுக்குத் தயார் பண்ணவே முடியல. 

மொதமொத தொடைக்கிறப்ப அது எதோ கேக்க வழிக்கிறாப்ல ஒரு ஃபீலிங் மற்றும் மெலிதான சப்தம் வேற. காந்தாரா க்லைமாக்ஸ் மாதிரி வ்வ்வோஓஓஓவ்வ் ஓஓஓவ்வ்வ்னு ஒரே ஓங்கரிப்பு. 

இதுல அடுத்தகட்ட ப்ரச்சன, முற்றா எல்லாம் போயிருச்சான்னு தொடச்சுப்போட்ட பேப்பர்ல வேற பாத்துத்தான் தெரிஞ்சுக்கனும். அதுல பாருங்க நண்பர் ஒருவருக்கு ஆய் வாசம் மட்டுமில்ல, ஆய பாத்தாலே ஓங்கரிச்சுட்டு வரும். அது அவரோட ஓன் ஆயாருந்தாலுமே. இந்த நிலைல எப்பிடி சுத்தமாகியாச்சானு (!!) தெரிஞ்சுக்க? 

நண்பர் என்ன பண்ணுவார்னா நல்லா பேப்பர தேய் தேய்னு தேச்செடுப்பாப்ல. எந்தளவுக்குன்னா தேக்கிற தேய்ல அந்தப்பகுதியே அரச்சு ரத்தம் வரளவுக்கு. கொஞ்ச நேரத்துல ரொம்ப எரிய ஆரமிக்கும். அப்ப பேப்பர பாத்தா ரத்தமாருக்கும். இப்பிடி சுய ரத்தத்த வச்சு க்லீன் பண்ணிட்டிருக்காப்ல.

ஒரே விசயம், கொஞ்ச நாள்ல ஓங்கரிப்பு கொறஞ்சுருச்சு. ஆனாலும் டி என் ஏ அப்பப்ப ஆக்டிவேட் ஆகி ஓங்கரிப்பு வந்துட்டுதான் இருக்கு. ஓசிடி பிரச்சனையினால அது என்னமோ கக்கிசுக்கு போய்ட்டு வந்தாலே அடுத்து குண்டியக்களுவி குளிக்கிற வரை எதோ எப்பவும் பின்னால சந்தனம் அரச்சு ஊத்தி அலையுறாப்லயே மனப்பிராந்தி இருக்கும். 

வீட்டத்தவிர வெளிய எங்கயாச்சும் ஒருக்கா கக்கா போய்ட்டா அந்த பேண்ட்டயும் அண்டர்வேரையும் வீட்டுக்கு வந்ததும் கொதிக்கும் தண்ணில அலசாம விடுறதில்ல. அதே மாதிரி ஜீன்சாவே இர்ந்தாலும் கக்கிசுக்கு போய்ட்டு வந்துட்டா அவ்ளதாம். அடுத்து தொவைக்காம போடுறதே இல்ல. 

கிழக்கு நாடுகளப்பாத்து கண்ட ஸ்கேம்லயும் ஏமாந்து போற இவனுக ஏன் இந்த தண்ணில கழுவனுங்கறத மட்டும் கத்துக்க மாட்றானுகன்னே புரிய மாட்டுது. நாமளும் முடிஞ்ச வரைக்கும் தண்ணீர்ப்பிரச்சாரத்த மேற்கொண்டுட்டுதான் இருக்கோம். இதுவரைக்கிம் ஒரு டச்சு பேமிலிய மடை மாத்திருக்கோம். நம் முன்னகர்வு தொடரும்.

அதெப்பிடி தொடச்சுப்போட்ட குண்டியோட சுத்தறானுகன்றது அவ்வேனு இருக்கு. எவ்ளோஓ அழகான பொண்ணப்பாத்தாலும் இது பம்முல மைக்ரோ கிராமளவுக்காச்சும் காஞ்ச கக்கா இருக்கத்தான செய்யும்னு மைண்டு யோசிக்கும். அதுலியே நமக்கு டர்னாஃப் ஆகிரும். அதுக்கி மேல எங்கத்த ஆர்னியாகி ஆங்க்கர பாய்ச்ச. 

ஒருக்கா ஆபிஸ்ல கல்யாண மாலை நடத்துனானுக. அப்ப நம்மட்ட பொண்ணு எஸ்பட்டேசன் கேட்டப்ப சொன்ன ரெண்டு பாய்ண்ட கேட்டதும் அரண்டுட்டானுக. மொதல் ரூல் ரெண்டு பேருக்கும் ஃபுட் காம்ப்படிபிலிட்டி இருக்கனும். அவங்க சாப்பாடு நமக்கும் நம்மள்து அவங்களுக்கும் ஏத்துக்கறாப்ல இருக்கனும். காதல் கசிந்துருகறதுலாம் கொஞ்ச நாளைக்கு ஒத்து வரும், அதுக்கப்பறம் சோத்துப்ரச்சனையே பெருசா வந்து நிக்கும். அதனால பொதுவான ஒரு க்ரௌண்டுல வராப்ல நாட்ட சேந்த புள்ளையாதான் இருக்கனும்னாச்சு. அதுலியே டச்சு, ஸ்காட்லாந்து, ஆங்கிலாந்து, அயர்லாந்துலாம் ரூல்டௌட்டு. அடுத்து ஆய் போய்ட்டு தண்ணி யூஸ் பண்றாப்ல கல்ச்சர் உள்ள நாடாருக்கணும். பேப்பர் இஸ் ஸ்டிக்ட் நோன்னதும் தெரிச்சுட்டானுக. 

திடீர்னு மூடு வந்து அங்க இங்கனு போறப்ப இப்பீன்னு அங்க மங்கள ப்ரௌன்ல ஆயிருந்தா செத்தே போயிருவேன். அதனால  அங்கவயங்கள் நீர்க்கிரீடை செய்ற நாடாத்தான் புடிக்கணும் அப்டின்னதும் எதோ ஜோக் பண்றேன்னு நெனச்சானுக. ஒன்னு தண்ணிக்கி அப்கிரேடாகிக்கனும், இல்லன்னா ஆள உட்றனும்னதும்தான் சீரியஸ் ஃபில்டர்னு புரிஞ்சுக்கிட்டானுக. 

நாள் போகப்போக வேற வழியில்லாத பட்சத்தினால வெளிய வெளிக்கி போறப்ப இப்ப நமக்கும் பேப்பர் கைவந்துருச்சு. என்ன, முன்ன மாதிரி பாறைல தேய்க்கிறாப்ல தேக்கிறதில்ல. ரத்தம் கொறஞ்ச அளவு வராப்லதான் சுத்தம் பண்றது இப்பல்லாம். கைய கழுவறது வெளிய வந்துதான் பண்ணனுங்கறதால கழுவாத கையோட பேண்ட்ட இழுத்து மாட்றப்ப டிக்கிலருந்து மறைந்திருக்கும் முறைல கைக்கு ட்ரான்சரான ஆயி கைலேந்து பேண்ட்டு பெல்ட்சுக்குப்போறாப்ல ஒரு மனப்பிரம்மை ஏற்படுது. அந்த நெனப்பிலருந்து விடுதலையே வருதில்ல. 

அதுவும் இப்பல்லாம் காலைல 430 மணிக்கி எந்திரிச்சு 630க்கு ரயில புடிக்க ஓடுறதால நிறுத்தி நிதானமா காலைல போக முடியறதில்ல. என்னதான் முக்கி மொனகி வயித்த க்லீன் பண்ணாலும் பயோ க்லாக் ஷாக்காகிட்டதால ஆபிஸ்ல கொறஞ்சது ரெண்டு வாட்டி அல்லது மூனு வாட்டி போறாப்ல ஆகுது. பேசாம ஒடம்புல வேர்வ வராப்ல இதுவும் தன்னால வேர்வ வழியா வேப்பராக எதும் மாத்தர மருந்திருக்கான்னு பாக்கனும். அவனவனவனுக்கு ஆய் வரமாட்டுதுன்றது ப்ரச்சன. நமக்கு ட்டான்னு வரதுதான் ப்ரச்சனையாரிக்கு. இமேஜின் மொத தடவ போறப்பவே ரத்தம் வர தொடச்சிட்டா அடுத்து ரெண்டு தடவ எவ்ளோ ரணமாருக்கும்னு யோசிங்க. சுத்தமாவாட்டி அது ஒரு மனத்தொந்தரவு, ரத்தவலி உயிர்த்தொந்தரவு. வாழ்க்க வாழ்றது எளிதில்ல நண்பர்களே. அதனால புள்ளைகள நாலு விசியம் சொல்லி வளருங்க. இல்லன்னா இப்பிடித்தான் கடா வயசு வந்தாலும் அல்லல்படவேண்டி இருக்கும்.


------------------------------------------------------------------------------------------


இன்னொசன்சின் அழகியல்




------------------------------------------------------------------------------------------

Innovative & thoughtful 👌👌👌👌👌👌



------------------------------------------------------------------------------------------

எல்மாவோ





---------

அயல்நாட்டுக்கு வந்த புதிதில் செய்த முதல் சமையல். ரொட்டியும் பச்சை வெங்காயமும். அந்த பாயில்டு முட்டை கூட ஓசிக்கி கிடைத்தது. இங்கு ஆரம்பித்து...



கற்றுச் செய்து பார்த்த முதல் பிரியாணி




எண்ணெய் கத்திரிக்கா...



வெங்காயப்பச்சடி




இங்கு முடிந்தது... டீமிலிருந்து எழுவகை நாட்டிலிருந்து டீமேட்ஸ்களை அழைத்து விருந்து வைக்குமளவுக்கு நளபாகர் ஆனதே அயல்நாட்டு வாழ்க்கை கொடுத்த ஆகச்சிறந்த அப்கிர்டேசன் ஸ்கில். 









சமையல் கைவரப்பெற்றதும் அடிக்கடி செய்து சாப்பிட்ட பிரியாணி என்ன...



ரசஞ்சோறு பொரிச்ச முட்டை என்ன...



-------

கைவரப்பெற்ற பழம்! எவிரிதிங் ரிமைண்ட்ஸ் ஆப் ஹர்...



சுடும் உண்மை...




Comments