shrinkflation

 

ஒரு கடைல துணியெடுக்க போறப்ப (ஆடுவேர் எலக்ட்ரிகல்ஸ் துணிமணிச்சாமான்னு எல்லா யாவாரத்துலயும் ராஜஸ்தான் குஜராத் காரனுகதான் படையெடுத்துருக்கானுக. இன்னம் பத்து வருசத்துல வோட்டிங் பேட்டர்ன்லியே பெரிய மாற்றம் வரும் இதனால. கிளிய வளத்து ஆரஞ்சி கொரங்குகிட்ட குடுத்தாப்ல ஆவப்போவுது தமிழ்நாடு.) அந்தக் கடையில சும்மா தான நிக்கிறீங்க, இந்தா சொவைச்சிகிட்டு இருங்கன்னு இந்த மிட்டாய்க்கள ஒரு கிண்ணத்துல போட்டு வச்சிருந்தானுக. மேங்கோ பைட்டெல்லாம் சாப்ட்டு எப்பிடியும் இருவது வருசத்துக்கு மேலயே இருக்கும். கடசியா வாங்கினப்ப எட்டணானு நெனைக்கிறேன். ரெண்டு அஞ்சுருவ்வா (அல்லது ஒன்றரை அஞ்சுருவ்வா) காயின் கனத்துல இருக்கும். For some reasons அது வாங்குறப்ப ஒரு அமுக்கு அமுக்கிப்பாத்து வாங்கறது. (மாங்காய் என்றாலே அமுக் தானா? பெர்வர்ட்). அமுக்கி அமுக்கி அந்த சைசு மசில் மெமரியில பதிஞ்சிருச்சி. இப்ப இத எடுத்துத் தொட்டுப்பாத்தா ரெண்டு நாலணாவ ஒட்டி வச்சாப்ல சூம்பிப் போயி இருக்கு. எதோ பஞ்சத்துல அடிபட்டாப்ல மெலிஞ்சி கெடக்கு. இதத்தான் ஆனந் சீனி சார் தலப்பாடா அடிச்சிகிறாப்டி, ஷ்ரிங்க்ஃப்லேஷன் உச்சத்துல இருக்கு, இனி இந்த நாட்டுக்கு விடிவே கெடையாதுன்னு. பிஸ்கட் கம்பனிக்காரனுக இப்பிடித்தான் வெலவாசிய சமாளிக்க பிஸ்கட்டுகளோட எண்ணிகைய கொறைச்சானுக. அப்பறம் அத ஈசியா மக்கள் கண்டுபுடிச்சிர்றாங்கன்னுட்டு எண்ணிக்கைய அப்பிடியே வச்சு பிஸ்கட் சைச கொறச்சானுக. இப்பிடியே போனா அடுத்து பிஸ்கட் எல்லாத்தையும் நுணுக்கி மூஞ்சிக்கி போடுற டால்கம் பவுடராட்டம் பஞ்சுல தொட்டு ரெண்டு அப்பு அப்பி விடுவானுக போல குடுக்கற காசுக்கு. இது சரியாவுமான்னா ஆவாது. முழுசா மொட்டையடிச்சுட்டுத்தான் அப்பறமா க்ராப்பு வெப்பாங்க. அதுக்காக அடுத்த ரெண்டு டர்ம் ஆரஞ்சிக்குரங்குகளிடம் தான் சின்னாபின்னமாகும். இறுக்கி உக்காந்துக்கிடுங்க. 


----


இதுக்கு டைட்டில் / தம்நெய்ல், கேள்விக்கி டென்சனான இளையராஜாவா இல்ல கிறுக்குப்புண்டத்தனமா கேள்வி கேட்ட மீடியாவா? என்பதை அறிவார்ந்த சமூகத்துக்கே விட்டுவிடுகிறேன்...


-=-

Alexandar babu looks like the diet coke version of yesteryear comedy actor Rocket Ramanadhan.








-=-
ஆனா அநியாயத்துக்கு அநியாயம் பண்ணாதீங்கடா...





Comments