ரேகசித்திரம் நல்லாருந்துதுன்னும் சொல்ல முடியாத நல்லால்லனும் சொல்ல முடியாத ஒரு இதுக்குள்ள இருந்த படம். ரியலான படத்துக்குள்ள ஊடுபாவ விட்டு அவனுக பண்ணின முயற்சிய பாராட்டலாம். படத்துல 80s காலக்கட்டம் வருது. அதுல எல்லாத்துலயும் டீடைலிங் பாத்தவனுக இதுல கோட்ட உட்டுட்டானுக. இந்த போஸ்டல் லோகோ இதுக்கு முன்ன (93க்குப் பின்ன) வந்தது. அதுக்கு முன்ன இந்த லோகோ கெடையாது. அது என்னதுனு கூகுலிட்டாலும் கெடைக்கல. ஆனா இந்த லோகோ கண்டிப்பா இல்லன்னு மட்டும் நிச்சயம் தெரியும்.
அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ் கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம். அனசுரா ராஜனுக்கு முத்துச்சங்கிலி வரைக்கும் டீட்டைலிங் பாத்தவனுக இதுலயும் கொஞ்சம் எஸ்ட்டா கண்ணு வச்சிருக்கலாம். பாவம் அநியாயமா செத்துப்போச்சி புள்ள. நம்ம மனசே நம்மட்ட இல்ல.
ஆல்சோ திரைக்கதைல திடீர்னு ஒரு கேரக்டர கொணாந்து நிப்பாட்டி இவர்தான் அதுனு காட்டக்கூடாதுனு ஒரு ரூல் மாதிரி இருக்கு. புது கேரக்டரத்தான கூப்டக்கூடாது, பூவ பூவுன்னும் சொல்லலாம் புய்ப்பம்னும் சொல்லலாம்னு டகுல்பாஸ் வேல காட்டிருக்கது கொஞ்சம் ஏமாத்து வேலையாட்டம் தோணித்து.
-=-=-=-
அனேகமா ஒரு பத்தாண்டுகளா கூகுல்ட்ட வருசத்துல சில வாரங்கள் மட்டும் சன்செட் என்ன நேரத்துக்குன்னு கேக்கறதுண்டு. அதுக்கேத்தாப்ல நோம்புகள தொறந்துக்கறது. அப்பல்லாம் ஹாய் கூகுல்னு கூட சொல்றதில்ல, ஜஸ்ட் சன்செட் டுடேன்னு டைப்பினா நாம இருக்குற லொகேசனுக்கொப்ப அதுவே என்ன நேரம்னு காட்டிரும். அப்பறம் ரீசண்ட்டா சில வருசமாதான் மைக்க அமுக்கி கேக்கலாம்ங்குற ஆப்சன் வந்துச்சு. அப்பவும் மையப்பொத்தான அமுக்கி சன்செட் டுடேன்னு கேக்கறது. அதுவும் கரெக்டா அந்தந்த ஊரு டைமுகள காட்டிரும். இப்ப ஆயி வந்ததுலருந்து பொலிடிகலி கரெக்டா இருந்துக்குறேன் பேர்வழின்னு கண்டத காட்டுது. எப்ப கூகுல்ட்டருந்து இந்த ஜெமினிகணேசன் வந்தான்னு தெரியல. இப்பல்லாம் சன்செட் என்ன டைமுன்னு கேட்டா, மொதல்ல சன்செட்டுன்னா என்னனு தெரிஞ்சுக்கடா கண்ணானு ஆரமிச்சு விசு மோடுக்குப் போவுது. அட எழவு மகனேனு அடுத்தடுத்த ப்ராம்ப்ட்டுகள குடுத்தா இன்னம் அண்ணா யுனிவர்சிட்டி பதினாறு மார்க் கொஸ்டினுக்கு பதில் சொல்றாப்ல கதையளக்குதே தவிர நமக்குத் தேவையான HH:MM மட்டும் வருவனாங்குது. எவண்டா இந்தச் சின்னச் சனியன ஆன்றாய்டுல ஒட்டி விட்டதுனு இருக்கு.
இதத்தான் ஐன்ஸ்டைன் அப்பவே சொன்னாப்டி, make things simple, but not simplerடா வொக்காளவோலிகளான்னு...
Comments
Post a Comment
Pass a comment here...