கில்மாங்கே மோர்!

சிந்தனைc corner:

Sunny side up எனப்படும் ஆபாயிலுக்கு ஆப்போசிட் என்னது cloudy side up?


?!?

முன்பெல்லாம் ஐட்டம் டான்சுக்கு என பிரத்தியேக நடிக நடிகையர் இருப்பர். காலங்களுருண்டோட, அதையும் மெய்ன் ஆக்டர்களே செய்யும் நிலை ஏற்பட, இந்த சைடு பிட்டுகள் தொழில் வரும்படி இல்லாமல் இண்டஸ்டிரியை விட்டே ஒதுங்கி அவரவர் சத்துக்கேற்றவாறு தொழிலதிபர்களையோ பினான்சியர்களையோ கரம் பிடித்து வாழ்க்கையோட்டத் துவங்கினர். 

எப்படி மெய்ன் ஆக்டர்களே இப்படிக்கடை விரிக்க ஆரம்பித்தனரோ அதே சினாரியோ சோசியல் மீடியாவிலும் கன்றோல் சி கன்றோல் வி ஆகிவிட்டிருக்கிறது. ஒரு காலத்தில் முகத்தைக் கூட காட்ட மாட்டோம், வேண்டுமென்றால் நகக்கண் அளவுக்கு, அதுவும் பூச்சு அடிக்கும் காலங்களில் மட்டும் போட்டோ எடுத்து க்ராப் செய்து ஃபில்டர் அடுக்கி மேலும் சில சுமைலிகளையிட்டு அனானிமிட்டியாக போஸ்ட் செய்வதே குலவழக்காக இருந்து வந்தது. பின் அடுத்த பேட்ச் உள் நுழைகையில் பண்டிகைக்கொரு ஹேஷ்டேகு சேர்த்து அதைச் சாக்காக்கி போட்டோ நவிலும் படலம் நடந்தேறியது. எதுவுமே இடைக்காவிட்டால் #வயிறுசுவாக், #கெண்டைக்கால்புலோஅப் என என்னத்தையாவது காரணமாக்கி காரியம் செய்து கொண்டு வந்தனர். 

போட்டோக்கள் இறங்கியதும் கூட்டத்தில் கியூ மெய்ண்டன் செய்யாமல் கும்மக்கும்மலாக கூடி நின்று சலவாயொழுகவிட்டது படைப்பினில் பாதி சாதி. 

இதிலும் பல ஜான்ராக்களிருந்தன. வேலைக்குப் போகையில் ஆட்டோப்பயணத்தில் தற்ச்ச்செயலாகக் கைவளைகள் தெரியும் போட்டோவகைமை, பேரன் பேத்தியை பிலேஸ்கூலில் விடப்போகும் தருணத்தில் விழும் சாலைநிழல், முகத்தில் முப்போகம் சுமைலி வைத்து மறைத்து பதிவு செய்தல் இப்படிப் பலவாறு. நம்மள மாதிரி ஆச்சாரமான நல்ல குடும்பத்துல பப்லிக்கியா போட்டோ போடுறதுலாம் குலழவக்கமில்லீங்க எனும் மாண்போடு மடை திறந்தனர். 

இந்நிலைப்பாடு நிகழ்ந்திருக்கும்போதுதான் பிட்டு ஐடிக்கள் எனும் குறிப்பேட்டோடு அதி திடீர் பாலோயர்ஸ் உபயத்தோடு புயலாக வீசின. அது எழுத்து வகையாகட்டும், ஆய் வார்த்தைகள் பேசுவதாக இருக்கட்டும், அவ்வளவு ஏன், மேலும் மனசிறங்கி திறந்த மடலாகப் போட்டோக்களும் வீடியோக்களுமே கூட தாரளம் காட்டத் துவங்கியது. 

ஆரம்பத்தில் இவர்களை பிட்டு ஐடிக்கள் என ஒதுக்கினாலும் அவர்களுக்குக் கிடைத்த வரவரவேற்புக்களைக் கண்டோ அல்லது வரும்படியைக் கண்டோ அல்லது இயல்பாக நிகழ்ந்த காலமாற்றமோ, மடை திறப்பது என்பது நார்மலைஸாகிப்போனது. 

தற்போது புப்புதிய பாய்ச்சலாய் சாதா ஐடிக்களே பெசல் சாதாவாக அடித்து ஆடுவதால் முத்தகைய பிட்டைடிக்கள் மேலும் அடுத்த கட்டப் பாய்ச்சலைக் காட்ட ஆரம்பித்துவிட்டன. இதுவரை ஃபாலோ மீ எனக்கூறிக்கொண்டிருந்த ஐடிக்களெல்லாம் சப்ஸ்க்ரைப், ப்ரீமியம் சப்ஸ்க்ரைப் என நிறம் மாற, பாரம்பரிய முந்தானை இழுத்துவிட்டுக்கொள்ளும் ஐடிக்கள் காத்துவாக்குல தாம்போக்கில் விலகிப்போகச் செய்து சோமீயெங்கும் முப்போகம் விளைந்துகொண்டிருக்கிறது.


-

i.e. Rupees 1,63,50,00,00,00,00,000 of your சூத்து காய சம்பாதித்த hard earned money...




-

அயலகத்திலே அவ்வப்போது லோக்கல் ஃபுட் கிரேவிங் ஏற்படுவதுண்டு. அப்படி முட்ட பப்ஸ் கிரேவிங் உண்டாக, அதை எத்தனைப் பணம் கொடுத்தாலும் கிடைக்காத இப்பூமியிலே நெசசிட்டி இஸ் த மதர் ஆஃப் இன்வன்சன்ஸ் எனும் தியரிப்படி, க்ரொசாந்தைக் கொணர்ந்து அதன் வயிற்றில் சீரான ஓர் வெட்டு வெட்டி, அவித்த முட்டையை இரண்டாகப் பிளந்து அதில் ஒரு பிளவை ஒரு குரொசாந்திலும் மற்றொரு விதை முட்டையை இன்னொன்றிலும் சொருகி, டச்சப்புக்கு அதன் மேல் கெச்சப்பை ஊற்றி ஒரு கடி கடித்தால்... கண்ணு முன்னே வந்து போகிறது முட்டை பப்ஸானது!



-=-


உண்மையுரை






Comments