நம்ம கண்ணு இப்டியாப்பட்டதுகள்லதான் போயி விழுவுதா இல்ல இப்டியாப்பட்டதுகள்லாம் நம்ம கண்ணத் தேடித் தேடி வந்து விழுவுதானு தெரியல. அத்தாப்பெரிய போர்டுல இத்தாப்பெரிய கேவலம் நாள்பூரா ஓடிருக்கு. இதக்கூட ஒரு எட்டு கவனிக்க மாட்டானுகளா? இல்ல இதுவும் எதோ ஏடு (Ad) போலனு நெனச்சி விட்டுட்டானுகளா?
-=-=-=-=-
இந்த டீட்டைல்டு ரேட்டிங் ஃபில்டர் என்பது தேவையில்லாதது என்பது நம் கருத்து. 4, 4 and above என்பதை மட்டுமே வைத்தால் போதுமானது. பொருள் தேடும் எவரும் எதற்காக ஒரு ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருளைப் பார்க்கப்போகிறார் என்பது புரியவில்லை. அல்லது அப்படி எதுவும் பிசினஸ் கேஸ் இருக்கிறதா?
கால்குலேசனுக்கு அப்பறம் போட்டுருக்க அந்த சுமைலிய மொழிபெயர்த்தால், இத இப்பிடிதாண்டா கண்டுபுடிக்கனும் தற்குறினு சொல்லிட்டு சர்காஸ்ட்டிக்கா சிரிக்கறாப்ல வரும்.
-=-=-
ஒரு பழங்காலத் தமிழிலக்கண புக்குல கண்ல பட்டுது. வெள்ளக்காரன் ஒரு அண்ணாச்சிகிட்ட இந்தூரு பேரு வாட்னு கேட்டுருக்கான். அண்ணாச்சி இது தின்னவேலினு கலோகியலா சொல்லிருக்காப்டி. அத அப்பிடியே ட்ரான்ஸ்லிடரேட் பண்ணி போட்டுருக்கான் ரீனியஸ்.
*-*
இது எவனோ ட்ரோல் எடிட் பண்ணதுன்னு நெனச்சேன். அபிசியல் போஸ்டரே இதானாம்! சோசில் மீடியா ருயுனுடு மீ.
Comments
Post a Comment
Pass a comment here...