உழைக்கும் பெண்களுக்கு எப்பவும் ஆதரவுக்கரம் குடுக்கறதுல தமிழ்நாடு ஓர் தனித்த நாடு. நமக்கு வந்த ஒரு ஜொமாட்டிக்கி பை ஸ்டார் போட்டுருக்குதுக மக்கள். அந்த லேடி பண்ணின முவ்வாயிரத்துச் சொச்ச டெலிவரிலயும் பைவ்ஸ்டார் வாங்கிருந்தாத்தான் இது சாத்தியம் (ரேட்டிங் ஸ்கிப் பண்றத கணக்குல எடுக்குறானுங்களானு தெரியல. அப்பிடி எடுத்தா அது ஸ்டேடிஸ்டிகல்லி தவறு). ஆக, ஒரு கஞ்சாயிண்ட் எஃபர்ட்டா தம்மாலான ஓருதவிய பேருதவியா சென்னை மெட்றாஸ் மக்கள் பண்ணிருக்கது உள்ளபடியே மகிழ்ச்சிய அளிக்கிது.
எவனோ ஒரு கலிலியோ கேல் இல்லியோ மந்தவெளிப்பாக்க பருப்புசிலி டிண்கு உக்காந்துருக்காம்போல மார்க்கட்டிங் டீமுல.
க்ராசரி முதல் சாப்பாடு வரை பத்து நிமிச டெலிவரினு சேதில அடிபட்டுச்சு ரீசண்ட்டா. அப்பிடி விரைந்து பண்றது சேப்டியானுலாம் ஒரு பக்கம் டிபேட் போயிட்டிருந்துச்சு. முன்ன பிஸ்ஸா கார்னர் அரமணி நேரத்துல டெலிவரி, இல்லன்னா உங்க ஆர்டர் ஃப்ரீனு அறிவிச்சிருந்தான். இது எப்போ, ரெண்டாயிரங்கள்ல. இண்டர்நட் கூட அந்தளவு பரவலாகாத சமயம். கூகுல் மேப்பில்லாம ஜஸ்ட் அட்ரசச் சொன்னா டான்னு அரமணில வந்து நின்ன பொற்காலம். இப்பல்லாம் கூகுல் மேப்ப ஜாண்மொழம்னு பாலோ பண்ணிட்டுப் போனாலே கொளத்துக்குள்ள போயி விழுந்துடுறானுக. நமக்கே ஒருக்கா ஹைதராபாத்துல அப்பிடித்தான் முட்டுச்சந்துல கொண்டுபோயி நிறுத்துச்சு. அது கெடக்கட்டும், இப்பிடி ஊரே பத்து நிமிச பாஸ்ட்பார்வேர்ட் டெலிவரியில திளைச்சிட்டிருக்க, நாமதான் மர்ஃபி விதிக்கின்னே பொறந்துருக்கமே, கொடும்பசியில ஆடர் போட்டா அரமணிநேரம்னு காட்டுச்சு. அரமணி முடிவுல இப்பிடி எஸ்டா டிலேனு காட்டிருச்சு. அப்பறம் அந்த டெலிவரி பார்ட்னரும் கேன்சலாகி மேற்சொன்ன லேடி பார்ட்னர் அசைன் ஆகி ஒருவழியா வந்து சேந்துச்சு, அதுக்குள்ள கொலபசியில பெருங்குடல் சிறுகுடல தின்னுருச்சு.
-=-=-=-
விஜே சித்து வ்லாகு போடுறப்ப ரோட்ல பாத்த நாய எடுத்து வளக்கப்போறேன்னான். பாத்தா அதுக்கு அள்ளித் தெளிக்க ஆரமிச்சிருச்சு சமூகம். ஒருவேள நாம சூத்தரத்த தப்பா கத்து வச்சிருக்கம்போல...
Comments
Post a Comment
Pass a comment here...