ஆரஞ்சிமயமாக்கப்பட்ட டிடி யூடூபுசேனலில் அந்தஹால நாடகங்கள போட்டுட்டு வரானுக. வேலகீல செய்யிறப்ப ஓட விட்டு மண்டைல எட்போன் மாட்டிகிட்டே வேலகீல செய்யிறது ஈசியாருக்கு. ஒலிநாடக வடிவில் கேட்டாப்போதும். வேல பாட்டுக்கு வேலயோடும். ரேடியோநாடகம் பாட்டுக்கு ரேடியோடும். இதுல கவனிச்ச வரையில அல்மோஸ்ட் அத்தனை நாடகமும் youknowhoக்கள்கிட்டதான் இருந்துருக்கு. இதுக்குன்னே ஒருநா நாடக க்றூ பேர்கள உக்காந்து பாத்தப்ப அடித்தல்துவைத்தல்பூச்சுவேலை சமாச்சாரங்களுக்கு நம்மாக்களும் மேப்படியானதுகளுக்கு youknowhoக்களும் தான் இருந்துருக்கானுக. என்னக்கி நம்மாட்களுக்கு அறிவு வர. அதில்ல மேட்டர். இப்பிடித்தான் ஒரு ஒய்ஜிமகே நாடகத்த பாக்கறப்ப, ஒய்ஜி பேசுற டயலாகு மொத்தமும் நகைச்சுவைன்ற பேர்ல அடுத்தவனோட தோற்றம், நிறம், முகம், பேசுற விதம், ஆங்கிலம், கல்வி இதுகள இழிவு படுத்துறதுதான் முழுக்கவே. அது நக்கலடிக்கறதுகூட இல்ல, இழிவா பேசுறது. இதுக்கெல்லாம் மேல பாய்ஸ் (நாடக) கம்பனி மேல என்ன காண்டுவோ தெரியல. அத குத்துறாப்ல ரெண்டு எடத்துல வச்சனம். ரிசர்வேசனுக்கு எதிரா பேசுறேன்னு தாழ்த்தப்பட்டவர்கள இழிவு படுத்தறாப்ல ஒரு எடத்துல வசனம். இதெல்லாம் என்னனு கூட உணராம நார்மலைஸ் செய்யப்பட்டு ஒரு ஜெனரேசன் கடந்துருக்கோம் பாருங்க.
இதெல்லாம் 80/90 டிடி நாடகங்கள். அப்பல்லாம் நம்மவங்கட்ட ஏது டிவி. தெருவே கூடிப்போயி டிவி இருக்குற ஒருத்தர் வீட்ல பாக்கறதுதான வழக்கம். TVக்கான access இல்லல்ல. அப்பவே எல்லார் வீட்டிலயும் டிவி இருந்துருந்தா ஒருத்தர் கவனிக்கலன்னாலும் இன்னொருத்தர் கவனிச்சு இதுக்கெல்லாம் நல்லா கவனிச்சிருக்கலாம். 8090கள்ல இருந்தமாதிரி இப்ப அவனுகளால ஏன் இருக்க முடியலன்றதுக்கு இந்த டிவிக்கள் பரவலானதும் ஒரு காரணம். At the same time இனிமே இங்க குப்ப கொட்ட முடியாது, கொட்டினா ஊர் கூடி கொட்டிருவானுகனு தெரிஞ்சுதான் அவனுக எவால்வ் ஆகி வேற துறைகளுக்கு நவுந்து எஸ்கேப் ஆகிருக்கானுக. இனி அத நாம உணர்ந்து அடங்கொன்னியானு ஆவறதுக்கு இன்னம் ஒரு 30 வருசம் தேவை. சை.
-----
ஒரு மகான் ஒருகாலத்துல சொன்னார். அவர் வசிக்கும் நாடு பாதி எரிஞ்சு, பாதி சிதிலமடைஞ்ச கட்டடம் மாதிரி ஆகிருச்சு. இனி அத ஒக்குடனும்னா முழுக்க தரதட்டிட்டு ப்ரெஸ்ஸா கட்ட ஆரமிச்சாத்தான் ஆவும்னு. அதுக்கான குறியீடா இத பார்க்குகிறோம்.
=============
ஒரு டின்னரின்போது நார்த்திந்தீ ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. நன்றாகப் படித்திருக்கிறான், கொள்ளைகொள்ளையாகச் சம்பளம் வாங்குகிறான், வெளிநாட்டில் தான் செட்டிலாவேனென்கிறான் ஆனாலும் ஆரஞ்சுக்குரங்குகளை ஆதரிக்கிறான். எப்படி வகைமைப்படுத்துவதென்றே தெரியவில்லை இவன்களை. உண்டுமுடித்தபின் சோசியம் பார்க்கிறேனென ஒவ்வொருத்தருக்கும் எதோ கட்டம் கட்டி குறி சொல்லிக்கொண்டிருந்தான். பிறந்த தேதி வைத்து நியூமராலஜியாம். நமக்கு சொன்ன போது அவன் கேட்டவைக்கெல்லாம் ஏறுக்கு மாறாகவே பதில் சொல்லவே சமாதானப் படுத்த சொன்னானா அல்லது பட்டர் போட்டானா தெரியவில்லை, உனக்கும் ஐன்ஸ்டைனுக்கும் ஒரே கட்ட அமைப்பு என ஆரம்பித்து இன்னும் பல ஜிகினாக்கள் சொன்னான். டேய் நான் மேத்ஸ் இல்லை என நம்பி இஞ்சினியரிங் சேர்ந்தவனடா எனும் உண்மையை அவனிடம் சொல்லவில்லை. மேட்டர் அதில்லை. ஜெர்மனியின் கூட்டுத்தொகை மூன்று. அதனால்தான் அங்கே வரிகளதிகம், நிறைய கடினச்சூழல். இதுவே நெதர்லாந்துக்கு கூட்டுத்தொகை ஆறு. ஆகவேதான் எது நடந்தாலும் இங்கே சொகுசு வாழ்க்கை வாழ முடிகிறது என்றான். இந்தியாவின் கூட்டுத்தொகையும் 3. ஆகவே தான் இங்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இன்னல்கள் உள்ளன (அதாவது இந்தியாவுல நடக்கற பிரச்சனைக்கெல்லாம் காரணம் பேரோட கூட்டு மூனு. அதத்தவிர வேற எதுவுமே இல்ல). இதன் காரணமாகவே அவர்கள் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவிருப்பதாகவும் (பாரத் கூட்டு 6). பெயரை ஆறு கூட்டு கொண்ட பாரத் என மாற்றிவிட்டால் ஒளிர ஆரம்பித்து விடும் என ஆரம்பித்து சைனாவால் இனி தாக்குப்பிடிக்க முடியாது, சாதா பாரத் மிஸ்டர் பாரத்தாகிவிடும் என்றெல்லாம் கூற, AVPL எனக்கு ரயிலுக்கு நேரமாச்சு என கழண்டு கொண்டேன்.
-=-=-=
சங்கிகளின் வாழ்வியல்.
+=+
நிலாவே வா!
Comments
Post a Comment
Pass a comment here...