புத்தக அறிவைப் பெருக்க: check kindle books: https://muthaliblogs.blogspot.com/p/kindle-books.html
------
ஜென்ஸீ எனப்படும் குட்டிகுஞ்சான்ஸ கட்டி மேய்க்க முடியலனு பரவலாவே புலம்பல்கள கேக்க முடியுது. ஓனர்சிப் எடுக்கறதில்ல, ரெஸ்பான்சிபிலா இருக்கறதில்ல, நம்பி எதையும் விட முடியல, சொல்பேச்சு கேளாமை ரொம்ப இருக்கு, இப்பிடி வரீசையா வச்சு அடுக்குறானுக கங்காணிகள்.
இத்தன நாளா எய்ட்டீஸ் நைண்டீஸ் கிட்ச டேக்கிட் ஃபார் க்ராண்ட்டடா எடுத்துட்டு எம்புட்டு அழிச்சாட்டியம் பண்ணிருப்பீங்க, அனுபவீங்கடானு ஒரு வகை குரூர திருப்தி இருந்தாலும் சமூக அளவில இந்த குட்டிகுஞ்சான்சின் அக்கப்போர்களால பல பிரச்சினைகள் உண்டாகறத பாக்க முடியிது. வரலாற்றின் ஆகப்பெரும் சொஃபிஸ்டிகேசன் அனுபவிச்ச முதல் ப்ரிவிலெஜ் செட்டு இதுதான். தாந்தோன்றியா இருக்கானுக. அதனால அவனுகள மூக்கணாங்கயிறு போடவே முடியல. ரெண்டு புறமும் சமரசமாவறதுக்கு ஒக்காந்து பேசனும். மொதல்ல அதுக்கே குகுஸ் தயாரா இல்ல. ஸீன் ஸோன்ல போட்டு கோஸ்ட் பண்ணிப்புடுறானுக.
இப்ப ஃபெர்டிலிட்டி கௌண்ட்டு வேற கொறஞ்சு போச்சு. வரலாற்றின் ஒன்னாநம்பர் சுயநலவாத ஜெனரேசனான இவனுகளா நமக்கு வயசானதும் கஞ்சி ஊத்தறதப்பத்தி நெனைக்கப்போறானுகனு ஓர் அச்சம் இருந்தது உண்மதான். ஒரு லைக் போடணும்னாக்கூட அதுல எட்டணா கெடைக்குமானு பாக்கற கூட்டம். அய்யோ பாவம் முதியவர்கள், அவங்களுக்கு எதாச்சும் பண்ணனும்னு சோசியல் காசுல எறங்குவானுகன்ற நம்பிக்கைலாம் இல்ல.
ப்லெஸ்ஸிங் இன் டிஸ்கைஸுங்கறாப்ல, இவனுகளுக்கு ஒடம்பு வளஞ்சு வேல பாக்கறதுக்கோ, சம்பளத்துக்கு வேலைக்கிப்போறதுக்கோலாம் ஒன்னும் கொள்கை கோட்பாடு இல்ல. அப்பப்பைக்கி வயிறு நெறஞ்சாப்போதுன்றாப்லதான் இருக்கானுக. பெரிய பொறுப்புத்தனம்லாம் இல்ல. (பைதிவே, இப்பவும் ஒடனத்து, சுகுரா இருக்க புள்ளைக பிரம்மிக்க வெக்கிறளவுக்கு துடுக்கா இருக்குதுகதான். போலவே தற்குறிகள் அகில உலகத்தின் ஆகப்பெரும் தற்குறி தாந்தாங்குறாப்ல). இவனுக இப்பிடி இர்ரெஸ்பான்சிபிலா இருக்கற வரைக்கும் உருப்படியா வேல செய்றவங்களுக்கு வாண்டட் இருந்துட்டுதான் இருக்கும். ஆகவே மத்தவன் தயவில்லாம நாமளே ஒரு நல்ல வேலைக்கி கடைசி வரை போக முடியுங்கற நம்பிக்கை வந்துருக்கு. வயசாகிருச்சு இனி ஒன்னய வேலைக்கி எடுக்க மாட்டோம்னுலாம் எவனும் சொல்ல மாட்டான். நாம வளத்த குகுஞ்சான்சே இப்பிஇ இருந்தானுகன்னா அவனுக வளக்கப்போற குறுங்குட்டிக்குஞ்சுக எப்பிடி இருக்கும்னு பாத்துக்கிடுங்க.
எது எப்புடியோ, சோத்துக்கு யார் கிட்டயும் போயி நிக்காம நாமளே ஒரு வேலைக்கிப்போயி வயித்தக்கழுவிக்கலாம்னு ஒரு குருட்டுத் தெம்பு வந்துருக்குன்றது நெசந்தான்.
----
பிழைப்பில்லாதவனையும் பிழைக்கத்தெரியாதவனையும் கொன்றுவிடும் இச்சமூகம்.
Comments
Post a Comment
Pass a comment here...