விச்சித்திரங்கள்

 வாழ்க்கையோட விசித்திரங்கள எவ்வளவு சொன்னாலும் மாளாது. நமக்கு காலேஜுல கெடச்ச நட்புகள் நிரம்ப தெறமசாலிகள். நாம சுத்தின குரூப்ப இப்ப நெனச்சா ஒரு மீம் இருக்குமே, மிலிட்டரி ஆட்களோட ஒரு க்லவுனு இருக்காப்ல. அததான் சொல்லலாம். அவனுக அத்தன பேரும் நுனி நாக்கு, நுனி விரல் ஆங்கிலம் பொழங்குறவனுக. நமக்கு ஹி/ஷி வர்ற செண்டன்சுல ஹேஸ் வருமா ஹேவ் வருமானு கூட தெரியாது. ஆனா இவனுகளோட இருந்தாத்தான் இங்கிலிசு கொஞ்சமாச்சும் ஒட்டும்னு முடிவெடுத்து அவனுகளோட சுத்துனேன். சொல்லப்போனா அதுல ஒருத்தன தவிர மீதி எல்லாவனும் நார்த்துலேந்து வந்தவனுக. ஆகையினால அவனுகளோட பேச ஆங்கிலம் ஒன்னுதான் வழி. இருந்த ஒரு தமிழ் பையனும் செய்ண்ட் பீட்ஸ்காரன் (யுவன், சூர்யாலாம் படிச்ச ஸ்கூலு). அப்பவே புக்கு போடுறளவு ஆங்கிலப் புலமை இருந்துது அவங்கிட்டயும். 


மத்த எல்லார்கூடவும் அந்தளவு டச்சில்லாமப் போனாலும் ரெண்டு பேர்கூட அப்பப்ப டச் பண்ணிக்கறதுண்டு. ரெண்டு பேரும் அதீத தெறமசாலிக. (அரசியல்) தெளிவானவனுகளும் கூட. ஒருத்தன் ஐஐடி பம்பாய்ல மேற்படிப்பு படிச்சுட்டு யுயெஸ்லயும் போயி கோர்ஸ் பண்ணி திரும்பி வந்து மைக்ரோசாப்ட்டுல சேந்துட்டான். இன்னொருத்தன் லண்டன்ல படிச்சுட்டு வந்து தனிஷ்க்ல பெரிய வேலைல சேந்துட்டான். நாம நாம்போன அதிக பட்ச நார்த்திந்தியாவே மீஞ்சூருங்கன்னு இருக்கற டைப்பு. 


தாய்த்திருநாடு ஜ்வலிஜ்வலிக்கறதக் கண்டதும் இதுக்கு மேல இது தேறாதுன்னு கெளம்பிற முயற்சிகள் செஞ்சோம் மூனு பேரும். மூனு பேரும் செஞ்சதே ஒருத்தருக்கொருத்தர் தெரியாது. அவங்கவங்க லைஃப்ல தனித்தனி முயற்சிகள். நாம முட்டி மோதி கனடாவுக்கு அப்லை பண்ணி வெய்ட் பண்ணிட்டிருக்கப்பதான் அவனுகட்ட சொன்னேன், லாட்டரில விழவே மாட்டுது ஒவ்வொரு மாசமும் தேவுடு காத்துட்டிருக்கேன்னு. அப்பதான் மத்தவனுகளும் முயற்சி பண்றத சொன்னானுக. ஒருத்தனுக்கு அப்லிகேசன் செலக்ட் ஆகி கெளம்பி போற ப்ராசஸ் நடந்துட்டிருக்குன்னு சொன்னான் மைக்ரோசாப்ட்டான். அப்ப எதெதோ சைனு வாங்கனும்னு ஜனவரில மெட்ராஸ் வந்தான். இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துல கெளம்பிருவேன், கனடாவுல சந்திக்கலாம்னான். நமக்குத்தாம் அப்லிகேசன்ல ஏழரைனு இருக்குதே. ஒனக்கும் சீக்கிரம் கெடச்சுரும்னு என்னதான் அவன் நம்பிக்கை  சொன்னாலும் நம்ம லெக்கப்பத்தித்தான் நமக்குத் தெரியுமே. 


நீ சொல்றது கேக்க நல்லாருக்கு, நடக்கனுமேன்னேன். அப்ப சொன்னேன், மொதல்ல நீ போயிருவ, ரெண்டாவது தனிஷ்கான் போயிருவான், நா கடேசியா வந்து சேந்துக்கறேன், அதுக்குள்ள கம்பனி ஆரமிச்சிருங்க, நீங்களே வேலைக்கி எடுத்துட்டா ஈசியாகிரும்னேன். 


டூட் யுவார் ஆல்வேஸ் ஃபன்னின்னான். 


டேய் நெசத்துக்குத்தாண்டா உள்ளக்கிடக்கைய சொல்றேன்னு நெனச்சுகிட்டேன். 


ஸ்மார்ட்னஸ், ஆங்கில அறிவு, பொருளாதாரம் இதுல பாத்தா அவிங்க ரெண்டு பேரும் எங்கியோ இருக்கானுக. நாம மாச சம்பளத்த எதிர்பாத்துட்டிருக்க அம்மாதங்காய்ச்சி. எனவே நம்ம மனசுக்குள்ளயே அதுதான் கால்குலேசனா இருந்துது, மொத மைக்ரசாப்ட் போயிருவான், அடுத்து தனிஷ்க், பின்ன எதாச்சும் மிராக்கில் நடந்தா நாம போவோம்னு நெனச்சேன். 


அவங்கிட்டயே எதாச்சும் மிராக்கில் நடந்தாதான் எனக்கெல்லாம் வாய்ப்புன்னு வாய்விட்டே சொன்னேன்னு நெனைக்கிறேன். 


அடுத்து கனடாவுல சந்திப்போம்னு ஆழ்வார்ப்பேட்டைல ஒரு டீய குடிச்சுட்டு விடைபெற்றோம். கோவிடு ஆரமிச்சுது. அப்பிடி இப்பிடி அலக்கழிஞ்சு பாத்தா நமக்கு ஐரோப்பிய வாய்ப்பு திடீர்னு அமஞ்சு மூனு பேர்ல மொதல்ல வெளிய கெளம்பறாப்ல ஆகிருச்சு. அதுக்கப்பறம் கிட்டத்தட்ட ரெண்டு வருசம் கழிச்சுதான் மைக்ரோசாப்ட்டானுக்கு க்லியராச்சு. தனிஷ்க்கானுக்கு இன்னம் சரிவர அமையல. 


இந்த எங்க கதைய நெனச்சாலே இப்பவும் ஆச்சரியமாதான் இருக்கு. உருப்பட வாய்ப்பே இல்லங்குறதுக்கு எப்பிடி இப்பிடி ஒரு இது அமைஞ்சிது? 


எப்பிடிப்பட்ட விதிகள்!

-


Listen to it in 2X for good experience



+

check kindle books: https://muthaliblogs.blogspot.com/p/kindle-books.html

+

டுரூத்






- Good watch:



[][][][][][]



I am friend.



Comments