புவியீர்ப்புங்கறது நம்மள பூமியோட ஒட்ட வெக்கிதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா அந்த புவியீர்ப்பு விசை (is it a விசை in the first place?) பூமி முழுக்க ஒரே அளவுல இருக்குமா இல்ல வெவ்வேறயான்னா, வெவ்வேறதான். நிலத்துல இருக்கறத விட மலை உச்சில கொஞ்சம் கம்மியா இருக்கும். யோசிச்சுப் பாத்தா நாயந்தானனு தோணுதுல்ல? ஒரு காந்தத்து கிட்ட இரும்ப வச்சா பச்சக்குனு ஒட்டிக்கும். இதுவே கொஞ்ச தள்ளி வச்சா காந்தப்பவரு கம்மியாருக்கும். அதே மாதிரி பூமி sea levelல பாத்தா ஒரு மாதிரி இருக்க கிராவிட்டி உச்சில கொறயுது. இது சைன்டிஃபிக்கா ஒத்துக்கறாப்ல இருக்கா?
திரிவ்யூ:
அப்பிடி நம்மள லேசுல விடாது கிராவிட்டி. இந்தா புடி மேஜிக்குனு ஒன்ன தூக்கிப் போடுது. பூமிப்பந்தின் பரப்புல எல்லா எடத்துலயும் ஒரே மாதிரி இருக்காது சரி, அதுல இருக்கதுலயே லோயஸ்ட்டா எங்க இருக்குனு ஒரு கேள்வி வரும்ல? அப்புடி ஒரு எடமிருக்கு. அத Geoid Low அப்பிடிம்பானுக. முன்னோர்கள் முட்டாள்களில்லை கூட்டத்துக்கு புட்டம் புடைக்க சொல்லணும்னா Indian Ocean Geoid Low. ஆமா அது இந்திய திரைகடல்லதான் இருக்கு. கன்யாகுமரி, சிலோன் ஏரியால. இதப்பத்தி இன்னம் விரிவா சொல்லலாம்னா பாத்தேளா நாங்க அப்பவே சொன்னோம், அங்க கல்லு போட்டா மெதக்கும்னுட்டு குரங்குகள் படையெடுக்கும். அதனால விருப்பப்படுறவங்க தேடிப் படிங்க. இண்டரஸ்டிங் மேட்டர்.
-----
கிராவிட்டிய விளக்க கடைசியா வந்த அழகிய விசுவல் எக்ஸ்பரிமண்ட் இந்த trampolineல பெரிய குண்டப்போட்டு அதச் சுத்தி கோலி குண்டுகள போடுறது. போட்டதும் அதுக பெரிய குண்டச்சுத்திட்டு அப்பறம் அதுகூட போயி ஒட்டிகிட்டு நிக்கும். இந்த துணிய ஸ்பேசுன்னும், பெரிய குண்டுனால ஏற்படுற இழுவைய beding of space/timeனும், சின்ன கோலிகள் அதச் சுத்துறது சூரியன அல்லது ஏதாச்சும் ஒரு massச ஏனைய துணைக்கோள்கள் சுத்துறதுன்னும் கடைசியா அதுல போயி ஒட்டிட்டு நிக்கறத க்ராவிட்டினும் ஒரு ஒப்புமைக்காக சொல்லுவாங்க. இந்த வீடியோவ மொத மொத சில வருசங்கள் முன்ன பாத்தப்ப அவ்ளோ ஒரு மகிழ்ச்சியா இருந்துது. அடடே, ஃபைனல்லி விசுவலா பாக்க ஒரு வாய்ப்பு வந்துச்சேன்னு. ஆனா இப்ப வேற மாதிரி தோணுது. இந்த வீடியோவ ஒரு எடுத்துக்காட்டுக்காக எடுத்துக்கலாமேயொழிய லிடரல் மீனிங்கா வச்சுக்கிடுறது சரியா வரும்னு தோணல. ஏன்னா இந்த மொத்த எக்ஸ்பரிமண்ட்டுலயும் எல்லாத்துலயும் ஊடுபாவி இருக்கறது பூமியோட கிராவிட்டி. அந்த குட்டி கோலிகுண்டுகள் போயி பெருசு கூட ஒட்டுறதுக்குக் காரணம் அந்தத் துணியில ஏற்பட்ட வளைவுனால இல்ல, பூமியில இருக்கற கிராவிட்டியினால. இப்ப இதையே இப்பிடி யோசிங்க. எத்தாப்பெரிய குண்டப்போட்டாலும் மத்த கோலி குண்டுக துணிக்கி மேல போட்டாத்தான் போயி பெரிய குண்டோட சேரும். இதுவே துணிக்கி கீழ போட்டா தரையிலதான் விழும். ஆக, இதுல prime moverரா இருக்கறது பூமியோட புவியீர்ப்பேயொழிய bending of cloth கெடயாது. ஆனா இப்பிடி அகராதியா பேசி இந்த அரும்பெரும் எடுத்துக்காட்ட விலக்கிடக்கூடாது. இத ஒரு படியா வச்சு, அடுத்து க்ராவிட்டிய இன்னம் க்லோசரா விளக்குற அடுத்த படிக்குப் போவனும். போவோம்.
----
கடவுளே!
ரசிகர்கள் அஜித்துட்டருந்து கத்துக்க, இல்ல, கத்துக்க இல்ல, கண்ண மூடிட்டு ஃபாலோ பண்ண செம்ம மேட்டர் குடுத்துருக்காப்டி. ரெண்டு தசாப்தமா கவனிச்ச வரையில பாத்தது இது.
1. Be fit.
2. Be unapologetically selfish and focused on your personal and professional life
3. Never let anyone influence / put peer pressure on you - எத்தன பேர் எவ்ளோ கதறினாலும் சரி, தனக்கு தோணறத மட்டும் பண்ணிட்டு போய்ட்டே இரு.
4. Be you. the world will adjust. ஆனானப்பட்ட ரஜினியாவே இருந்தாலும் ப்ரொமோசனுக்கு வந்து ஆட்றா ராமானு கொரங்கு குஸ்தி போட வச்ச சினிமாத்துறையில, இவரு எந்த ப்ரொமோசனுக்கும் வரமாட்டாருன்னு வளஞ்சு குடுக்க வச்சுட்டாப்ல.
5. Have a hobby / passion - ஒடனே BMW பைக் வாங்கி ரேஸ் ஓட்டச் சொல்லல, எதாச்சும் ஒரு ஸ்போர்ட், அட்ரினலின தூண்டி உட்டுட்டே இருக்காப்ல ஒன்னு.
6. Groom yourself well and be presentable - ரோட்ல சும்மா போறப்ப அவரோட சுமார் லுக்க பாக்காதீங்க, பொது நிகழ்ச்சிக்கு வரப்ப எப்பிடி ஸ்மார்ட்டா வராப்டி. அத ஃபாலோ பண்ணுங்க. Smell good.
7. Focus on making money - இத்தன சினிமா, ஸ்போர்ட்ஸுனு பண்ணாலும் அத எப்பிடி ஒரு ரெவன்யூ மாடலாக்கலாங்கற உழைப்பும் போடறாப்டி பாருங்க. Be your own brand.
8. Take care of your family - எங்கல்லாம் வாய்ப்பு கெடைக்குதோ அங்கலாம் எவ்ளோ அதிகமா முடியுதோ அவ்ளோ அதிகமா குடும்பத்தோட இருக்காப்டி பாருங்க. போலவே பொதுவில அவங்கள எவ்ளோ கண்ணியமாவும், அக்கறையாவும், பாசமாவும் பாத்துக்கறார் பாருங்க. Thats a great lesson. (இந்த எடத்துல சொல்லக்கூடாதுதான், இன்னொருத்தன் இப்பிடி குடும்பத்துகூட ஒன்னாப்பொழங்கி கடைசியா எப்ப பாத்தீங்க ஞாபகமிருக்கா? கூத்திய கூட கூப்ட்டு சுத்திட்டிருக்கான்)
9. அந்தாளு திரும்பத் திரும்ப Emotional Intelligentடா இருக்கச் சொல்றாப்டி. கண்ட எடத்துல mobபா கத்திக்கிட்டோ, சோசியல் மீடியால ட்ரெண்ட் பண்ணிக்கிட்டோ, அடுத்தவன திட்டிகிட்டோ இருக்காம தொழிலப் பாருன்னு திரும்பத் திரும்ப சொல்றாப்டி. அதுதான் அந்தாள் சொன்னதுலியே உச்சபட்ச பாராட்டுக்குரியது. ஏன்னா mobபா ஆனாலே அங்க சிந்தனை தடை பட்டுரும், எமோசனலா தான் செயல்படுவான் மனுசன். அது என்ன மாதிரியான தீய விளைவையும் தரும். அதனால குரூப்பிசத்த விட்டுட்டு ஒவ்வொருத்தனும் இண்டிவிஜுவலா உருப்படுங்கன்றாப்டி. பொதுவா அதிகம் பேசாத அந்தாளு அறிக்கை விடுறதுலாம் இப்பிடி எமோஷனலா பண்ற insensitive விசயங்கள கண்டிச்சு தடுக்கத்தான் இருந்துருக்கு. (On the other hand இன்னொருத்தன் எப்பவும் ரசிகர்கள எமோஷனலா தூண்டி விட்டு அதுல குளிர் காஞ்சுட்டு இருக்கான். Filthy creature. ஒரு மாயப் பிம்பத்த காட்டி, மதி மயக்குத்துலயே வச்சிருக்கான். அத அவன் வேணும்னு பண்ணல, அவனுக்கு அறிவே அவ்ளதான்.)
இந்த mob attitudeட ஒடைக்கத்தான் ரசிகர்மன்றம் இன்ன பிற குரூப்புகள ஒடைச்சது. Thats such a brave move. He wants every one to be individualistic and win as an individual.
10. He stays positive. Like Always. இதுக்கு எடுத்துக்காட்டுலாம் சொல்ல வேணாம். ரசிகர்கள் ஒரு டைரக்டர விட்டு வந்துருய்யானு கதறித்துடிச்சும் அதலாம் கண்டுக்காம தான் நினைக்கறத பாசிடிவா யோசிச்சு தொடர்ந்து போயிட்டே இருக்காப்டி. How long can something go wrong? தொடர்ந்த efforts ஒரு எடத்துலயாச்சும் turn எடுக்க வச்சு சாதகமாவும்ல. அதுக்கு பாசிட்டிவிட்டி உதவும்ல? அததான் பண்றாப்ல.
11. He really wants each and every one of his fans to succeed and shine. தல, உங்க கூட ஒரு செல்ஃபி எடுக்கணும்னு கேட்டாலோ, பட அப்டேட் சொல்லுய்யான்னாலோ அந்தாள் கண்டுக்க மாட்டாப்டி. இதுவே, ஒரு path breaking venture ஆரமிச்சு அதுல கொஞ்சம் ஐடியா குடுய்யான்னா கண்டிப்பா he will show up. His traits say so. If you really wanna make him happy or meet him in person, become so big that you need not to introduce yourself when you are meeting him.
12. இத்தன நாள் அப்டேட் அப்டேட்டுன்னு போட்டு தாலியறுத்ததுக்கெல்லாம் வளையாம இப்ப போதும் போதுங்கறளவு சொல்ல நெனைக்கறத தன் ரசிகர்கள் என்ன ஆகணும்னு விரும்பறத ப்ராக்டிகலாவே செஞ்சு காட்டிட்டாப்ல. இனி அத எடுத்துக்கறதும் மிஸ் பண்றதும் ரசிகர்கள்ட்ட இருக்கு.
The ball is in your court now.
===========================
பொங்கும் இன்பம்
கோல்சு:
Comments
Post a Comment
Pass a comment here...