இசை

உங்கள்ல எத்தன பேருக்கு இந்தப் பழக்கவழக்கம் இருக்குன்னு தெரியல. நாம ஒரு பாட்டு கேக்கறப்ப அல்லது மீசிக் கேக்கறப்ப, அது எந்த நாடு, மொழி, வகைமையினதா இருந்தாலும் சரி (மொத வாட்டியா) ஒரு இசைய கேக்கறப்ப ஒவ்வொரு நோட்ஸுலையும் இதுக்கு அடுத்த நோட்ஸ் இப்பிடிப் போகும்னு மனத்தளவுல ஒரு கெஸ்ஸிங் கேம் ஓடிட்டே இருக்கும். அது chordடா இருக்கலாம், அல்லது lead tuneனா இருக்கலாம். இதுக்கு அடுத்த நொட்டேஷன் இப்பிடி இருக்கலாம்னு மைண்டு சொல்லிட்டே இருக்கும். மனசுல நெனச்ச மாதிரியே வந்துட்டா ஒடனே ஜொய்ங்கினு சொங்கிப்போயிரும். ஒரு இசைத்தற்குறி என்னால உன்னோட ட்யூன கெஸ் பண்ண முடியுதுன்னா அது நல்ல இசையே இல்லனு சோர்வாகிரும். இதுவே கண்டுபுடிக்க முடியாத மாதிரி வேற ஒரு சர்ப்ரைஸ் குடுத்தா ஜிவ்வுனு ஏறும். சொல்லப்போனா இப்பிடி சர்ப்ரைஸ் shift overருக்காகவேதான் புதுப்பாட்டுக்கள கேக்கறதாவே இருக்கு. இந்த இசையமைப்பாளர் என்ன சர்ப்ரைச ஒளிச்சு வச்சிருக்காப்டி பாப்போம்னு அத கேக்கறதே ஓர் அலாதி இன்பம். 


----


ரைம்சுகளுக்கு பொதுவா ஒரு ட்யூனு இருக்கும். பல பேர் மனப்பாட செய்யுளுக்கு பாட்டோட சுதில பாடி மகப் அடிப்பாங்க. நமக்கு வினோதமா பாட்டு ட்யூன்ல ரைம்சு பாடுறது ஒட்டிகிச்சு. அடிக்கடி குளிக்கிறப்ப இந்த ரைம்சதான் பாடுறது. Find if you can match தத்தகாரம். 


வா வா வசந்தமே
Baa baa black sheep,

சுகம் தரும் சுகந்தமே Have you any wool? wool?
வா வா வசந்தமே
Baa baa black sheep,

சுகம் தரும் சுகந்தமே Have you any wool? wool?


Yes sir, yes sir,
தெருவெங்கும்
Three bags full.
ஒளி விழா One for the master,
தீபங்களின்

one for the boy
திரு விழா
Who lives down the lane.
என்னோடு ஆனந்தம் பாட


வா வா வசந்தமே
Baa baa black sheep,

சுகம் தரும் சுகந்தமே Have you any wool? wool?


-

பாடல் வரிகள். சிறு குறிப்பு. 


ஆதிகாலத்துல பாடல்கள் பாடல்களா இருந்தப்ப எழுதப்பட்ட பாடல்கள்ல இன்னும் ஆதிக்கே போயி சங்க இலக்கியத்துலருந்துலாம் வரிகளையோ ஐடியாக்களையோ உருவி பாடல் நெய்துட்டிருந்தாங்க. இப்ப அது என்னாகிருக்குன்னு போக விரும்பல. சொசையிட்டியோட கலக்டிவ் கான்சியசுக்குத்தான் எல்லாம் கெடைக்கும். இவனுகளுக்கு இதுவே சாஸ்தின்னுதான் தோணுது.

குறுந்தொகைல ஒரு பாட்டுல "நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே"னு ஒரு வரியுண்டு. தமிழ்ப்பாட்டுக்கு அட்சரசுத்தமா (அதுவும் ஹாரிஸ் பாட்டுக்கு) உக்காரக்கூடிய வரி. பாப்போம் யாரு மொதல்ல யூஸ் பண்ணிக்கறாங்கன்னு. யுகபாரதியா இருக்கலாம். அவர்தான் இன்னம் சங்க இலக்கியத்த அப்பப்பயாவது தொடுறாப்டி. 

வாலியாருந்தா அத இன்னேரம் காதலன் மேல கோவமாருக்க காதலி இனி ஆண்களே வேணாம்னு "No Men நெஞ்சே No men நெஞ்சே"னு பாடிருப்பாப்டி. அல்லது இக்குறுந்தொடைக்குக் குறுந்தொகைப் போதாதுன்னாச்சும் எழுதிருப்பாப்டி. ப்ச் என்ன செய்றது, செத்துட்டாப்டி. 

7ஜி பார்ட் டூ வரதா ஒரு விளம்பரம் கண்ல பட்டுச்சு. அதுலயும் ஜனவரி மாதம் டைப்ல ஒரு பாட்டு இருந்தா "எரிகிற நெருப்பில் உன்னை ஊற்று"ன்னு ஒரு வரியப்போடலாம். Intense செக்சுவல் டென்சனுக்கு ஏற்ப அமையும். ஏப்பா அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ்....


-----

இரண்டாயிரத்தில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப்பாடலில் வந்த rhythm. எதுவென்று கண்டுபிடிப்போர்க்கு தேவி சரோஜாவின் சோப் டப்.  





-----




-


-

Winter is came. 

இனிய விண்ட்டர் இன்பமாய் பரவ ஆரம்பிச்சிருக்கு. பொதுவா இந்த டைம்ல அயலகங்களுக்கு தாவிடுறதால முழுசா அனுபவிச்சதில்ல. ஆகவே இந்த முறை இருந்து பாக்கனும்னு இருக்கு. வீட்டு ஹீட்டருகள லோயஸ்ட்டு பாய்ண்ட்டுல வச்சு எப்புடிதான் இருக்கு குளுருனு பாத்ததுல, ஒடம்பெல்லாம் ஜண்டு பாம், டைகர் பாம், அம்ருதாஞ்சன் மூனையும் ஒன்னாக்கலக்கி ஒடம்பு பூராம் பூசிட்டு நடந்தா ஒரு கங்கனல் தெறிக்கும்ல ஒடம்புல. அந்த மாதிரி இருக்குது. அத குளுர்னே சொல்ல முடியாது. தீ மாதிரி சுடுது அந்தக் குளிர். ஒடம்புக்கு நல்லதா கெட்டதானு தெரியல. ஆனா ஒரு புது வித அனுபவத்துக்காக ரெண்டொரு முறை இப்பிடி இருந்து பாக்கலாம். ஜில் தண்ணில குளிக்கிற தைரியந்தான் இன்னம் வரவே மாட்டுது. அது மட்டும் வந்து பழகிருச்சுன்னா சின்ராச கைலியே புடிக்க முடியாது.    

Comments