ப்லாக்கர்

 இங்க blokkerனு ஒரு ரீடைல் திவாலாகிருச்சு. அதனால எஞ்சியிருக்க சாமானுகள 40-50% தள்ளுபடி போட்டு தள்ளிவிடுறானுக. டிஸ்கௌண்ட் போட்டதுதான் தாமதம் கூடிக்குமிஞ்சிட்டானுக. இந்தூர்க்காரனுகளுக்கு ரத்தத்துலயே ஒரு விசியம் இருக்கு. அது எந்த பொருள வாங்குனாலும் அத தள்ளுபடியில வாங்குனாத்தான் திருப்தியே இவனுகளுக்கு. எந்த பொருளையும் ச்சீப்பா வாங்கிட்டேன்னு சொல்றதுல ஒரு பெருமிதம். இந்தக்கடையில சேல் போட்டதும் முடிஞ்ச மட்டும் கைநெறய அள்ளிட்டுப் போறப்ப அவனுக கண்ணுல தெரிஞ்ச தேஜஸ்ஸ பாக்கணுமே. ஏந்தான் இப்பிடி இருக்கானுகனு தெரியல. இதுல வாங்கற அவசரத்துல கூட்டத்துல ஒருத்தன் கால வேற மிதிச்சிட்டான் பிக்காலி.



-----

நாம சூத்தரத்த சொல்லச் சொல்ல அது அப்பிடியே appபா மாறினா எப்பிடி இருக்கும்னு ஒரு காலத்துல மேனிஃபெஸ்ட் பண்ணது இப்ப ரியலாகிடுச்சு.  நமக்கு வேண்டிய ஆப்போட ஐடியாவ மட்டும் சொன்னாப்போதும், கோடு, டிசைனுன்னு எல்லாத்தையும் அதுவே பண்ணிருது. சப்போஸ் எதும் மாற்றம் வேணும்னா அதச் சொன்னாலும் திருகிக்குடுக்குது. எங்கிட்ட ஐடியா மட்டுந்தான் இருக்கு, அத ஆப்பாக்க ஆட்கள் சிக்கலன்றவங்க இத யூஸ் பண்ணிக்கவும்:



------


இந்தம்மா ஒலிம்பிக்குல நாட்டுக்காக பதக்கம் வாங்கிட்டு வந்துருக்கு. ஆனா அதோட போஸ்ட்டுல போயி இந்த வேல பண்ணி வச்சிருக்கானுக நாவல் வெறியர்கள். இப்பிடித்தான் ஐயேயெஸுக்கு பயிற்சி குடுக்குற தனுசெயினுக்கும் பண்ணி வச்சிருந்தானுக படுபாவிக. வரவர நாடு முழுக்க இந்த நாவல் வெறியர்களோட கொட்டம் அதிகமாயிட்டே போவுது. ச்சை.



-

miss this Malavika so very much and such mellifluous melodies! 





வாழ்க்கைக்கல்வி!






Comments

  1. Replies
    1. நாளை காலை நேரில் வருவாளா from உன்னைத் தேடி.

      Delete

Post a Comment

Pass a comment here...