எல்லாம் நேரம்



Daylightsavingsசுங்குற வஸ்து நெறய பேருக்கு தெரிஞ்சிருக்கும். ஐடியின் தயவால் இப்ப பரவலா தெரிஞ்சிருக்கு. பகல் வெளிச்சத்த யூஸ் பண்ணிக்கனும்னு ஒன்னு ஒன்னர மணி நேரம் கூட்டியோ கொறச்சோ வெச்சிக்கிடுவாங்க சிலபல நாடுகள்ல. வருசத்துக்கு ரெண்டு வாட்டி நடக்கும். நேரம் முன்னுக்கயோ பின்னுக்கயோ மாத்தப்படுற அந்த ஒரு வாரத்துல மக்களோட ருடீன் கொஞ்சம் பாதிக்குது, உளவியல் ரீதியாவும் பிரச்சனையாவுதுனு பலப்பல விவாதங்கள் நடந்துட்டு இருக்கு. இந்த DLSசையே முற்றா நீக்கிடனும்னும் குரல்கள் உண்டு. நமக்கும் இப்பிடி வருசத்துக்கு ரெண்டுவாட்டி நொண்டிக்கால் ஆடுறத விட்டுட்டு ஒரு லெக்குல ஒரே நேரத்த பாலோ பண்ணித் தொலைங்களேண்டானு தான் தோணுது (கரெக்டா DLS அப்ப டைம்ஸோன் தொடர்பான இஷூசும் வந்து அப்லிகேசன்ல வந்து பக்கு, ஃபிக்சிங்குன்னு தாலியக்கும்). 

டேலைட் சேவிங் ஒரு மணி நேரம் பின்னோக்கி வெக்கிறப்ப ஒரு மணி நேரம் எஸ்ட்டாவா தூங்க முடியும். முன்னோக்கி நவுத்துறப்ப ஒரு மணி நேரத் தூக்கம் கட்டு. ஆனா நமக்கு ஓடுறது பயோ க்லாக்குங்கறதால இந்த முன் பின் திருகல் பெருசா எந்த பயனும் அளிக்காது. ஆனா ஒன்னு மட்டும் கவனிச்சேன், டயத்த பின்னோக்கி திருகுற அன்னைக்கு எதோ நாள் கொஞ்சம் நீளமா சுலோவா போறாப்ல தோணுச்சு. ரெண்டொரு வருச டேட்டாதான் இருக்குன்றதால இத அடுத்து வர வருசங்கள்ல பாத்து எப்பிடினு கவனிக்கணும்.

நேரம்ங்குறது என்னங்குறது குறித்து(ம் கிராவிட்டிய குறித்தும்) தான் நாம அதிகமா யோசிக்கிறது. நேரங்கெடைக்குறப்பலாம் gravity of the situationனப் பொறுத்து அதப்பத்தி சிந்திச்சிட்டே இருக்கறதுண்டு. 

ஒரு அன்பாப்புலர் ஒபீனியன்: நேரங்குறத நாம தப்பா புரிஞ்சி வச்சிருக்கோம்னு நமக்கு ஒரு தியரி உண்டு (தப்பாக்கூட இருக்கலாம்). அதாவது வாட்சில நாம பாக்கற நேரமும், ஐன்ஸ்டைன் சொல்ற ஸ்பேஸ்/டைமும். வாட்சில நாம பாக்கறது அடி ஸ்கேலால நீள அகலத்த அளக்குறாப்ல வாட்சுகளும் "gap"புகள அளக்குது.

கிராவிட்டி அதிகமா இருக்கற எடத்துல நேரம் சுலோவா ஓடுறது (அதாவது வாட்ச்சு சுலோவா ஓடுறது, வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதுல இருக்க வாட்சு சுலோவ ஓடுறது - இதுல நமக்கு ஒரு ஐயம் உண்டு. வேகம் அதிகரிக்கிறப்ப வாட்ச்சு சுலோவா ஓடுதுன்னா அது அந்த மிசின்ல ஏற்படுற மாற்றம். அது சுலோவா ஓடுதுங்கறதுக்காக "நேர"மே மெதுவாகுதுனு சொல்றத ஏத்துக்க முடியல. 

வாட்ச்சிங்கறது என்ன, அது ஒரு மோட்டர் (அல்லது க்வார்ட்ஸ் கல்லு, ஒரு அதிர்வெண்ணுல அதிருந்துட்டே இருக்கும், அசைவிருக்கதால அதையும் மோட்டரா பாக்கறேன்). அது வேகமா ஓடுறதாலயோ சுலோவா அதிருதுங்கறதாலயோ "நேர"த்த எப்பிடி வளையுது நெளியுதுனு சொல்ல முடியும்? இந்தக் கேள்வி தொளைச்சுட்டே இருக்கு. விடையவும் தேடிட்டே இருக்கேன். இன்னம் கன்வின்ஸ் ஆகல. 

இரும்புக்கம்பிய சூடு பண்ணா அது விரிவாகும், தண்ணிய அதீதமா குளிர வச்சா ஐசாகும்ல, இப்ப இத வச்சு நேரம் உறைந்ததுனு சொல்ல முடியாதுல்ல. அதே தான் இந்த வாட்ச்சுல உள்ள க்வார்ட்ஸோட அதிர்வு மாற்றத்த வச்சு நேரமே குறையுதுனு சொல்றதும். 

நான் சொல்ல வரத சரியா புரியறாப்ல சொல்றனானு தெரியல. நமக்கிருக்க கொழப்பத்த தெளிவா புரிய வெக்கணும்னு நெனைக்கிறேன். நேரம்ங்குறது நாம வாட்சால உணர முடியாதுங்கறேன். வாட்சுங்கறது நம்ம வசதிக்கு ஏற்படுத்திக்கிட்ட ஒரு measuring scale. அத வச்சு real "நேர"த்த அளக்கவோ உணரவோ முடியாது. How many of you are with me?

ஒரு வண்டி வேகத்த அதிகரிச்சுட்டே போகுதுன்னா, அதுலருக்க வாட்ச்சோட ஓட்டம் மெதுவாகிட்டே போகும்னு சைன்ஸ் சொல்லுது. இத ஏத்துக்கறேன். ஆனா அப்பிடி வாட்ச் மெதுவா போகுறதுக்கு காரணம் அந்த வாட்ச்சில உள்ள பருப்பொருள்ல ஏற்படுற மாற்றம். அத நேரத்தோட குறுக்கமா சொல்லாதங்குறேன். இதே மாதிரி வேகம் கூடக்கூட வேகமாப்போற வண்டியின் நிறையும் கூடும் (அதோட பருமனும் குறுகும்)னு சைன்ஸ் சொல்லுது. இப்ப வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஸ்பேஸ் குறுகுதுனு சொல்ல மாட்றோம்ல? அது எப்பிடி நிறை கூடினா மட்டும் அது அந்தப் பொருளுக்கானது வாட்ச்சி சுலோவா ஓடுனா அது "நேரத்துக்கே" உரித்தானது? இதென்ன போங்காட்டம்?

-

முந்திலாம் மக்கள் கடிகாரத்துல பத்து, பாஞ்சு நிமிசம் கூட்டி வச்சிருப்பாங்க. ஸ்கூல் காலேஜ் வேலைக்கி சரியான நேரத்துல போகனும்னு. இப்பல்லாம் எலக்ட்ரானிக் யுகத்துல அது வழக்கொழிஞ்சு போச்சு. எல்லாமே சிங்க்ல இருக்கதால இந்த அஞ்சு பத்து நிமிசம் கூட்டி வெக்கிறது கிட்டத்தட்ட இயலாத காரியமாவே ஆகிருச்சு. நானும் மொபைல்லயும் லேப்டாப்புலயும் அப்பிடி மாத்த முடியுமானு பாத்தேன். கெட்ட வார்த்தைய ரெட் கலர் பேனர்ல சொல்லிக்காட்டுது. 


இப்பிடி பத்து நிமிசம் கூட்டி வெக்கிறவங்க (வெச்சவங்க) ஆச்சரியப் படுத்தறாங்க. See, timeன்றது ஒரு குறியீடு, ஒரு சிக்னல், அவ்ளவுதான? ஏழு மணிக்கி எந்திரிச்சு கெளம்பினா லேட்டாகிரும்னு ஒரு பத்து நிமிசம் கூட்டி வெக்கிறாங்கனு வைங்க, So, அவங்க ஆக்ச்சுவலா ஆறம்பதுக்கே எழுந்து வேலைகள முடிச்சு சரியான நேரத்துக்கு கெளம்ப முடியும். அப்பிடி ஆறம்பதுக்கு எழ முடியும்னா, பத்து நிமிசத்த கூட்டாம சரியான டைம் வச்சு ஆறம்பதுக்கே எந்திரிக்கிறதுல என்ன இருக்குனு புரியல. இதுல எதோ ஒரு OCD உளவியல் இருக்கறதா பாக்கறேன். 

எந்திரிக்கிறது ரௌண்ட் டைம்ல தான் எந்திரிப்பேங்குறாப்ல எதோ இருக்கும் போல. டிவி ரிமோட்ல வால்யூம் வெக்கிறப்ப even numbersலதான் வெப்பாங்க பெரும்பாலும்னு ஒரு ஸ்டடி இருக்குல்ல, அது மாதிரி. 

அப்போலாம் ஒரு அலாரம் தான் இருக்கும், அல்லது அடிக்கும். அடிச்சதும் பொச்சுல வெயிலடிச்சாப்ல பளிச்சுனு எந்திரிச்சு ஓடுவோம். இப்ப ஒம்பத்துநாலாயிரம் அலாரம் வந்ததும் சொகுசுக்குண்டில இழுத்துப்போத்திட்டு தூங்கத்தான் சொல்லுது. இந்த எண்ணற்ற அலாரம் ஆப்சன் வந்து நம்மள இன்னம் சோம்பேறியாத்தான் ஆக்கிருக்குனு தோணுது. ஆறம்பதுக்கும் ஏழு பத்துக்கும் நடுவுல எம்பதிணாயிரம் அலாரம் வச்சு அமத்தி அமத்தி தூங்கி வழியிற சைக்கோட்ஸ் அதிகரிச்சிட்டாங்க. 

இதே மாதிரி அந்தக்காலத்துலயும் ஒரு வகை இருந்துச்சு. அவிங்களுக்கு ஆங்க்ஸைட்டி இருந்தாத்தான் வேலையே நடக்கும். அதனால டைம லேட்டா திருக்கி வெச்சிருவானுக. ஏழு மணினு காட்டுச்சுன்னா மணி ஏழே கால்னு அர்த்தம், கண்ணு முழிச்சு டைம் பாத்ததும் பதறித்துடிச்சு கெளம்புனாத்தான் கெளம்பினாப்ல இருக்கும் அவிங்களுக்கு.

நார்வேல ஒரு இஸ்லேண்ட் இருக்கறதா இன்ஸ்டால ரீல்ஸ் வந்துச்சு. அந்த ஊர்ல டைமுங்கற கான்சப்ட்டே இல்ல, வாட்ச்சி பாக்காம வாழ்க்கை வாழற ஒரு செட்டப்புன்னு. இதக்கேட்டதும் அங்க போயி பாக்கணும்னு பேரார்வம் வந்துருச்சு. சும்மாவாச்சும் ஒரு ஒரு வாரம் பத்து நாள் நாப்பது மாசம் இருந்து பாத்துட்டு வரணும். டைமுங்குற ஒரு கான்சப்ட் இல்லன்னா நாம சிந்தனை, உடல் எப்பிடி மாறுது என்ன செய்யுதுங்கறத பரிசோதிக்கவாச்சும் போகலாம்னு பாத்தா நார்வேசுவீடன் கூட்டிட்டுப் போக ஒரு...இல்லியே...



Comments