இங்க சீச சீசனுக்கும் ஒரு வெரைட்டி உடுத்துறானுக. சம்மருக்கு ஒன்னு, விண்டருக்கு இன்னொன்னு, ஆட்டத்துக்கொன்னு பாட்டத்துக்கொன்னுன்னு. டிரெஸ்ல மட்டுமில்லாம, சூவு, அவ்ளோ ஏன், செண்ட்டு வரைக்குமே இன்னின்னத இந்த சீசனுக்குத் தான் போடனும்னு வச்சிருக்கானுக. நமக்கெல்லாம் ஆம்பள செண்ட்டு பொம்பள செண்ட்டுன்னு பாகம் பிரிஞ்சிருந்தத பாத்த அதிர்ச்சியே இன்னம் மீளல. வாசத்துல என்னடா ஆம்பள வாசம் பொம்பள வாசம்? மரிக்கொழுந்து செண்ட்ட பூசிக்கிறதுலாம் என்ன நமக்கு புதுசானு தோணும். ஆனா அப்பிடிலாம் செஞ்சாத்தான் சோறுன்னுட்டதால ஃபாலோயிங் சுயீட். நம்மூர்ல வருசம் பூரா ஒத்த வெள்ளச்சட்டையவே போட்டுட்டு சுத்தற சகஜ வசதிகள் இங்க இல்ல. They dress up, for every occasion. ஒழுங்கா டிரெஸ் பண்ணலன்னா அத ஒரு மாதிரி ரூடா அல்லது இன்சல்ட்டா பாக்கறானுக. எங்களுக்கு அவ்ளதான் மதிப்பா, எங்களுக்காக எஃபர்ட் எடுத்து இது கூட பண்ண மாட்டியான்ற நிலைப்பாடு நிலவுது. நமக்கு அது ஒருவகையில திறப்பு. பேரறிஞர் அண்ணா மாதிரி கசங்குன, அழுக்குச்சட்டை போட்டுட்டு அதுதான் OGனுலாம் நூலோட்ட முடியல. (அதுக்கு நாம பேரறிஞர் அண்ணாவா இருக்கனுங்கறதும் மறுக்கறதுக்கில்ல).
இவனுக ஒரு சீசனுக்கு யூஸ் பண்ணிட்டு வேணாம்னா அத செகண்ட் மார்க்கெட்ல வித்துடுறானுக. அதுவே இங்க ஒரு பெரிய பிசினஸ் மாடலா இருக்கு. மார்க்கெட்ப்லேஸ் ஆப்கள்லருந்து செகண்ட்ஸ் மட்டுமே விக்கக்கூடிய பெரிய கடைகளே இருக்குது. Preowned ஐட்டங்கள வாங்கறதுல இவங்களுக்கு தயக்கமில்ல, in fact அத விரும்பிச் செய்யறானுக. சல்லிசு ரேட்டுல வாங்கினாத்தான் டச்சுக்காரனுக்கு திருப்தி வருங்கறது புழக்கத்தில இருக்க சொலவடை.
இந்த ப்ரீயூஸ்டு நம்மூர்ல வரதுல சில சிக்கல் இருக்கு. அதுல முக்கிய சிக்கல் இத விக்கிறவங்க என்ன ஆளுங்கனு ஒரு கேள்வி தொக்கி நிக்கிம். அது நிக்கிற வரைக்கிம் கோமியக்குடிக்கிகளாலதான் ஆளப்பெறும்.
()()()()()()()()
--------------------------------------====================--------------------------------------
Comments
Post a Comment
Pass a comment here...