அசஞ்சிகை22

 இங்கருக்க குளுர் வேற ஒரு டைப். ஊட்டி கொடைக்கானல்லாம் ஒரு வகைக்குளிர். ஜியாக்ரபில அதுக்கு டெக்னிகல் விளக்கம் நெறய இருக்கலாம். ஆனா ஒடம்பால அந்த வித்தியாசத்த நம்மனால துல்லியமா உணர முடியும். 

இங்க குளிர் பிரச்சினையில்ல, அதோட சேந்து ஒரு காத்தடிக்கும். காத்து மேல, காத்து கீழ, காத்து வாயில, காத்து வயித்துல. கழனிகள்ல வரப்பு வெட்டிருப்பாங்கல்ல, அதுல தண்ணி அதிக ஃபோர்சும் இல்லாம, தேமேன்னும் இல்லாம ஒரு மாதிரி சீரா போய்ட்டே இருக்கும்ல, அப்பிடி டென்சிட்டியோட காத்து அடிச்ச மேனிக்கி இருக்கும். 

இந்தக் குளிர நம்ம தோல் உணர்றத விட எலும்புல பட்டுத்தெறிக்கும். ஊசி எறங்குறாப்ல எலும்பு வரைக்கும் தெரியும் குளிர். இதோட ஒப்பிட்டா ஊட்டிகொடைக்கானல் வகைமை பாந்தமானது. 

ஒரு சர்ரியல் ஃபீல் பண்ணனும்னா இங்கருக்க செண்ட்ரம்ல அத்தன மக்கள் கூட்டத்துல, இந்தக் குளிர்ல கடந்து போறப்ப, சுத்தி இருக்க பளிச் பளிச் கடைகண்ணிகள், மற்றும் கண்ணைப்பறிக்கும் நிறங்கள்ல உடையணிஞ்சிருக்க மக்கள் மத்தியில, ஒவ்வொருத்தர கடக்குறப்பவும் மெலிதா அணைந்து போற பெர்ஃப்யூம் வாசம், சுத்திலும் குளிர், இந்த ஆம்பியன்சுல காதுல மாட்டிருக்க ஹெட்போன்ல (இயர்போன் அல்ல, ஹெட்போன்) ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் மெலடி மியூசிக்க கேக்கறப்ப ஒரு ஜிவ் தோணும். அதுக்குப்பேர்தான் eargasm. ஒவ்வொரு தடவையும் தவறினதே இல்ல இவ்வுணர்வு.


------------

Whenever I think I shouldn't be so hard on people, le mind:



=========================================================================

life, basically...



----

Oddly satisfying. இதுல இருக்குற dankness, அதுகள சுட முன்ன ஒரு சத்தம் எழுப்பி அதுக அட்டென்சன இழுத்து ஆடாம அசையாம நின்னதும் போடுறது. Weirdly funny though. 




பின்னிரவுகள்ல மணிக்கணக்கா பாத்துட்டு கெடக்கறது. இதெல்லாம் பாத்தா பளிச்சுனு தூக்கம் போயிருது. எஸ்ராவோட இலக்கியப் பேச்சுகள கேட்ட லல்லபியாட்டம் பொசுக்குன்னு கண்ணு சொக்கிருது. 



ஒருநாள் இப்பிடி அனிமல் ஹண்ட்டிங் போவணும். 


-=======================-

கண்ல ஒத்திக்கிறாப்ல calligraphy எழுத்து!






Comments