சில பேருக்கு பஸ்சுல கண்டக்டர்ட்ட பாக்கி சில்லறைய வாங்கவே கூச்சமாருக்கும், அவிங்களக்கூட இண்ட்ரோவர்ட்டுனு ஆங்கிலத்துலயும் லூசுக்கூதிகனு தூய தமிழ்லயும் குறிப்பிடுவாங்க கேள்விப்பட்டிருப்பீங்க.
பெங்களூர்ல இன்னொரு வகை திருட்டு நடக்கும். டிக்கட்டு எட்டு ஒம்பது ருவ்வாயாருக்கும். நாம பத்து ருவ்வா குடுத்தா டிக்கட் குடுக்காம, திரும்ப பாக்கி அஞ்சு ருவ்வா காயின கையில அமுக்கி கண்ணு வேற அடிப்பானுக, சேலம் பஸ்டாண்டு கே- வெறியர்களாட்டம்.
அப்பிடினா டிக்கட்ட விட கம்மியாதான் காசெடுத்துருக்கேன், இந்த டீலிங்ல நாம பார்ட்னர்னு அர்த்தமாம். இதுல என்ன கூத்துன்னா செக்கிங் வந்து மாட்டுனா அவன் தொலஞ்சான். செக்கர் கிட்ட ஃபைன் கட்டி அழுவனும். அப்ப கண்டக்டர் அவனுக்கும் அந்த பஸ்ஸுக்குமே சம்மந்தமில்லாதமாதிரி இருந்துக்குவான். ஒருக்கா இப்பிடி ஒரு பரிதாபி அகரால மாட்டுனான் பாவம். காலைல வேலைக்கிப்போறப்ப இப்பிடி விடிஞ்சிருக்கு அவனுக்கு. இதுவுமில்லாம பொதுவா பெங்களூரு கண்டக்டருக பாக்கி சில்லறைய தரதே இல்லங்குற குத்தச்சாட்டே இருவது வருடங்களுக்கும் மேலாக உலாவி வருது.
இப்பிடிப்பட்ட கள்ளக்கண்டக்டருக மத்தியில இண்ட்ரோவர்டா தினம் பொழப்பு நடத்துறது எவ்ளோ கஸ்டம் பாத்துக்கிடுங்க. இதுக்குத்தான் ஆனது ஆச்சுன்னு பிரைவேட் பஸ் அல்லது வேன்கள்லியே போயிர்றது. யார் கண்ணையும் பாக்காம, யார்ட்டயும் பேச்சுவார்த்தைகள் இல்லாம ஏறுனமா எறங்குனமானு ஸ்டெல்த்தா இருந்துக்கிடுறதுதான் பலருக்கு வசதி. பலரெனப்படுவது நம்மைக் குறிக்குமாகும்.
இப்பிடி கூச்ச சுபாவமுள்ள ஒருத்தனால ஐரோப்பிய பொதுப்போக்குவரத்த பழகுறது கொஞ்சம் ஆரம்ப கட்ட கலாச்சார திடுக்கா இருந்துது. இங்கருக்க பஸ்ஸுகள்ல கண்டக்டர் கெடயாது. டிரைவர் மட்டுந்தான். ஸ்மார்ட் காட தேச்சு நாமளே ஏறிக்கனும். நம்ம ஸ்டாப் வரப்போகுதுன்னா ஸ்டாப் பட்டன அமுக்கனும். எறங்குறப்ப கார்ட மறக்காம மறுக்கா தேய்க்கனும். இல்லன்னா இருவது யூரோ அஜக்த்தாவாகிடும்.
முதலுலக நாட்டின் நன்மைகள்ல ஒன்னுன்னா, நாம எறங்கனும்னா கண்டக்டர்ட்டயோ டிரைவர்ட்டயோ கேக்க வேண்டியதில்ல, வண்டிய நிப்பாட்ட சொல்லி பேச்சுப்பயிற்சியும் செய்யவேண்டியதில்ல. டிவி ஸ்க்ரீன்ல ஸ்டாப்ப பாத்தமா, ஸ்டாப்பு வரமுன்ன ஸ்டாப் பட்டன அமுக்குனமானு இருக்கலாம்.
சேலஞ் இதுல இல்ல. இங்க வண்டி ஏறுறப்பவும் எறங்குறப்பவும் டிரைவருக்கு சலாம் போடனும். அத ஒரு கலாச்சாரமாவே வச்சிருக்கானுக. ஏறுறப்ப மூஞ்சி முழுக்க பல்லக்காட்டிட்டே குட்-மார்கன்/மிடாஃக் - அந்தந்த நேரத்த பொறுத்து சொல்லணும். அல்லது ஹாய் ஹலோவாச்சும். வாயத் தொறந்து பேசியே ஆவனும். அதே மாதிரி எறங்குறப்ப பாய், அல்லது தாங்க்யூ, கைய வேற இட்லராட்டம் மேல நீட்டி சொல்லனும்.
எறங்குறப்ப நாம பின் கதவு வழியாதான் எறங்குவோம், அதனால தன் முன் கண்ணாடி வழியா நம்மள டிரைவர் பாத்துட்டே இருப்பாப்டி. அதுவே குறுகுறுனு இருக்கும்.
ஹாய்ஹலோ சொல்லாம ஏறலாமே, அதே மாதிரி ஸ்டாப் வந்ததும் திடுத்திடுனு பேச்மூச்சில்லாம எறங்கிப்போயிறலாமேனு சிலர் நெனைக்கலாம். அப்பிடி செய்யலாம்தான். ஆனா நம்மள ரூடுனு சொல்லிருவானுக. வடக்கனுக லிஸ்ட்டுல சேத்துருவானுக. ஆகவே நமக்கு புடிக்கிதோ இல்லியோ, நாம இண்ட்ரோவர்ட்டோ பருவர்ட்டோ, அவங்கட்ட இன்முகத்தோட இருந்தே ஆவனும்.
ஆரம்பத்துல இது ரொம்ப கஷ்டமாவும் (கூச்சமாவும்) இருந்துது. பஸ்ல ஏறுறப்ப கூட பிரச்சன இல்ல, கிட்டக்க பாக்கறதால மெல்லிசா ஹலோ சொல்லிரலாம். எறங்குறப்ப ஊரே இருக்கும். எல்லாவனும் பாக்க அந்த சர்க்கஸ செஞ்சுட்டு போக வேண்டி இருக்கும். மொதல்ல இத ஒரு வலுக்கட்டாய ரிச்சுவலா ஆரமிச்சாலும் நாளடைவில ஒருத்தருக்கொருத்தர் கைண்டா இருக்கறதுல என்ன தப்பு, அது ஒரு அனுசரணைதானனு தோணி இப்பல்லாம் அது ஒரு நற்பண்பா ஒட்டிகிச்சு. அதுக்கு எந்த எஃபர்ட்டும் இல்லாம ரிஃப்லெக்ஸ் ஆக்சன்ல உண்டாகிட்டு.
இதே மாதிரி எதிர்ல வரவங்க எல்லாருமே நம்மள பாத்து புன் சிரிப்பாங்க, ஒரு ஹலோவும் சில நேரத்துல தொணைக்கி கெடைக்கும். நம்மள மாதிரி சைக்கோஸ் தான் இறுகின மூஞ்சியோடயோ அல்லது மூஞ்ச திருப்பிட்டோ போறது.
ஆரம்பத்துல இதுவும் கஸ்டமா இருந்துது. அது.எப்பிடி தெரியாதவங்களப்பாத்து பல்லக்காட்றதுன்னு. ஆனா நாள் போகப்போக அதுவும் பழகிருச்சு. இன்ஃபாக்ட் காலங்காத்தால ஆபிஸ் கெளம்பிப் போறப்ப யார்னே தெரியாதவங்க சிந்துற அந்த அரை நொடி நேசப்புன்னகை ஒரு மாதிரி பாசிட்டிவிட்டிய குடுக்கும். இதுக்குப் பழகிட்டு வேற ஒரு வெளிநாட்டுக்கு போறப்ப எதிர்ல வரவங்கட்டலாம் புன்முறுவுனா வினோதமா பாக்கறானுக. அந்த நாடு ரிசர்வுடு நாடாம். அங்க இது வழக்கமில்லையாம். அட மூஞ்சி செத்த சைக்கோக்களானு தோணுச்சு.
நம்மளையும் மொதமொத இப்பிடித்தான நெனச்சிருப்பானுக இவனுக.
======
take home home work
-------0-0-0-0-0-----------
ஹாண்கள் இப்பிடி சூக்கிழிய டெக் வ்லாக் போட்டுக்கொண்டிருக்க, இதோ இந்த கீழ விழுந்த கர்ச்சீப்ப இடுப்புல சொருவுறேன் பாருங்க ப்ரென்ச்சுன்னுட்டு சுளுவா அள்ளிட்டு போயிடுதுக ஆண்ட்டீசு.
Comments
Post a Comment
Pass a comment here...