திடீர்னு keykeyனு ஒரு சத்தம். எங்கருந்துனு பாத்தா வாச்சிலேந்து வருது. ஒரு ஓசி வாச்சி ஒன்னு பரிசா வந்துச்சு. சுமார்ட் வாட்ச். அது டிசைன் பாக்க மினிமலிஸ்டிக்கா பளபளானு இருக்கவும் டெய்லி நடக்கிறதலாம் கூட்டி சொல்லும்னதும் சரின்னு நன்றியோட வாங்கிக்கிட்டேன்.
நம்ம நட்பு ஒருவருக்கும் நமக்கும் வாச்சி பரிசுச்சண்ட ஒன்னு பத்தாண்டுக்கு முன்ன நடந்துது. அப்ப விட்டது வாட்ச் கட்றத. அதுக்கப்பறம் வாட்சியே கட்றதில்ல. அந்த நட்பும் அத்தோட போயி. ஆள் அட்ரஸ் மறஞ்ஞு. போதாக்கொறைக்கி மொபைல்லியே மணிக்கூண்டு வரை வந்துட்டதால, மணி பார்க்காமல் வேலை பார்க்கும் உனக்கு மணிக்கட்டில் மணி எதற்குன்னு விரதமிருந்தாச்சு.
பிற்காலத்துல படிப்பினைகள், சூழ்நிலைகள், அறிவுகள் மாறுறப்ப நாமளும் எவால்வாவோம்லியா? அப்படி மறுக்கா கட்ட ஆரமிச்சு ஒரு வருசமாச்சு. ஏன் எவால்வானோங்குறது ஒரு இண்டரஸ்டிங் கத. பிற்பாடு சொல்றேன். சொந்தமா காசு போட்டு வாங்குன முள்ளு வாட்ச்சி இருக்கப்ப இது பரிசா வந்ததும் இதையும் சேத்துக்கிட்டாச்சு. அந்த முள்ளு வாச்சில உள்ளக்க மூனு முட்ட இருந்து அது தனியா எதோ நம்பர்லாம் குட்டி குட்டி முள்ளுல காட்டும். அதெல்லாம் என்ன கருமம்னு இப்ப வரை தெரியாது.
இந்த ஸ்மார்ட் வாட்ச்ச ஒன்னு அல்லது ரெண்டு வாரத்துக்கொருக்கா சார்ஜ் போட வேண்டி இருக்கு. இல்லன்னா முச்சூடும் மவுத்தாப்போயி எதோ கைல கரும்பச்ச குத்துனாப்புல ஆகிருது. அது மட்டுமில்லாம கைய மூஞ்சிக்கி நேரா கொணாந்தாத்தான் நேரங்காட்டுது. கொஞ்சம் அப்பிடி இப்பிடி திருப்பினாலும் போச்சு. என்ன டெக்னாலஜியோ.
இப்ப உள்ள கிட்சுக்கு இப்பிடி வாரத்துக்கொருக்கா சார்ஜ் போடுற வாச்சிதான் தெரியும். இதுக்கு முன்ன உள்ள ஜெனரேசன்ல பேட்டிரி செல்லுல ஓடுற வாட்சுகள் இருந்துது. நாலணா சைசுல (ஆமா நாலணானும் ஒரு ணா இருந்துது முன்ன). அந்த செல்லப்போட்டா ரெண்டு மூனு வருசத்துக்கு தொந்தரவில்லாம அது பாட்டுக்கு கெடக்கும்.
அதுக்கும் முன்ன சாவி குடுக்கற வாட்ச்சுக இருந்துது. வாட்சோட காத (சாவிய) திருகினா மூனு வாரம் போல ஓடும். கைக்கடிகாரம் மட்டுமில்லாம கீகுடுக்கற சுவர்க்கடிகாரமும் இருந்துது.
இந்த சாவி குடுக்கறதுக்கும் செல் போட்டு ஓடுறதுக்கும் நடுவால ஒரு வாச்சி குறுக்குசால் ஓட்டுச்சு. அதுக்குப்பேரு ஆட்டோமேட்டிக் வாட்ச்சின்னு சொல்லுவாங்க. நாம எதுவும் கீ குடுக்க வேணாம், பேட்டரியும் போட வேணாம். நாம கைல கட்டிட்டிருந்தாலே தன்னால ஓடும். அது கொஞ்சம் கனமா இருக்கும். பாக்கைல சைசுல எதும் மாற்றம் தெரியாது. ஆனா போட்டுகிட்டா கனம் தெரியும்.
அதுக்குள்ள ஸ்ப்ரிங் (அதோட சேந்த ஒரு வீல்) இருக்குறதாவும், நாம வாட்ச்ச கைல கட்டிட்டிருக்கப்ப கை அசையிறத வச்சு அந்த வீல் சுத்தி ஸ்ப்ரிங் இறுகி தன்னால கீ குடுத்துக்கும்னு சொல்லுவாங்க. உண்மையிலயே இந்த மெகானிசம் தானானு தெரியாது. ஆனா அந்த டைப் வாட்ச்சிகளும் பாத்துருக்கேன்.
இதுக்கு நடூல கால்குலேட்டர் வாட்ச், சேவல் கொக்கரிக்கிற வாட்ச், எலிகாப்டர் வாட்ச், டிவி ரிமோட் வாட்ச், ஃபோன் புக் வாட்ச்சுனு டெக் புரட்சி ஏற்பட்டபோது இதுவும் காலத்துக்குத் தக்கன புரண்டுகிச்சு.
இன்னக்கி நம்ம வாச்சி கீகீனு கத்தறப்ப அடடே இந்த வாட்ச்சிதான் எவ்வளவு காலங்களையும் டெக்னாலஜிகளையும் கடந்து வந்துருக்குனு கொஞ்சம் நேரம் பின்னோக்கி போயிருச்சு மைண்டு.
காலமென்ற தேரே ஆட்டிடாமல் நில்லு...
*&**&*&*&*&*&*&*&&*&*
மிர்ச்சி கென்னி செம்ம சார்ப்பு. தன்னோட தன் முதலீடு என்னங்கறத குய்க்கா புரிஞ்சுல்கிட்டு காலமும் பளபளப்பும் இருக்கறப்பவே தூத்திக்கொள்ள தெறம காட்ட புகுந்துருச்சு. சுமார்ட் கேர்ல். ஆல்ரெடி கோயிங் பிலேசஸ்.
+_+_+__+_+__+__+__
-------------------
Comments
Post a Comment
Pass a comment here...