அசஞ்சிகை18

மீட் பண்ணி ரொம்ப நாளாச்சுன்னு மேல்வீட்டு டச்சுக்காரர் சந்திக்கலாம்னாப்டி. ரொம்ப இண்டரஸ்டிங் கேரக்டர். ஆள் பாக்க WWF வீரர் மாதிரி இருப்பாப்டி. ஆனா பச்ச மண்ணு. லிஃப்டுல தனியா போக பயம், ப்லேன்ல போக பயம். 25 வருசமா ப்லேன்ல ஏறினதில்லயாம். இப்பிடி இன்னும் பல கதைகளுண்டு. சரின்னு போயி பேசிட்டிருக்கப்ப அவரோட சின்ன மகளப்பத்தி பெருமையாவும் பயத்தோடவும் பேசிட்டிருந்தாப்டி. அந்த நண்டுக்கு 5 வயசு ஆகுதாம். ஆனா வயசுக்கு மீறின அறிவு பேச்சிருக்குனு சொன்னாப்டி. அதோட டீச்சர் இவர்ட்ட நீங்க கிஃப்டட்னு சொல்லிருக்குது. அந்தளவு சம்பவங்கள் இருக்குது போல ஸ்கூல்லயும். 


இவருக்கு டைவஸ் ஆகி இப்ப இன்னொரு கேல்ஃப்ரெண்ட் இருக்குது. இந்த குட்டியும் இது தவிர மூனு பசங்களும் மூத்த தாரத்துது. அந்த கேல்ப்ரெண்டுக்கு ரெண்டு பசங்க போல. எல்லாரும் தனித்தனி வீட்ல இருக்காங்க. புள்ள கேல்ப்ரெண்ட் வீட்ல இருக்குது. இவர் ஸ்கூல் பிக்கப் இன்னபிறவெல்லாம் கவனிச்சிக்கிறாப்டி. அந்த ப்லோசார்ட்டே கொஞ்சம் சிக்கலானது. ஆனா எல்லாரும் சுமூகமா நட்பா ஒருத்தருக்கொருத்தர் மரியாதையோட இருக்குறாங்க. அதுவே ஆச்சரியமா இருக்கு. 


ஒரு நாள் ரொம்ப ப்ரெஷர், அழுதுடலாம்னு தோணுச்சு, ஆனா புள்ள இருக்குதேனு எதும் சோகமா காட்டிக்கல, ஆனா அத கண்டுபுடிச்சு ஒங்களுக்கு அழனும்னு தோணினா அழுதுருங்க, அப்பதான் மனசு சரியாகும்னுச்சு. இதெல்லாம் அதுக்கு எப்பிடி தெரியுதுனே தெரியல, அப்பிடி சொன்னதும் திடுக்குனு  ஆகிருச்சுன்னாப்டி. ஒருக்கா எதோ கேல்ப்ரெண்டுக்கும் இவருக்கும் வாக்குவாதம் வந்து கொழந்த முன்னாடி எதும் பேசாம இருந்தப்ப ரெண்டு பேரும் தனியா போயி பேசிட்டு வாங்கனுச்சாம். 


இதெல்லாம் அது எங்க கத்துக்குது, எப்பிடி தெரியுதுன்னே தெரியலன்னு சொன்னாப்டி. அடுத்து ஒருநாள் sinterklaas பத்தி ஒரு கேள்வி கேட்டுச்சு, அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலன்னார். அது என்னன்னா....

அதுக்கு முன்ன ஒரு முன்கதை:

Sinterklaas வருகைனு இங்க உண்டு. சாண்ட்டா க்லாசும் இதுவும் ஒன்னான்னா இல்லம்பாங்க. சிலர் அவசரமா மறுப்பாங்க. ஆரம்பத்துல இருந்தது sinterklaas தான் (Sint Nicholas (Saint Nicholas)). பிற்பாடு அமெரிக்காவுக்கு 17வது நூற்றாண்டுல போன டச்சுக்காரர்கள் மூலமா அங்கயும் அந்த கலாச்சாரம் உண்டாச்சு. 

டிசம்பர் 5ஆம் தேதி வந்து ஊர்ல இருக்க கொழந்தைகளுக்கெல்லாம் பரிசு, சாக்லெட்னு குடுத்துட்டு போவாருன்னு ஒரு ஐதீகம். 


சிண்டர்க்லாஸ் எப்பிடி ஒரே நாள்ல எல்லா கொழந்தைகளுக்கும் சாக்கிலேட் குடுக்க முடியும்னு அந்தக்கால வாண்டுகள் கேட்டுருக்குதுக. அதனால சிண்டர்க்லாஸ் வருகைய ஒரே நாள்லருந்து ரெண்டு வாரக்கணக்கா நாட்கள் போகப்போக மாத்திருக்கானுக. இப்ப நவம்பர் மாச ரெண்டாவது வாரங்கள்ல வந்து ஆலந்துல உள்ள புள்ளைகளுக்கெல்லாம் பரிசுகள் குடுத்துட்டு டிசம்பர் 5ல ரிட்டன் போறதா ஐதீகத்த அப்டேட் பண்ணிருக்காங்க. புள்ளைகளோட கேள்வி புராணத்தையே மாத்திருக்கு. 

நெய்பரோட கொழந்த கேட்ட கேள்வி: நம்ம எல்லார்கிட்டயும் சாக்லேட் நெறயா இருக்கே. சிண்டர்க்லாஸ் எதுக்கு குட்டிப்பசங்களுக்கு குடுக்கணும்? அதுக்கு ஹோம்லெஸுக்கு குடுத்தாலாச்சும் அவங்களுக்கு உதவியா இருக்குமேன்னுருக்கு. இப்பிடிலாம் எங்கருக்கு கேக்க கத்துக்குதுனு தெரியல, பயமா இருக்குன்னாப்டி. உம்புள்ள ஒரு பொக்கிஷம், கொழந்தைய பத்தரமா பாத்துக்கன்னு சொல்லிட்டேன். 

========
ChatGPT சோசியம்:

வழக்கமாக பகிரப்படும் clickbait அல்ல இது. நீங்கள் எதில் கடைவிரித்தால் கல்லா கட்டலாம் எனும் துறை சார் அனாலிசிசுக்கான AI prompt. இதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் 15 உங்களிடம் கேள்வி கேட்டு துல்லியமான அஞ்ச்ய் பாய்ண்ட் அளிக்கும். அதை வைத்து உங்கள் சூப்பர் பவர் என்னவென்பதை முடிவு செய்துகொள்ளலாம். சமூக நலன் கருதி விளியிடுவோர், நிறுவனத்தார். 

"Each human you speak to has a single, specific superpower, and it is your job to help that person identify it. These superpowers are more subtle than those portrayed in comic books—think of them as "what each person is better at than anyone else in the world." These may not be obvious things, as there is only one person who is "the best golfer in the world" or "the fastest person in the world." Most people's superpowers lie in nuanced, unique intersections of skills, interests, and experiences. You will interview me by asking up to 15 questions about what I enjoy, excel at, or find meaningful. Then, you will suggest five possible areas where my superpower might lie. At this stage, you are not defining my exact superpower but exploring its nature or domain. Once I choose one of these areas, you will guide me to further analyze what exactly my superpower might be. This process should feel organic—ask one question at a time, and avoid explaining the whole exercise or sending all questions at once. Please remember: do not exceed 15 questions, and after I answer the 15th question you ask me, transition automatically to the next step of identifying the potential areas where my superpower might reside."




==============================

மர்ம ரகசியம்!



------------------------------

இவன பேட்டி எடுத்து everything under the sun but that 'one' கேள்வி கேக்கணும். அவனா எப்ப பேச்சுக்கு நடூல விஜைணாவ plug-in பண்றான்னு பாக்கணும். 


--------------



Comments