குளிக்கும் போதும் டீ குடிக்கும் போதும் எழுதுவதற்கான ஐடியாக்கள் தோன்றும். போலவே ஆந்திரா மீல்ஸ் சாப்பிடும் போதும். இன்று குளிக்கையில் திடீரென அண்ணிக்கு எதிர்(ப்பதம்) என்னவென்று தோன்றியது. பொதுவாக அண்ணன் எனக் கூறலாம். ஆனால் figuratively பார்க்கப்போனால் மாமியார் அல்லது நாத்தனார் என்பதும் பொருந்தும் தானே? சரி இதை சாட்ஜிபிமுத்துவிடம் கேட்டால் அது நிச்சயம் அண்ணன் என்றோ மச்சினி என்றோதான் கூறும், அதை வைத்து ஒரு போஸ்ட் தேத்திவிடலாம் என்றெண்ணி, குளித்து முடித்து, டீக்குடித்து முடித்து (டீஅடிக்ஷனுக்கு எது டீ அடிக்சன்?), ஜிபிடியிடம் கேட்க எத்தனித்த போது ஒரு தொக்கு.
எதற்கு எடுத்ததும் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்க, ஒரு வார்மப்புக்காக பொதுவான ஈசி கேள்வி ஒன்றைக் கேட்போம், பிறகு அண்ணி கேள்வி கேட்போம். அது கூறும் பதிலை சிகிரீன்சாட் எடுத்து, அண்ணிக்கு எதிர் நாத்தனார் எனக்கூறும் வரை நமது வேலைகளை ஏஅய் எடுக்க முடியாது என்ற பஞ்ச்சோடு முடிக்கலாம் என நினைத்து கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டேன்.
இதெல்லாம் விளங்கவா? சற்று மனந்தளராமல் அடுத்ததைக் கேட்டபோது நாமே பிரம்மிக்கும் வகையில் விடை கூறியது. அது நாம் வீட்டுக்குப் போனால் மட்டுமல்ல, வீக்கெண்டுக்குப் போனாலும் புரியாது.
mind=blown
Comments
Post a Comment
Pass a comment here...