அசஞ்சிகை7

 Well AI, thats very helpful of you. 



*************

மணிசாரை நமக்குப் பர்சனலாக பல விடயங்களுக்காகப் பிடிக்கும். இன்னும் ஏகப்பட்டது எழுதக் கிடக்கு. (சமீபத்திய அடிசனல் காரணம் அவர் ஒரு ஆங்கிலில் திவ்யா துரைசாமி போல இருப்பதூஉம்). அது கிடக்கட்டும். பிரம்மாண்ட பிரம்மாண்ட தமிழ் சினிமாப்படங்கள் பல ரிலீஸ் ஆகி ஓடாமல் இருந்ததுண்டு. ஆனால் டேக்காஃபே ஆகாத படத்துக்கும் பூஜைகள் மட்டும் நிச்சயம் நடப்பதுண்டு. அவ்வளவு எஷன்ஷியல், படங்களுக்கான பூஜை என்பது. அத்தகைய பூஜைகளைத் தன் படங்களுக்குச் செய்யாதவர், சுஜாதா வார்த்தையில் சொல்லப்போனால் 'எலுமிச்சை கூட நசுக்காதவர்' மணிசார். 

அவர் செய்த இன்னொரு சத்தமில்லாத (அல்லது ஹஸ்கி வாய்ஸ்) புரட்சி, பட டைட்டில் கார்டுகளில் பெயருக்கு முன் தொடுப்புகளைத் தவிர்ப்பது. அது எவனாருந்தாலும் சரி. நீ எவ்வளவு பெரிய லாபியிஸ்ட்டாயினும், ரசிகவெறிப்பட்டாளத்தை வைத்திருந்தாலும் சரி. 


சீயானாவுது சுசீயமாவுது...


மயனீஸ் செல்வனுக்கு ஒரு மற்றும்.



ஆட்மனுக்கே இந்த நிலையா!!!!



இமயமாவுது இடியாப்பமாவுது ஓரமாப்போவச்சொல்லு...


Panteneமுத்து 


அப்புச்சி 😆😆😆😆


இப்படி யாரையுமே அட்டென்சனுக்காக கிரிஞ்சுத்தன முன்னொட்டு வால்களைச் சேர்க்காமலிருந்ததை ஒரு மரியாதையாகவே பார்த்து வந்தபோது, ஆண்டவர் ஆழ்வார்ப்பேட்டையிலாரம்பித்து அகில உலக குலோபை கண்ணுக்குள் பொத்தி அதிலிருந்து உலக நாயகன் என்று வேறு டைட்டில் கார்டு எதிர்பார்ப்பாரே என்ன செய்யவிருக்கிறார் மணிசார் என்ற ஆர்வத்தோடும் ரகசிய பதைபதைப்போடும் காத்திருந்தேன். நல்லோரோடு சேரின் நற்குணங்கள் நறுமும் எனும் சொல்லுக்கேற்றவாறு ஆண்டவரையும் இன்ஃபுலுயன்ஸ் செய்து நல்வழிப்படுத்தி தன்னை இனி உலகநாயகன் என அழைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது நிச்சயம் பாராட்டத்தக்கது. மணி சார்! நீங்க மேலும் ஒரு படி மேலேறிவிட்டீர்கள். இத்தகைய தெளிவு இப்போதாவது அடைந்த ஆண்டவருக்கும் பொக்கேஸ். (உலகநாயகன் என்றுதான் அழைக்க வேண்டாம் என்றிருக்கிறார். ஆண்டவர் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அதுவரை நாங்கள் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டகை என்றே அழைப்போம்.) 


******

இந்தியா. ஒரு படத்தில். 











Comments