நான் கடவுள் - ஒரு short film story (18+)



1.

[INT. வீடு - DAY]

போனில் காதலியோடு கத்தி, சண்டையிட்டு, கால் கட் செய்து, வெறுப்பு மற்றும் ஆத்திரத்தோடு ஃபோனைப் பார்க்கிறான்.

அவளிடமிருந்து GET LOST AND FUCK OFF என மெசேஜ் வருகிறது. Block செய்தும் விடுகிறாள். EMI debited, account balance low என பேங்கிலிருந்து மெசேஜ் வருகிறது.

கடுப்பில் லேப்டாப்பைத் திறக்கிறான். We regret to inform you that you are not selected for the job என மெய்ல் நோடிபிகேசன் வருகிறது.

வாட்சப்பைத் திறக்கிறான். நண்பனின் கல்யாணத்துக்கு வாட்சப் க்ரூப் ஆரமித்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கைத் திறக்கிறான், சக நண்பர்கள் ஆன்சைட் சென்றது, குழந்தை பெற்றது, ஐலவ்மை ஒய்ஃப் என வரிசையாக ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்கள். LinkedInனைத் திறக்க, கலீக் மற்றும் எக்ஸ் கலீகுகள் ப்ரொமோஷன், புதிய வேலை குறித்த அப்டேட்ஸ். இவனது ப்ரொஃபைல் Open to work எனக்காட்டுகிறது. கோபத்தோடு லேப்டாப்பை (வேகமாக) மூடுகிறான்.

கடுப்புகள் அடுக்கடுக்காய்ச் சேர்ந்து மேலும் கடுப்பாகி புலம்ப ஆரம்பிக்கிறான்.

கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குது? என்ன ஏன் மனுசனா படச்ச? நீ மட்டும் கைல கெடச்ச, ஓத்தா அவ்ளதான் என்கிறான்.

2.

மூடப்பட்ட லேப்டாப்பில் ஸ்கைப் கால் சத்தம் வருகிறது. குழப்பத்தோடு அதைத் திறந்தால் God Calling என ஸ்கைப் காலில் தெரிகிறது. குழப்பம் மற்றும் சந்தேகத்தோடு அட்டண்ட் செய்கிறான்.

3.

God உட்கார்ந்திருக்கிறாள். தலைக்குப்பின் சங்கு சக்கரம் போல டேபில் ஃபேன் மெதுவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஸ்க்ரீனின் கீழ் வலது ஓரத்திலிருந்து (ஊதுவத்திப்) புகை போல வந்துகொண்டிருக்கிறது. “சொல்லுப்பா” என்றாள்.


“யார் நீங்க?“


“அதான் கூப்டியே, கடவுள்.”


“கடவுளா? கடவுள் எப்டி ஸ்கைப்ல?”


“தூண்லயும் துரும்புலயும் இருக்கப்ப ஸ்கைப்ல இருக்க மாட்டனா? (கௌண்டமணி டோனில்) சொல்றாடேய்.”


“லாஜிக்கெல்லாம் சரி, ஆனாலும் எப்டி நம்புறது?“


(கடவுள் கேமராவை சிறிது நேரம் எந்த முகச்சலனமும் இன்றி நோக்கி…பின்) “ஏழாங்க்ளாஸ்ல annual leaveக்கு உங்க அத்தவீட்டுக்கு போனல்ல?”


(இவன் சற்று ஆச்சர்யமாக), “ஆமா...“


“அப்ப ஒருநாள் உங்க அத்த குளிக்கிறப்ப நீ...”


(குளிக்கிறப்ப நீ என்றதும்) “லேப்டாப் ஸ்க்ரீனை சட்டென மூடுகிறான்.”


(மூடப்பட்ட லேப்டாப்பிலிருந்து குரல்) “டேய் ஙோத்தா தப்பிக்கவா பாக்குற? தொறடா.”


“லேப்டாப் ஒயர் கேபிலைப் பிடுங்குகிறான்.”


“இப்ப தொறக்குறியா மீதிய சொல்லவா?”


லேப்டாப்பைத் திறந்து, “வேணாம்.. நீ கடவுள்தான் நம்புறேன். ஆனா கடவுள்னா இப்டி இப்டி இருப்பாங்கன்னு போட்டோல பாத்துருக்கேன். ஆனா நீங்க...” என இழுத்தான்.


“ஒங்க நெனப்பு மயித்துக்குலாம் என்னால இருக்க முடியாது” என்று கூறி அருகில் புகைவிட்டுக்கொண்டிருந்த டோப்பை எடுத்து ஸ்டைலாக ஒரு இழு இழுக்கிறாள். (அப்போதுதான் அதுவரை வந்தது ஊதுபத்திப் புகையல்ல என்பது தெரிகிறது}


கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, “கடவுள்ன்றீங்க.. தம்முலாம் எப்டி..?” என இழுக்க,


“ஒனக்கு கடவுள் டோப்படிக்கிறது ப்ரச்சனையா இல்ல லேடிஸாட்டம் இருக்கற கடவுள் இழுக்குறது ப்ரச்சனையா”


“என்ன கடவுள், பெமினிசமா?” என நக்கலாகக் கேட்டான்.


“ஒரு புண்டையுமில்ல”


சற்றே அதிர்ந்து, பின் சுதாரித்து, மீண்டும் நக்கல் தொனியில் “ஆமா எனக்குத்தான் புண்டையே இல்லியே” என்கிறான்.


அவனைப் பார்த்து ஒரு sarcastic லுக் விட்டபடி மற்றொரு பஃப் இழுக்கிறார் கடவுள்.


ஏதோ மாற்றத்தை உணர்ந்த சரவணன், திகிலோடு கீழே குனிந்து பார்க்க, இரண்டு கோலி குண்டுகள் உருண்டு ஓடுவது ஃப்ரேமில் காட்டப்படுகிறது.


அதிர்ச்சியோடு தலை நிமிர்ந்து கடவுளைப் பார்க்க, “மங்காத்தாடா” எனக் கூறியபடி அடுத்த பஃப்ஃபை இழுக்கிறார்.


“சரி சொல்லு ஒனக்கென்ன ப்ரச்சன?”


பதட்டத்தோடு, “மொதல்ல எனக்கு என்னுது திரும்ப வர்ணும். அப்புறம்தான் மத்ததெல்லாம்.”


“என்னடா, எல்லா ஆம்பளைங்களும் வாழ்றதே இதுக்குத்தான். நா இவ்ளோ handyயா ஒனக்கே ஒனக்குன்னு ஒங்கிட்டியே ஒன்னு குடுத்தா வேணான்ற..”


“அதெல்லாம் இல்ல. மயோனைஸ் சாஸுன்னா அத டிப் பண்ணிதான் சாப்டணும். அதுக்குன்னு அத பாக்கிட்ல வச்சுட்டு சுத்த முடியாது” என்றவாறு இங்கும் அங்கும் “இந்த கோலிகுண்டுங்கஎங்க தொலஞ்சது” எனத் தேடுகிறான்.


கடவுள் சிரித்து, “பாக்கெட்ல பாரு” என்கிறார்


அவன் பாக்கெட்டுக்குள் கைவிட்டெடுத்தால் இரண்டு ஆல்பகடா வருகிறது.


“ச்சீய் என்னதிது? கரேல்னு கொடூரமா”


“டேய் அது ஆல்பகடாடா. அத வாய்ல போட்டு முழுங்கு. ஒனக்கு போனது திரும்ப மொளச்சுடும்”


“இத முழுங்கினா அது வருமா? அதெப்டி சாத்தியம்?"


“ஓத்தா கடவுள் பால் குடிச்சார் பாக்கிட் அடிச்சார்னு சொன்னா நம்புறல்ல? கடலப் பொளந்தார் கவட்டைய தொறந்தார்னா நம்புறல்ல? செத்து மூனா நாள்ல நட்டுக்கிட்டாப்ல எழுந்தார்னா நம்பறல்ல? பல்லாவ வெட்றான்னு சொன்னா சூத்த மூடிட்டு கட்பண்றல்ல? த்தா இதயும் பண்ணு.”


“ஏங்கடவுளே, எதும் ப்ரச்சன வரக்கூடாதுன்னுதான எல்லாரையும் ஒரு கொட்டு கொட்ன? ப்ப்ர்ர்ர்”


“இப்ப சாரு பொத்திக்கிட்டு சாப்புடுறீங்களா இல்ல போட்டுருக்க நெத்தியில குஞ்சு மொளைக்க வெக்கட்டுமா?”


பதறிப்போய், “சரி சாப்டுறேன்” என விழுங்குகிறான். பின், “என்ன அடிவயிற்றில் ஓர் மாற்றம்.. ஓ.. ஜூனியர்... வரட்டும் வரட்டும்... வளரட்டும் வளரட்டும்”


“சரி ஒன் ப்ரச்சன என்னன்னு சொன்னா என் வந்த வேல முடியும்.”


ஒரு பெருமூச்சு விட்டு, “எல்லாப்பக்கமும் அடி. எங்க திரும்பினாலும் ஒத விழுது. வாழ்க்க ரொம்ப ரொம்ப கஷ்டமாருக்கு. மனுசனா வாழ்றதுக்கு மாடா இருந்தாக்கூட பொழச்சிக்கலாம் போல.”


“எல்லாருக்கும் அவங்கவங்களுக்கு ஏத்தமாரி அடி இருக்குடா. டிசைன் அப்புடி. எவனையும் நா சும்மா விடல என்கிறார்.”


“அடப்போங்கய்யா.. முட்ட போடுற கோழிக்குத்தான் பொச்சு வலி தெரியும்.”


“சரி ஒனக்கு என்னதான் வேணும்?”


“மனுசனா இருந்து என்னால சமாளிக்க முடியல. என்ன வேற எதாவதா மாத்தி உட்ரு”


“வேறன்னா?”


“எதாச்சும். கல்லா மண்ணா.. ஏன் அமீபாவாக்கூட மாத்து போதும்”


“யோசிச்சுதான் சொல்றியா? இப்ப பேச வாயாச்சும் இருக்கு. யோசிச்சுக்கோ.”


“அதெல்லாம் யோசிச்சாச்சு. என்ன அமீபாவா மாத்திரு. போதும் இந்த அடி ஒத.”


போய்த்தொல. எனக்கடவுள் சொன்னதும் கால் கட்டாகிறது.


Fade out.


Fade in.


பரிட்சை ஹாலில் இருக்கும் ஒரு பள்ளிக் குழந்தையின் முதுகு காட்டப்படுகிறது. அக்குழந்தை குனிந்து ஏதோ வரைந்து கொண்டிருக்கிறது. பின் பக்கமாக கேமரா நெருங்கி, குழந்தையின் தலைக்கு மேல் சென்று அது என்ன வரைகிறது என்பது ஃபோக்கஸ் ஆகிறது.


அக்குழந்தை ஒரு அமீபாவின் வெளிப்புறத்தை பென்சிலால் வரைந்து கொண்டிருக்கிறது. பென்சில் முனை மொக்கையாகிவிட்டபடியால் அதை எடுத்துத் திருகி, முனை கூர்மையாக இருக்கிறதா என ஒரு முறை பரிசோதித்துவிட்டு, டொக் டொக் டொக் டொக் எனக் குத்த ஆரம்பிக்கிறது.


Fade out ஆகிக்கொண்டிருக்கையில், மற்ற மாணவர்களின் டொக் டொக்குகளும் சேர, அமீபா குத்தப்படும் ஒலி தொடர்ந்து கேட்கிறது.


End.

Comments