scribe4.me

நமது நண்பர்கள் நேரம் கிடைக்கையில் scribe ஆகச் செல்வதுண்டு. விழித்திறன் சவால் கொண்ட மாணவர்களுக்காகப் பரிட்சை எழுதுவது. இதற்கான கோரிக்கைகள் வாட்சப் மூலமோ பேஸ்புக் ஆகிய தளங்களிலோ வரும். என்ன பரிட்சைக்கு, என்ன மொழியில், எந்த நாளில், எந்த இடத்தில், எந்த நேரத்தில் scribeபின் தேவை இருக்கிறது என்ற குறிப்போடு அந்த requestகள் இருக்கும். இந்த requestகளை சில நேரங்களில் ஒரு volunteer organize செய்வார். இதற்கெனத் தனியாகச் சில குரூப்புகள் உள்ளன. சில நேரங்களில் நேரடியாக மாணவர்களின் எண்களே இருக்கும். நாம் அந்த எண்ணில் தொடர்புகொண்டு நம் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். 

பக்கம் பக்கமாக எழுதக்கூடிய எண்ணற்ற பாடங்களைக் கொடுத்தது இந்த scribe அனுபவம்தான். சைக்கோ படத்தில் கமலாதாஸ் எனும் கேரக்டர் வருமே. அதன் நிஜமான ப்ரீத்தி ஸ்ரீனிவாசனைச் சந்தித்ததும் அவரோடு அவரின் பரிட்சைக்காக ஒரு வாரம் தொடர்ந்து பயணித்ததும் இப்படி ஒரு scribe பணியின்போதுதான். 

முதலில் ஒரு ஆர்வக்கோளாறில் நாமும் சொசைட்டிக்கு ஏதோ ஒன்று செய்கிறோம் எனும் தற்பெருமை தன்னிறைவுக்காகத்தான் சென்றது. ஆனால் இன்னும் அருகில் இருந்து பார்க்கையில்தான் அதிலிருக்கும் சவால்கள், நிறைவேறாத தேவைகள், மோசடிகள் எல்லாம் மலைக்க வைத்தன. 

வெளியே பார்ப்பதற்கு ஒரு scribe request, அதை ஏற்று விழிச்சவாலுடையவருக்காகப் பரிட்சை எழுதும் ஒரு வாலண்டியர். அவ்வளவுதான் எனத் தெரிகிறதல்லவா? ஆனால் உண்மையில் அது அத்தனை சாதாரணமானதல்ல. 


முதலில் scribeஆகச் செல்லலாம் என விருப்பப்படுவோர் கவனிக்க வேண்டியவை:

  • பரிட்சைகள் பொதுவாக 2.5 முதல் 3 மணி நேரம் வரை இருக்கும்
  • Scribe ஆகச் செல்வோர் பெரும்பாலும் வேலை பார்ப்பவர்கள் அல்லது ரிடையர் ஆனவர்கள் அல்லது home makers
  • வெகு நாளாக எழுதிப் பழக்கப்படாத கைகள் திடீரென 3 மணி நேரம் தொடர்ந்து எழுதுவது கைகளுக்கு வலி ஏற்படுத்தும், விரைவாக எழுத முடியாது, இதனால் குறிப்பிட்ட நேரத்தில் முழுத் தாளையும் எழுத முடியாமல் போகலாம்
  • கையெழுத்து ஓரளவுக்கேனும் மற்றவரால் வாசிக்கப்படும்படி தெளிவாக இருத்தல் நலம்
  • மாணவர் சொல்லச் சொல்லக் கேட்டு, விரைவாகவும் தெளிவாகவும் சரியாகவும் எழுத வேண்டும்
  • மாணவருக்கு கேள்விகளைத் தெளிவாகப் படித்துச் சொல்ல வேண்டும்
  • நீங்கள் உங்கள் பரிட்சைத்தாளை எப்படிக் கவனமாகக் கையாள்வீர்களோ அதை விட அதிகக் கவனத்துடன் அவர்களுடையதைக் கையாள வேண்டும்
  • உங்களின் சிறு தவறு/கவனப்பிழை ஏற்கனவே சவால் கொண்ட அவர்களின் வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்கி விடலாம் 

பெரும்பாலும் பரிட்சைகள் 9-10க்குள் ஆரம்பித்து விடும். நான் ஒரு மணி நேரத்திற்கு முன்னமே பரிட்சை நடக்கும் இடங்களுக்குச் சென்று அந்த மாணவர்களைச் சந்தித்து விடுவது வழக்கம். பரிட்சைக்கு முன் அவர்களிடம் சற்று நேரம் பேசிப் அறிமுகப் பட்டுக்கொண்டால் பரிட்சை எழுதையில் சற்று எளிதாக இருக்கும். நாம் வந்துவிட்டோம் எனும் assuranceசும் அவர்களுக்கு ஏற்பட்டு mentally இந்த அழுத்தமின்றிச் சற்று freeயாகி விடுவர்.  மாணவர்கள் பெரும்பாலும் பரிட்சை துவங்க இரண்டு மணி நேரத்திற்கு முன்னமே வந்து விடுகின்றனர், for obvious reasons.

மாணவர்கள் குழுக்களாக தங்களுக்கு வசதிபட்ட இடங்களிலமர்ந்து பரிட்சை துவங்கும் வரை படித்துக் கொண்டிருப்பர். அவ்வப்போது தங்களின் scribeகளுக்கு அலைபேசி அவர்கள் எங்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் உறுதி செய்துகொண்டிருப்பர். 


இந்த மாணவர்கள் படிக்கும் முறைகளைச் சொல்லியே ஆக வேண்டும். பார்வைக் குறைபாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும். அதற்கேற்றவாறு அவர்கள் தங்கள் கற்றல் முறைகளை வைத்துக்கொண்டுள்ளனர். 

சிலருக்கு 10% பார்வை இருக்கும், அவர்கள் புத்தகத்தை கண்ணோடு ஒற்றிப் படிப்பர். சிலர் பாடங்களைக் குரல் பதிவு செய்து திரும்பத் திரும்பப் போட்டுக்கேட்டுப் படிப்பர். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு முறை வைத்திருக்கின்றனர். பார்வையுடையவர்கள் நோட்ஸ் எழுதிக்கொண்டு தேவைப்படும்போதெல்லாம் எளிதில் revise செய்வது போன்ற வசதிகளும் இவர்களுக்கில்லை.

பாடங்களைப் பயில அவர்களின் மெனக்கெடல்களைப் பார்க்கையில்தான் நமக்கு உலகம் எவ்வளவு சுளுவாக இருக்கிறது என்பதும் நம்மைச் சுற்றிய உலகத்தை எப்படி non accessibleலாக ஒடுக்கி வைத்திருக்கிறோம் என்பதும் விளங்கும். 

ஒவ்வொரு பரிட்சை எழுதி முடிக்கையிலும் ஏதோ நம்மாலான உதவியைச் செய்துவிட்டோம் எனும் திருப்தி ஒருபக்கம் இருந்தாலும் மனத்தை விட்டு அகலவே அகலாத ஒரு காட்சி ஒவ்வொரு பரிட்சையிலும் இடியாக இறங்கும். ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே முடியாத என்ன சொல்லியும் தேற்ற முடியாத காட்சியது. புழுங்கிச் சாகச் செய்த அந்தக் காட்சியை ஒரு முறை பாரம் தாங்காது நண்பர் ஒருவரிடம் கூற அதற்குப் பின் அதற்கென எடுத்த முயற்சிதான் தற்காலிகமாகவேனும் விடுதலையளித்தது. 



பரிட்சைக்கு இரண்டு மணிக்கு முன்னமே வந்திருந்தும், பல மாணவர்களுக்கு, அவர்களிடம் வருவதாய்ச் சொன்ன scribeகள் கடைசி நேரத்தில் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி வர முடியாது எனக் கூறி விடுவர். இது மட்டுமல்ல, இதற்கு அடுத்த நிலையாக, சிலர் மொபைல் அழைப்பையும் எடுக்க மறுப்பர், வர முடியாது என்பதைக் கூடச் சொல்ல மாட்டர். இன்னும் சிலர் கடைசி நேரத்தில் இத்தனை ஆயிரம் கொடுத்தால் வருகிறேன் என demand செய்வர். அது demandடா அல்லது blackmailலா என்பதை உங்கள் விருப்பத்துக்கே விட்டு விடுகிறேன். 

காலையிலிருந்து காத்துக்கிடந்து பரிட்சை துவங்கும் சில நிமிடங்களுக்கு முன் இப்படி ஏமாற்றப்பட்டு அவர்கள் பரிட்சை நடக்கும் கட்டடத்தை விட்டுச் சோகத்தோடு செல்லும் காட்சியைக் காண்போருக்கு அது அவ்வளவு சீக்கிரம் மனத்தை விட்டு அகலாது. 

அதுவரை தன்னுடனிருந்த சக தோழ/தோழியர் பரிட்சை எழுதாமல் புறப்படுவதையுணர்ந்து அவர்களிடம் என்னவென்று  கேட்கையில், "இல்லப்பா என் scribe வரல. ஃபோனும் எடுக்கல, இந்தப் பரிட்ச எழுத முடியாது" என அவர்கள் கையறுநிலையில் கூறிச் செல்வது எந்த நெஞ்சையும் அறுக்கும்.

அவர்கள் செய்யாத தப்பிற்காக வாழ்க்கையில் ஏற்பட்ட தண்டனைகள் போதாதென்று இப்படிக் கடைசி நிமிடங்களில் நிகழும் தாக்குதல்கள் அவர்களுக்கு உளவியல் ரீதியாகவும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்?

உங்களில் சிலருக்கு இரவுகளில் நாளை காலை ஒன்பது மணிக்கு scribe தேவை என்றோ, இன்னும் இரண்டு மணி நேரத்தில் scribe தேவை என்றோ அவ்வப்போது scribe request messageகள் வந்திருக்கலாம். அந்த மெசேஜுப்பின்னால் இப்படி ஒரு கையறுநிலைக் கதையிருக்கும். இருந்து இருந்து ஒரு பட்டப்படிப்பு முடித்து விட்டால் ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்து சற்றே ஆசுவாசமடையலாம் என்பதும் இப்படியான நிகழ்வுகளினால் மண்ணள்ளிப்போட்டதாக ஆகிவிடுகிறது. 

இந்த விஷயம் வெகு நாட்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்ததை நண்பரிடம் சொன்னபோது, முதலில் பார்வையற்றவர்களுக்கு என்னையோர்போல patternனில் பரிட்சை வைப்பதே அநீதி என அவர் சொன்னது முற்றிலும் சரி. சமூகநீதியில் இந்த முறை நீக்கப்பட்டு, அவர்களுக்கு ஏதுவான வகையில்தான் பரிட்சைகள் அமைக்கப்பட வேண்டும். அதை மாற்ற நாளெடுக்கும். ஒரு நாள் இந்நிலை நிச்சயம் மாறும். ஆனால் அதுவரை, ஒரு முதலுதவியாக, தற்போதைய நிலையைச் சற்று சரிசெய்வதற்காக, மாணவர்களையும், Scribeகளையும் இணைக்கும் ஒரு appபைத் தயார் செய்துள்ளோம். 

இதன் மூலம் scribeபும் மாணவர்களும் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும், இதுவரை un-organizeடாக இருந்த இந்த scribe request system இந்த appபின் மூலம் organize ஆக மாறும். 

Scribeகளால் பரிட்சைக்கு வர முடியாத பட்சத்தில் அந்த request அடுத்து availableலாக இருக்கும் scribeபுக்குச் செல்லும். இதன் மூலம் முற்றாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு scribe absenceசைத் தவிர்க்க முடியும். 








மற்றவர்களுக்கு உதவும் எண்ணமுடைய உங்கள் நண்பர்களிடத்திலும் இத்தகைய தேவையுடைய மாணவர் / நண்பர்களிடத்திலும் இந்த appபை அறிமுகப் படுத்துங்கள். இது best solution என்று கூற மாட்டோம், but definitely towards the best solution. 

Appபில் ஏதும் குறைகளிருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள்: hello@scribe4.me



Comments