ஜெயந்தி

 பள்ளியில் நடக்கும் ஜெயந்தி விழாவுக்கு வேடப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால் பாலகர்கள் கிருஷ்ணன் வேடமணிந்து வரலாம் என சர்க்குலர் வந்தது. மாலை குழந்தைகளை பிக்கப் செய்ய வந்த பேரண்ட்சுகளிடம் இந்தச் செய்தி சொல்லப்பட்டதும் குதூகலமாகினர் சில பேரண்ட்ஸ்கள். அதே கோல், அதே மயிலிறகு, அதே நெத்திச்சுட்டி, அதே சிலுக்கு வேட்டி, ஆனால் அதற்குள் ஒரு வேறுபாடு காட்டி, எப்படியேனும் தாங்கள் வெற்றி பெற்றுவிடவேண்டும் என முனைப்பு காட்டினர் peer pressured பேரண்ட்ஸ். 


நம் கதையின் நாயகி, ஜெயந்தி என்று வைத்துக்கொள்வோம். அப்பள்ளியின் முந்தைய வருட ஜெயந்திப்போட்டிகளின் போட்டோக்களையெல்லாம் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டாள். 


அது மட்டுமின்றி சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்ட, பரவிய போட்டோக்களையும் பார்த்துக் குறித்தாள். இந்த முறை வெற்றி பெறுவது மட்டுமல்ல, புகழும் பெற வேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டாள்.


டைலரிடம் சென்று ஆடை எப்படி இருக்க வேண்டும். நீளமென்ன, அகலமென்ன, வடிவமென்ன இன்னும் என்னவென்னவெல்லாம் இருக்கிறதோ அத்தனையும் கூறி போட்டிக்கு ஒரு வாரத்துக்கு முன்னமே வடிவமைக்கப்பட்ட ஆடை வந்தே ஆக வேண்டுமென்று கண்டிசனாகக் கூறி வாங்கிக்கொண்டாள்.


ஜெயந்தி தினத்தின் காலை, அதிகாலையிலேயே எழுந்து குளித்து, மகனை எழுப்பி அவனையும் குளிப்பாட்டி, ஜெயந்தி ட்ரெஸ் அணிந்து பள்ளிக்கு அன்று நடந்தே செல்லப்போவதாக கணவனிடம் கூறியபோது கணவன் முகுந்தன் என்று வைத்துக்கொள்வோம், என்ன இது கோலம் என்றான். 


ஏன்? இன்னக்கி ஜெயந்திக்கு போட்டில்ல. அதான் ஃபேமஸ் ஆகறதுக்கு.


அது சரிடி, அதுக்கு பையனுக்கு வேஷம் போட்டா சரி, நீயும் சேந்து என்ன கூத்து கட்டிட்டு இருக்க?


எல்லா வருஷமும் வேஷம் போட்ட எதாவது ஒரு கொழந்த வின் பண்ணிட்டுதான் இருக்கும். ஆனா வைரல் ஆகறது இந்த அட்டயர் தான். இதுலாம் ஒங்களுக்கு புரியாது எனக்கூறி முக்காட்டுத் துணியை முன்னே இழுத்துவிட்டு முகத்தை மறைத்து புர்காவுடன் புறப்பட்டாள் ஜெயந்தி.  


Because, நம் கதையின் நாயகி ஜெயந்தி had other ideas. 


 

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

இரைவி