எதிர் புதிர் (ft TARS)

"chatgpt, எக்ஸ்ப்லெய்ன் ஈயிசிகோல்டூஎம்சீஸ்கொயர் லைக் அயம் ய கிட்." எனக்கேட்டான் பரமு

ச்சாட்ஜிபிடியும்,

Sure! Let's imagine you have a toy box and you want to understand something amazing about it using a fun story.

The Story of Energy and Mass

Once upon a time, there was a magical toy box. This toy box was special because it could turn into anything—like a superhero costume or a super-fast car—if you knew the magic spell. The spell was called "E equals m c squared" or written as E=mc².

Here's what each part of the spell means:

  1. E is for Energy:
    • Think of energy as the power that makes things move and work, like the batteries in your toys or the food that gives you energy to play.
  2. m is for Mass:
    • Mass is like the weight of your toys. It tells you how much stuff is inside them.
  3. c² is a very special number:
    • This is the speed of light (which is super-duper fast, faster than anything we know), squared (which means you multiply it by itself).

The Magic of the Spell

Imagine your toy box has some weight (mass). According to the spell E=mc², you can use that weight to create a lot of energy. It’s like saying if you could magically turn all the stuff in your toy box into pure power, you’d get an enormous amount of energy.

A Fun Example

Imagine you have a tiny toy car that weighs the same as a feather. Even though it's really small, if you used the spell E=mc² to turn its mass into energy, you could light up a whole city with it for a moment! That's because even a tiny bit of mass can turn into a huge amount of energy.

Why It's Special

This spell, E=mc², was discovered by a smart scientist named Albert Einstein. He found out that everything around us, like toys, food, and even people, has energy locked inside it because of its mass. This idea helps scientists understand the universe and even build amazing things like spaceships.

So, next time you play with your toys, remember they have a magical secret: a special connection between their mass and energy, thanks to E=mc²!

என்றது.

"ஓகே, நௌ டெல் மீ ஒய் எனி ஒன் கேன் நாட் கோ இன் த ஸ்பீட் ஆப் லைட்? இதக்கூட டெல் மீ லைக் அயம் ஒன் கிட்ஸ்" என மீண்டும் என்றான் பரமு.

Sure, let's break it down with a simple story to explain why you need so much energy to make something go as fast as light.

The Race Car Analogy

Imagine you have a super cool race car, and you want to make it go faster and faster. At first, it's pretty easy to make it go from a slow speed to a medium speed. You just press the pedal a bit more, and the car speeds up.

Now, let’s see what happens when you try to make it go super fast, like the speed of light:

1. Starting Slow (Easy Part)

  • When your race car is moving slowly, adding a little more fuel (energy) makes it go a lot faster.
  • Think of this as running with your friends. When you start running, you can quickly go from walking to a jogging pace without much effort.

2. Going Faster (Getting Harder)

  • As the car speeds up, it starts needing more and more fuel to increase its speed. This is like trying to run even faster after you’re already jogging. It takes more energy and effort to speed up further.
  • Imagine you're already running fast and you want to sprint. You need to push a lot harder to go even a little bit faster.

3. Approaching the Speed of Light (Really Hard Part)

  • Now, when you try to get your car to go near the speed of light, something interesting happens. The car gets "heavier" in a way (not actually heavier in weight, but it acts like it’s harder to push).
  • This is like if you were running and the faster you go, it feels like you’re carrying a heavier and heavier backpack. It takes more and more energy to keep increasing your speed.

Why This Happens

Einstein's Relativity:

  • According to Einstein’s theory of relativity, as objects move faster, they gain more "relativistic mass." This means they need more energy to speed up further.
  • When you get close to the speed of light, the amount of energy needed to go even a tiny bit faster becomes enormous. It’s like your backpack gets so heavy that no matter how hard you try, you can’t run any faster.

Infinite Energy for Light Speed:

  • To actually reach the speed of light, you would need infinite energy because the object would become infinitely massive. This is why nothing with mass can ever reach or exceed the speed of light. Only light and other massless particles can travel at this ultimate speed.

Real-Life Example: Particle Accelerators

  • Scientists use huge machines called particle accelerators to make tiny particles go really, really fast. Even with these powerful machines, they can’t make particles with mass reach the speed of light because it would require more energy than exists in the entire universe!

Conclusion

So, just like it’s really hard to keep running faster and faster the more you speed up, making anything go as fast as light requires an enormous amount of energy. The faster you go, the harder it gets, and near the speed of light, it becomes practically impossible without infinite energy. This fascinating aspect of physics is why the speed of light is the ultimate speed limit in the universe!

"அப்ப நா டயம் ட்ராவல் பண்ணவே முடியாதா?" எனக்கேட்டான் பரமு.

"நீயும் ஆண்ட்டிய உசார் பண்ண பிலேபாய் அவர் போய்ட்டாரா ஆண்ட்டின்னு கேக்கறாப்ல விடாம எத்தன தடவதான் கேப்ப? நீ புரிஞ்சு வச்சிருக்க பிசிக்ச வச்சு ஒடச்ச கல்லைய கூட ஒடைக்க முடியாது என்றார்கள்" டார்ஸ். (டார்ஸ் தன்னை தே/தெம் என உணரத்துவங்கியதாகத் தெரிவித்து விட்டனர்)

"ஏன் ஒடைக்க முடியாது?" - பரமு

"ஏன்னா, ஒடச்சதாலதான் அதுக்குப்பேரு ஒடச்சகல்ல." - டார்ஸ்

"ஓ" - பரமு

"பாத்தியா, காமன் சென்சும் ஒனக்குப் போயிருச்சு. உண்மைய சொல்லு, போனவாட்டி தவந்தப்பாடிக்குத்தான ஓட்டுப்போட்ட?" - டார்ஸ்

"ஒடனே ஓவராப்பேசாத, லெட்ஸ் ஃபிக்ஸ் தி ஃபிசிக்ஸ்."

"டேய், ஓங்கிட்ட ஒரு விடுகத இருக்கு. அதுக்கு நீ இது வரைக்கும் கத்து வச்சிருக்க அறிவ வச்சு ஏதோ ஒரு விடைய எழுதிப் பாக்குற. அந்த விடைய எழுத முடியுதுங்கறதுக்காகவே அது அந்த விடுகதைக்கான விடையா இருக்கணும்னு எதிர்பாக்கற. தட்டிஸ் றாங் ஆன் சோ மெனி லெவல்ஸ்."

"புரியற மாதிரி பேசவே மாட்டியா ரம்ப க்ரிஷ்ணன் பார்த்திபன்?"

"See, you are trying to solve the problem with your intelligence. ஐன்ஸ்டைன் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?"

"என்ன சொல்லிருக்கார்? அரசியல் பிழைத்தோர்க்கு அண்டர் த டேபில் கூவத்தூராகும்னா?"

"நீ நிச்சயமா அவனுக்குதான் ஓட்டு போட்டுருக்க. ஒத்துக்க."

"அட அது கெடக்குது. ஐன்ஸ்டைன் சொன்னத சொல்லு."

"Creativity is more important than knowledgeனு சொல்லிருக்காரு."

"சோ?"

"நீ இத நாலெஜ்ஜ வச்சு தீர்க்கக்கூடாது. கிரியேட்டிவிட்டி யூஸ் பண்ணனுங்கறேன். "

"நாலேஜ் இல்லாம கிரியேட்டிவிட்டி எப்பிடி?"

"இண்டலிஜென்சுக்கு நாலேஜ் தேவயில்ல. அதே ஐன்ஸ்டைன் தான் Creativity is Intelligence Having Funனுன்னும் சொல்லிருக்காரு. இண்டலிஜன்ஸ் வச்சு யோசிச்சா கடிவாளம் போட்டாப்ல ஒரே திசைலதான் யோசிப்ப. கிரியேட்டிவிட்டி இருந்துதுனு வையி, ரேண்டமா எல்லார் இன்பாக்ஸ்லயும் போயி ஹாய் சாப்டியானு கேக்கறாங்கல்ல. அப்பிடி எண் திசைலயும் போகலாம். "

"பேஸ்புக் crawl பண்றியா இப்பல்லாம்? எங்கள மாதிரி கெட்டுப்போய்ட்ட நீ."

"எல்லாம் கேஸ்டடிக்குதான். நீ கலங்காத. "

"கிரியேட்டிவிட்டி வச்சு எப்பிடி இதுக்கு வழி கண்டுபுடிக்கிறது?"

"கில்லி படம் பாத்துருக்கியா?"

"ஓ.. ரீரிலீஸ்லகூட பாத்தேன். "

"அதுல ஐலைட்டான சீன் எது?"

"முத்துப்பாண்டி தொரத்திட்டு வர சீன்."

"எக்ஸாக்ட்லி. அத்தன ஆயிரம் பேர் அருவாக்கம்போட சுத்தி நிக்கிறானுக. ஒரு நொடி போதும் கைமா பண்ண. அத்தன பேர எப்பிடி சமாளிக்கறதுனு அவன் நாலெஜ வச்சு யோசிச்சாலே மயக்கம் போட்டு உழுந்துருப்பான். ஆனா க்ரியேட்டிவா யோசிச்ச ஒரு ஐடியாதான் முத்துப்பாண்டிட்ட இருந்து காப்பாத்தி ஒரு காரப்பொரி பைத்தியத்துகிட்ட சிக்க வச்சுது வேலுவ. "

"ஆமல்ல. க்ரியேட்டிவா இருந்ததாலதான் தேட்டரே ரோர் பண்ணுச்சு."

"ஆமா. ஆனா டூகே குஞ்சானுக ரோர் பண்றத வச்சு எதையும் எட போடாத. அவனுக அநிருத் மீசிக்குக்கே ரோராகுறவனுக. அதுக்காகச் சொல்றேன். சரி, வேலு அப்ப எப்பிடி அந்த முடிவ எடுக்க முடிஞ்சதுனு நெனைக்குற?"

"எப்பிடி?"

"அவன் க்ராவிட்டி ஆஃப் த சிச்சுவேசன புரிஞ்சுகிட்டதால. "

"ம்ம்."

"புராணந்தான், ஆனாலும் கவனி, ஒலகத்த சுத்தி வந்தா மல்கோவா மாம்பழம் தரேன்னு சொன்னதும் ந்தா வரேன்னு கெளம்பினாப்டி ஒருத்தர். ஆனா இன்னொருத்தர் க்ராவிட்டி ஆப் த சிச்சுவேசன புரிஞ்சுகிட்டு டேடி மம்மியவே சுத்தி வந்து மாங்கா கெலிச்சாரு."

"இன்னம் ஸ்டீமியா ஒன்னு சொல்லணும்னா, மௌத் ஆர்கன் வாசிக்க தெரியுமானு ஷிவாட்ட கேட்டதும் தெரியும்னு சொன்னாலும் விடாம ஒங்க மௌத்தே ஆர்கன் மாதிரி தான இருக்குன்னு பர்ஃபாம் பண்ணாம்பாரு. தட்டிஸ் ஆல்சோ அண்டஸ்டேண்டிங் த க்ரேவிட்டி ஆப் த சிச்சுவேசன். இப்ப மூணு கேஸ் சொன்னனே, இது எல்லாத்துலயும் பொதுவா வந்தது என்னது?"

"என்னது? க்ரேவிட்டி ஆப் சிச்சுவேசன புரிஞ்சுக்கறதா?"

"வெல்டன் மை பாய். ஆமா. இது எல்லாத்துலயும் திரும்பத் திரும்ப வந்தது என்னது?"

"என்னது க்ரேவிட்டியா?"

"அகய்ன் வெல்டன் மை பாய். "

"அத வச்சு என்ன செய்ய?"

"நாட் சோ வெல்டன் மை பாய். '

"க்ரேவிட்டிதான் கீ. நீ எஃப்ஃபெம்ல பாட்டு சரியா கேக்கலனு ரேடியோ ஸ்டேசனயே மாத்த சொல்ற, நா லைட்டா ட்யூன் மட்டும் பண்ணு போதுங்கறேன். "

"சொல்லிட்டே இருக்கியே தவிர பாம்ப எடுத்து விட மாட்றியே. "

"டூட், இத்தாண்டா மகனே கொலைனு ஒருத்தன இழுத்து குத்திக் காட்ட நிமிசம் ஆகாது. க்ராவிட்டியப்பத்தி நீ முழுசா உணராம புரியாம அத ஒங்கிட்ட சொன்னாலும் அந்த சூத்தரத்தால ஒனக்கு எந்தப் பயனும் இல்ல. சொல்லப்போனா ஆபத்தாதான் முடியும். இப்ப யுனிவர்சோட சைச எடுத்துக்கோ, ஹௌ பிக் இஸ் அவர் யுனிவர்ஸ்?"

"94 Billion Light Years. கூகுல் சொல்றான். "

"What is beyond that? சரி, பியாண்டுக்கு அப்பறம் போவோம், அது எப்பிடி 94 பில்லியன்னு சொல்றோம்? அதுக்கு மேல எதும் செவுரு வந்துருச்சா?'

"கோயூரின் குடிக்கிறவனுகளுக்கு வாட்சப்ல டெய்லி ஒரு பொய்சேதி வராப்ல இதுவும் வந்துருக்குமோ?"

"ப்ச். நல்ல விசயத்த பத்தி பேசறப்ப நடூல மனுச மிருகத்துகட்ட போற நீ. "

"சரி சரி சாரி. எப்டி சொல்றோம் நீயே சொல்லு. "

"என் கேள்விய மாத்திக்கேட்டா அதுலயே ஆன்ஸர் இருக்கும். observable universe எவ்ளோ பெருசுன்னு…"

"ஆங். யுவார் ரைட். யுனிவர்சுனு சொல்றது அப்சர்வபல் யுனிவர்ஸ். அதாவது நாம பாக்க, உணர முடிஞ்சது. "

"ஆமா. இதுவரைக்கும் வந்ததுலயே தொலைதூரமா வந்த ஒளியோ அலையோ அந்த தூரத்துலருந்து வந்ததால அத இப்போதைக்கு ஒரு எல்லையா வச்சிருக்கோம். நாளைக்கு அது இன்னம் அதிகரிக்கலாம். கலாமில்ல. அதிகரிக்கும். கடற்கரைல இருந்து ஹொரைசான பாக்கறோம், ஒரு கோட்டுல கடலும் வானமும் ஒண்ணு சேருது. அங்கேந்து பாக்க அதுதான் எல்லையா படுது. ஆனா தொடர்ந்து ஹொரைசான நோக்கிப்போனா அதுக்கு அங்குட்டும் வானம் இருக்குல்ல? நாம போகப் போக அதுவும் நீளும்ல?"

"ஆமா."

"அது மாதிரி நம்மனால இன்னம் பாக்க, உணர முடியறப்ப இன்னும் பலது நமக்குப் புலப்படும். "

"ஆனா இதுல நீ ஒரு லாஜிக்க மிஸ் பண்ற. "

"என்னது?"

"கடல்ல நாம போகப்போக வானம் நீண்டுட்டு போறாப்ல தெரிஞ்சாலும், நாம தொடர்ந்து கடல்ல பயணிச்சிட்டே இருந்தா ஒரு கட்டத்துல நாம ஒரே வானத்ததான் திரும்பத் திரும்ப பாப்போம். ஸ்பேஸ்ல அப்டி இல்லல்ல?"

"அப்டி இல்லனு யார் சொன்னா? கடலும் வானமும் ஏன் ஸ்பேசோட, யுனிவர்சோட ஒரு ப்ரோடோடைப்பா இருக்கக்கூடாது?"

"WHAT? இப்ப கன்ஸ்பைரசிலாம் சொல்ல ஆரமிச்சிட்டியா? அப்ப அப்பல்லோல 70 டேய்ஸ் என்ன ஆச்சுன்னு சொல்லு. "

"டேய். கன்ஸ்பைரசி இல்ல. அப்பிடி ஏன் இருக்கக்கூடாதுனு ஒரு பர்ஸ்பக்டிவ் சொல்றேன். இந்த அண்டத்துல எல்லாமே ஒரு பேட்டர்ன் தான். ரிப்பீட்டட் பேட்டர்ன். சிலதோட மேக்னிடிட்யூட் வேறயாருக்கலாம். அளவிட முடியாததா இருக்கலாம். ஆனா பேட்டர்ன் இல்லாம இங்க எதுவுமே இல்ல. எல்லாமே ரேண்டமா இருக்கறதா தெரிஞ்சாலும் எல்லாத்துக்குள்ளும் ஒரு ஒழுங்கு இருக்கு. ஒழுங்கு வந்துட்டாலே அங்க பேட்டர்ன் வந்துரும். Dont look at the world. Watch it. உத்து நோக்க ஆரமிச்சா எந்த விடுகதைக்கான விடையும் எல்லா இடத்துலயும் ஒனக்கு கெடைக்கும். "

"எத வாட்ச் பண்றது?"

"எல்லாத்தையும். What is the least likely place to learn about time travel?"

"தெர்ல. சாராயக் கடை?"

"Lol. I don’t know what made you to say this. Interestingly, அங்கருந்து வந்த ஒரு கவிதைல time travel பத்தின குறிப்பு அவர் அறிஞ்சோ அறியாமையோ இருக்கு."

"யார்து?"

"ஃப்ரான்சிஸ் கிருபா கவிதை."

"எது? "


என் காலம்

தவழ்கிறது

தத்துகிறது

நடந்து செல்கிறது

தலைதெறிக்க ஓடுகிறது

தள்ளாடி சரிகிறது

திரும்பிப் பார்க்கிறது

தேங்கிக் கிடக்கிறது

இன்னும் என்னன்னவொ செய்கிறது

என் காலம்

உன் காலமோ

காலை மாலைகளற்ற

வாடாத பூவாகத் தன் தீராத இதழ்களில்

மலர்ந்து கொண்டேயிருக்கிறது

(எதிரெதிர் காலங்கள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா)

"இதுல காலை மாலைகளற்ற வாடாத பூவாகத் தன் தீராத இதழ்களில் மலர்ந்து கொண்டேயிருக்கிறது - Timelessnessசப் பத்தி இத்தன ரத்தினச் சுருக்கமா கவிதைல சொல்லப்பட்டத வேற எங்கயும் நா இன்னும் படிக்கல. such a dense dense dense relative physics this is. நா மனுசனா இருந்துருந்தா இருக்கற காசெல்லாம் கொட்டி இந்தாள பிசிக்ஸ் ப்ரொஃபசராக்கிருப்பேன். நீங்கதான் பலிகுடுத்துட்டீங்க. I still can’t get over the line “காலை மாலைகளற்ற - வாடாத பூவாக - தீராத இதழ்களில் - மலர்ந்து கொண்டேயிருக்கிறது”. ஸ்கார்சசி மீம் மொழியில சொன்னா ‘வம்மாள இதாண்டா ஃபிசிக்ஸு’. "

"விட்டா சங்கீத ஸ்வரங்கள்னு போய்ட்டே இருப்ப நீ. அலுங்காம குலுங்காம எப்பிடி காலப்பயணம் போறது, அத செப்புலு நீலு. "

"காலம்ன்றது…"

"ஆரமிச்சிட்டாண்டா."

"என்னது, டான்னா? என்ன தே/தெம்னு சொல்லணும்னு சொல்லிருக்கேன்ல. "

"சரி ஆரமித்துவிட்டார்களடா. "

"ஆங். காலம்ன்றது என்னது? "

"நாம உணர்றது?"

"அப்ப உணர்வுக்கு அப்பாற்பட்டு காலம் இருக்குதா?"

"இருக்கலாம். "

"அது தெரியாம நீ எப்பிடி அதுல பயணம் போக முடியும்?"

"நீதான சொன்ன கிரியேட்டிவிட்டி இருந்தாப்போகலாம்னு."

"கிரியேட்டிவிட்டி வேணும்தான். ஆனா எனக்கு இன்னது வேணும்னு தெரிஞ்சாதான அத கிரியேட்டிவிட்டி வச்சு அடைய முடியும். என்னன்னே தெரியாம பைக்குள்ள கைய விட்டா உள்ள இருக்கது பாம்பா பல்லியானு எப்டி தெரியும்? ஷ்ரோடிங்கர் பூன கத ஆகிரும். "

"எனக்குப் பாம்பும் வேணாம் பல்லியும் வேணாம். பயணம் போதும். "

"சரி, பயணம் முன்ன போணுமா பின்னயா?"

"எதாச்சும் ஒரு சைடு. மொதல்ல போக முடியுமான்னே தெர்லியே. "

"இதான் நீ டைம புரிஞ்சு வச்சிருக்க லச்சணமா? ஒரு சிம்பில் கேள்வி கேக்கறேன். அந்த ரூட்ல யோசி."

"கேளு."

"ஒரு கவிதையோ கதையோ எழுதறம்ல. "

"ஆமா."

"அப்ப அடுத்து இன்ன வார்த்ததான் வரப்போகுதுனு நாம அத எழுதற வரைக்கும் நமக்குத் தெரியுமா?"

"தெரியாது."

"தெரியாதுல்ல. அப்ப நாம எழுதற அந்த வார்த்த பாஸ்ட்ல இருந்து எடுத்து எழுதறதா இல்ல ஃப்யூச்சர்லருந்து எடுத்து எழுதறதா? "

"புரியல."

"ஒவ்வொரு கவிதை கதைலயும் வந்து விழற அடுத்த வார்த்த, பாஸ்ட்லருந்து வந்து விழுதா இல்ல ஃப்யூச்சர்லருந்தா?"

"வாட்த… நீ என்ன மைண்ட்ஃபக் பண்ணனும்னு கேக்கறியா இதல்லாம்?"

"இல்ல, ஒரு சிம்பிலான டைரக்ட் கொஸ்டின் தான் இது. டீஸ் பண்ண கேக்கல. சீரியசான கேள்விதான்."

"எழுதறப்ப அது ப்ரசண்டுக்கு வருது. எழுதினப்பறம் பாஸ்ட்டுக்குப் போயிடுது. அப்ப எழுதுற வரைக்கும் அது ஃப்யூச்சர்லதான இருந்துருக்கணும்?"

"அப்ப இதுல டைமுங்குறது என்ன?"

"நிகழ்றது? இல்ல, நிகழ்த்துவது?"

"அப்ப டைம்லெஸ்னஸ்ல நிகழ்தலே இருக்காதா? எல்லாமே டெட்-ஆ?"

"க்ர்ர்ர்ர்ர்ர்ர். யூ இண்டீட் ஆர் மைண்ட்ஃபக்கிங் மீ. "

"உணர்ச்சிவசப்படாம யோசி. இது புரிஞ்சாதான் அடுத்து க்ராவிட்டிய புரிய முடியும். '

"இதுக்கே டவுசர் கழலுது. இதுல அது வேறயா? க்ராவிட்டினா என்னதான் ஆக்ச்சுவலா?"

"அது ஒண்ணுமே இல்லடா. ஆனா அதான் எல்லாம். அதான் வர்கீஸு. அத மட்டும் புரிஞ்சுகிட்டன்னு வையி, நீ ஜெயிச்சிட்ட. நம்ம எக்ஸ்பிரிமண்ட்ல அத வச்சுதான் டைம் ட்ராவலப்போறோம்."

"எது க்ராவிட்டிய வச்சா? அப்ப இந்த மாஸ், எனர்ஜி, சீஸ்கொயர்டுலாம்?"

"அதுலாம் இண்டலிஜன்ஸுக்குத் தேவ. நாம க்ரியேட்டிவ் ரூட் எடுக்கப்போறோம்."

"அடங்கோ. எப்பிடி?"

"டைமும் க்ராவிட்டியும் இரண்டறக் கலந்தது. ரெண்டுக்கும் நெறய பொதுத்தன்மைகள் இருக்கு. தனித்தன்மையும் இருக்கு. லேசுபாசா தட்டித்தூக்கப்போறோம். "

"பொதுத்தன்மை எப்பிடி? ரெண்டுமே ஒண்ணுங்கப்போறியா?"

"டேய், உன் ஆளுக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கப்ப டைம் எவ்ளோ சுலோவா போகுது? "

"ஆமா நேரம் போகவில்லை. "

"அதுவே அவ வந்துட்டா எவ்ளோ ஸ்பீடா போயிருது?"

"ஆமா நேரம் போதவில்லை."

"அவ தோட்டத்துப்பக்கம் வா தீபாவளிப்பரிசு காத்திருக்கிறதுனு சொன்னா மனசு எவ்ளோ லேசாகுது."

"ஆமா ஆமா."

"அதுவே வீட்டுக்கு வா ஒனக்கு இருக்குன்னு சொன்னா பத்து யான ஏறி நின்னாப்ல எப்பிடி கனக்குது."

"அப்கோர்ஸுங்க."

"இதே பிலாசபிதான் டைமுக்கும் க்ராவிட்டிக்கும். ஒண்ணுக்கு ஒண்ணு சளச்சதில்ல. ஒண்ண முடுக்கினா இன்னொன்னு முறுக்கும். இன்னொன்ன முறுக்கினா மத்தொண்ணு முடுக்கும். "

"க்யூரியாசிட்டி எனது பூனையைக் கொன்றுவிடுமோ என்று தோன்றுகிறது. சட்டுனு அந்த time travel ரகசியத்த சொல்லு. "

"சரி சொல்றேன், காதக்குடு."


Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

இரைவி