·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·


A creature from Colombian and Venezuelan folklore, La Patasola is a female spirit or demon who dwells in the jungle. She is said to have one leg and glowing red eyes. La Patasola preys on men, seducing them before revealing her true form and attacking them.

✯¸.•´*¨`*•✿ ✿•*`¨*`•.¸✯

அவளின் புறக்கணிப்பை அவனால் கையாளவே முடியவில்லை. அவளிடம் தொடர்பிலிருந்த அத்தனை appகளிலும் மெசேஜ்கள் அனுப்பிவைத்தான். அத்தனையிலும் ஆஃப்லைன். Blockகும் செய்யவில்லை. அத்தனையிலும் 'last seen a week ago'.


இடையில் ஒருநாள் திடீரென இரவில் மட்டும்தான் தன்னால் இனி வரவியலும் என அவள் சொன்னது, சமயங்களில் அவளுக்கிருந்த mood swings, சட்டெனக் கோபப்பட்டது என அத்தனை அத்தனையையும் வெவ்வேறு விதங்களில் யோசித்துப்பார்த்தான். சரியாகச் சொல்லப்போனால் over overthink செய்து கொண்டிருந்தான். 

திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப அவளிடமிருந்து வந்த பழைய மெசேஜுகளைப் பார்த்தபடி இருந்தான். 

கேலரியைத் திறந்து அவள் அவ்வப்போது வரைந்து அனுப்பிய ஓவியங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்த்தான். முதலில் மிகவும் randomமாகத் தெரிந்த ஓவியங்களை, மீண்டும் மீண்டும் பார்க்கையில் ஏதோ ஒன்று உறுத்தியது. அவற்றுக்குள் ஒரு pattern இருப்பதாகத் தோன்றியது. ஆனால் அது என்னவென்பது முழுவதுமாய் விளங்கவில்லை. Space கேக்குகளைக் கொறித்துக்கொண்டே ஒவ்வொரு படத்தையும் உற்று நோக்கினான். 




























































அவற்றுக்குள் ஏதோ ஓர் ஒற்றுமை இருப்பதாகப் பட்டது. அவை வெறும் ஓவியங்களல்ல, ஒரு statement எனப் பட்டது. அவை ஒரு பெருங்கதையின் வெவ்வேறு பக்கத்தை ஒரே நேரத்தில் ஒளிப்பதாகவும் ஒளிர்ப்பதாகவும் பட்டது. ஓவியமும் ஓப்பியமும் அவனிடம் ஒருசேரப் பேசத்துவங்கியிருந்தன. அப்போது அவன் தூங்கிப்போயிருந்தான். 

இரவெல்லாம் அதையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்குக் கனவிலும் அவ்வோவியங்களே வந்தன. கனவில் அவை உயிர்பெற்றிருந்தன. அவனைச் சுற்றிச் சூழ்ந்து இருந்தன. அவன் திரும்பும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஓவியம் இயங்கிக்கொண்டிருந்தது (motion picture). அவற்றை அவனால் தொட்டு உணர, நுகர, கேட்க முடிந்தது. ஆனால் எவ்வளவோ முயன்றும் கனவில் அவனால் பேச மட்டும் முடியவில்லை. வாய்க்கு பூட்டு போட்டாற்போல் உணர்ந்தான். அவன் வாயைத் திறக்க முடியாமல் பெரும்பலங்கொண்ட யானை ஒன்று தன் காலால் அவன் தாடையைத் தடுத்துக் கொண்டிருந்தது போல் இருந்தது. பேச முடியாமல் அவதிப்பட்டு அடிவயிற்றிலிருந்து அலறினான். அவன் அலறல் தொண்டை வரை வந்து மிகக்கொடூரமாக உள்ளுக்குள் எதிரொலித்தது. ஆனால் தொண்டையைத் தாண்டி அவன் அலறல் ஒலி வெளிவரவே இல்லை. வெளிவராத அந்த ஒலியின் சக்தியால் அவனின் குரல்வளை அதிவேக ரயில் கடக்கும் பூமியாய் அதிர்ந்தது. நீர் அருந்தாமல் பல நூறு மைல்கள் வெயிலில் ஓடினால் தொண்டையில் வரும் வறட்சியை உணர்ந்தான். அத்தகைய வறண்ட தொண்டையில் மேலும் கொஞ்சம் மிளகாய்ப் பொடியைப் பூசியது போன்ற எரிச்சலும் இருந்தது. 

கனவில் தொடர்பற்று வெவ்வேறு காட்சிகள் மாறி மாறி வந்தன. 

ஒரு கடற்கரை, மணலில் இரு காலடித்தடங்கள். கால்கள் எதுவும் இல்லை. வெறும் காலடித்தடம் மட்டும். அதில் ஒரு தடம் முன்னோக்கியும் இன்னொன்று பின்னோக்கியும் எட்டு வைத்துச் சென்றது. அதை சிவராமன் பார்த்தபடி இருந்தான். அந்தக் தடம் பதிந்த ஒவ்வொரு எட்டுக்கும் சிவராமன் சில அடிகள் வானத்தில் உயர எழும்பினான். கால் தடம் பதியப் பதியப் பதிய இவன் உயர உயர உயரச் சென்றான்.

அங்கே வானத்தில் ஒரு பெரும் பெண்டுலக் கடிகாரம் மிதந்து கொண்டிருந்தது. அதன் பெண்டுலம் பக்கவாட்டாக ஆடாமல் நொடி முள் போல எதிர் கடிகாரத் திசையில் சுற்றிக்கொண்டிருந்தது.

பாலைவனத்தில் ஆக்டோபஸ் ஒன்று ஒற்றையாக தனக்குத்தானே எதிராக foosball விளையாடிக் கொண்டிருந்தது. Foosball டேபிளின் இரு புறத்தின் கைப்பிடிகளையும் அதன் எட்டு வால்கால்கள் பற்றி இருந்தன. கோல் போட்டதும் அதன் வால்கால்கள் ஒன்றோடொன்று hi5 அடித்துக்கொண்டது வினோதமாகவும் நகைப்பானதாகவும் இருந்தது. 

சட்டெனக் காட்சி மாறி, அவள் வரைந்தனுப்பிய ஓவியங்களை மொபைலில் அவன் பார்ப்பதாகக் கனவில் காண்பதையே ஒரு கனவாக - வேறொரு கனவில் அவன் காண்பதாக ஒரு கனவு காண்பதை மற்றொரு கனவாக அவன் கனவில் காண்பதை இன்னொரு கனவில் கண்டான்.

அதிலிருந்து பிரிந்து, கனவுக் காட்சிகள் வேறொன்றாகக் கலைந்து, பின் அனைத்தும் ஒன்றாய்க் கலந்து, அவள் கடைசியாய் அனுப்பிய ஓவியம் மட்டும் பெரிதாக ஒளிவீசி அவன் முன்னால் வளர்ந்து நின்றது. அதைப் பார்க்கையில் அதுவரை அவன் கவனிக்கத் தவறிய ஒரு பேருண்மை விளங்கியது. விளங்கியது என்பதை விட அவனுக்கு யாராலோ விளக்கப்பட்டது. ஆனால் அது மிகச் சில நொடிப்பொழுதுகள் மட்டுமே நீடித்தது. அவ்வுண்மை தெள்ளத் தெளிவாக விளங்கிய அதே நொடியில் அவனுக்கு விழிப்பும் வந்தது. 


மின்னல் பொழுதே நீடித்த அவ்விளக்கங்கள் கனவிலிருந்து விழித்த பின் சட்டென மறந்தன. என்ன பிரயத்தனப்பட்டாலும் மீண்டும் நினைவுக்கே வரவில்லை. 

ஏதோ ஒரு பெரும் ஞானத்தைக்  கண்டுகொண்ட அந்த உணர்வு மட்டும் மனத்தில் விழித்த பின்னும் ஆழமாக இருந்தது. ஆனால் அவ்வுண்மை என்னவென்பது மட்டும் அவனால் நினைவுபடுத்தவே முடியவில்லை. தாகத்தால் வறண்டு தொண்டை வலியும் இருந்தது. 

அந்தச் சடுதி மறதி தந்த இயலாமை அவனுக்கு ஆங்காரத்தைத் தந்தது. கோபத்தில் அருகிலிருந்த மேசையை ஓங்கிக்குத்தினான். மேசைக்கு மேல் போடப்பட்டிருந்த 5 times stronger என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த toughened glass மாபெரும் ஒலியுடன் உடைந்தது. தன்னை உடைத்ததற்குப் பழி வாங்குவதுபோல் அவன் கையை உடைந்த கண்ணாடி பதம் பார்த்திருந்தது. அதன் காரணமாக அவன் கையின் மணிக்கட்டு லேசாகக் கிழிந்து அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. 

அப்போது மொபைலில் அவள் மெசேஜுகளுக்கென்றே அவன் வைத்திருந்த பிரத்தியேக நோட்டிபிகேசன் ஒலித்தது.



🌒



(pic courtesy: https://rosioire.com/)

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂