ₒₒ▫️ᵒᴼᵒ▫️ₒₒ▫️꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫️ₒₒ▫️ᵒᴼᵒ▫️ₒₒ

🌑


திடீரென ஹவ்வாவிடமிருந்து மெசேஜுகள் வருவது நின்றது


சில நாட்களுக்கு முன் அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆஃப்லைன் போனவள் அதன் பிறகு ஆன்லைன் வரவே இல்லை. சிவராமன் அனுப்பிய எந்த மெசேஜுக்கும் ரிப்லைகளும் இல்லை


Pun மொழியில் சொல்வதானால் he got ghosted by a... 



Bumbleலில் match ஆனதிலிருந்து இரண்டு வாரங்களாய் தினந்தோறும், சொல்லப்போனால் ஒவ்வொரு தினமும் எப்போதும் அவளிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இப்படித் திடீரென தொடர்பு அறுந்து போனது ஒரு வெறுமையை, குழப்பத்தைஅவன்மேலேயே அவனுக்கு கசப்பை உண்டாக்கியிருந்தது


முதலில் ஒரு மாதிரி மனத்துக்குள் அஜீரணக்கோளாறு போலிருந்தது


நேரம் செல்லச் செல்ல எதுவோ ஒன்று அவனை முழுவதுமாகக் கவ்வி விழுங்குவதுபோல் தோன்றியது


இதுவரை அவளுக்கு எப்போது மெசேஜ் அனுப்ப நினைத்து ஃபோனை எடுத்தாலும், ஃபோனை எடுத்த மாத்திரத்தில் அவளின் மெசேஜ் ஒன்று முந்திக்கொண்டு வந்திருக்கும்


ஒரு முறை இதை பரீட்சார்த்தமாகவே செய்து பார்த்தான்


சாதாரணமாக மொபைலை எடுத்துப்பார்த்தால் எதுவும் இருக்காது


அவளுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என நினைத்து ஃபோனை எடுத்தால் உடனே ஒரு மெசேஜ் அவளிடமிருந்து வரும்


ஒரு மணிக்கொருமுறை - ஒரு மணியில் பத்து முறை - நிமிடத்திற்கு நான்கு முறை - பத்து நொடிகளுக்குள் இரண்டு முறை, இப்படி எந்த இடைவெளியில் எடுத்தாலும் அது ஒரு மேஜிக் போல் நிகழ்ந்தது


ஒரு வேளை தன் மொபைலை அவள் ஹேக் செய்து, மோஷன் சென்சார் மூலம் போனை அசைக்கையிலெல்லாம் ஒரு botடை வைத்து மெசேஜ் அனுப்புகிறாளோ என்றெல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறான்


காதலி(யிடம்) எந்நேரமும் பேசிக்கொண்டிருக்க ஒரு bot டெவலப் செய்த காதலன் குறித்த செய்தியைப் படித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது


ஆனால் இங்குள்ள வினோதம் அவன் சாதாரணமாக மொபைலை எடுத்தால் அவளிடமிருந்து எதுவும் வருவதில்லை. மாறாக அவளிடம் பேச வேண்டும் என நினைத்து எடுத்தால் மட்டுமே அவளின் மெசேஜ் பளிச்சிடும்


ஆர்வம் தாளாது அவளிடம் ஒருமுறை கேட்டே விட்டான். "எப்டிடி ஒனக்கு மெசேஜ் பண்ணனும்னு மனசுல நெனச்சு போன் எடுத்தா மட்டும் கரெக்டா உன் மெசேஜ் நோட்டிபிகேசன் வருது? எதும் ப்லாக் மேஜிக் பண்றியா என்ன?"


ஒரு 👻இமோஜி மட்டும் பதிலாக வந்தது



ஒருகட்டத்தில், உலகில் இருக்கும் அத்தனை மெசேஜ் ஆப்களிலிலும் இருவரும் பேசினர்


ஒவ்வொரு ஆப்பிலும் ஒவ்வொரு டாப்பிக் ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும்


சில நேரத்தில் ஒரே ஆப்பில் மூன்று தனித் திரிகள். ஒவ்வொரு திரியிலும் ஒவ்வொரு டாப்பிக்


மெசேஜுகளைத் தேர்ந்தெடுத்து Reply toவிட்டு திரியை அணையாது பார்த்துக்கொண்டனர்


சில சமயம் Split personality போல் ஒரு ஆப்பில் சண்டை, மற்றொன்றில் சர்காசம், மற்றொன்றில் இசைப் பரிமாற்றம், மற்றொன்றில் flirt. அத்தனையும் ஒரே நேரத்தில்


தூங்கும் நேரத்தை மட்டும் கழித்துவிட்டு, கனவில் வருவதையும் சேர்த்துப்பார்த்தால் அனேக நேரத்தில் இருவரும் virtually ஒன்றாகவே இருந்தனர்


"I feel your presence so close that திடீர்னு உன்னக்கூப்டா பக்கத்து ரூம்லேந்து வந்துருவியோனு தோணுது. அந்தளவு நீ இங்க வியாபிச்சு இருக்குற." 


"இந்த வருஷத்துல ஒரு பொண்ணுகிட்ட வியாபிச்சுன்ற வார்த்தைய உலகத்துலையே யூஸ் பண்ணது நீ ஒருத்தனா தாண்டா இருப்ப :)" 


இத்தனை தொலை-அன்னியோன்யமாக இருந்துவிட்டு இப்படி திடீரென ghost செய்தது அனைத்தையும் சூன்யமாக்கியது


அவர்களின் பழைய கான்வோக்களைத் தோண்டித் தோண்டி மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தான்


சில சமயம் அழவும் செய்தான். தற்காலிக மனத்தெளிவு பெரும் சொற்ப நேரங்களில் யோசிக்கையில் ‘என்னது அழலாம் செய்றோம் அசிங்கமாஎன்று அவனுக்குக் கூச்சமாகவும் இருந்தது.


அவள் மீண்டும் வந்தால் பகிர வேண்டும் என்பதற்காக கண்ணில் படும், ரசித்த ஏகப்பட்ட பாடல்களையும், மீம்களையும், timing quotesகளையும், ஸ்டோரிகளையும் சேர்த்து வைத்தான்


அவ்வப்போது தனக்குத்தானேயும் பேசிக்கொண்டான் - "இர்ரி... மறுக்கா வருவல்ல எங்க சுத்துனாலும். பொளந்துர்ரேன் இரு."


இதில் 'பொளந்துர்ரேன் இரு' எனும் போது ஆட்காட்டி விரலை நீட்டி தொலைத்துவிடுவேன் என்பது போல் வெறும் சுவருக்குக் கையைக் காட்டி கண்டித்துக்கொண்டிருந்தான்.




பழைய கான்வோக்களைப் பார்க்கையில், ஒன்றை மிச்சம் வைக்காது எல்லா ஜானர்களிலும் அவர்கள் பேசியிருந்தார்கள். ஒவ்வொரு ஆப்பாகத் திறந்து அவர்களின் பழைய கான்வோக்களைப் படித்தான். சில கான்வோக்களைக் கண்டு மெலிதாகச் சிரித்தான் வேதனையோடு.



Yo! Watsup? What did you do today?

Spent the whole day talking to myself about you.


Dey which is your favorite of 7 seas?

The Puss sea

unta keten paaru. enna sollanum

Okay, onnaye solren.

your puss..

Sethu poyiruva. Dhairiyamirundha mulusa solli paren

Adhan convey agiruchulla. My job done.


Which is more important? The journey or destination?

The company





What can I do to make you happy?

Be obsessed with me




😂😂😂


சிரிச்சிட்டா. அப்ப சத்தியமா செக்ஸ் சாத்தியமுண்டு


ஒனக்கு சத்தியமா சாக்ஸ்தான் சாத்தியமுண்டு. 


சாக்ஸ்? யூ மீன் லைக் திஸ்?





நோ, லைக் திஸ்.





















😡😡😡

😡😡😡😡😡😡😡😡😡😡😡😡


🤣🤣🤣

தக்காளிப்பழம். 

 ˗ˋˏ ♡ ˎˊ˗


நாம பேசினத படமா எடுத்தாலே நகைச்சுவை திங்கள் 

காதல் செவ்வாய் காவிய புதன் அதிரடி வியாழன்

சூப்பர் ஹிட் வெள்ளினு கலந்து கட்டி 

எல்லா நாளுக்கும் ஒன்னு ரிலீஸ் பண்ணலாம் போலயே.


அப்ப சனி ஞாயிறுக்கு?


அது Netflix & shillலுக்கு


netflix & chill தான வரும் 


ஆமா. இது netflix & sex & chill



 ˗ˋˏ ♡ ˎˊ˗



உன் எக்ஸ் கத எதாச்சும் சொல்றா.


எதும் டைப்போ விட்டுருக்கியா?


தெரியும் இப்டி எதாச்சும் சொல்லுவன்னு. 

You are too predictable. Try something better. 


betterரா try பண்றதுக்கு ஒன்னு சொல்லுவேன். 

நீ வக்குரமா பேசுறேம்ப. 


நீ சொல்லவேனாண்டா. 

எனக்கே புரிஞ்சுருச்சு ஏன் போயிருப்பாளுகன்னு.

இப்பிடியே பேசிட்டிரு நீ.


😭 அந்தக்கொடுமைய வேற ஏந்தம்பி ஞாபகப்படுத்துறீங்க. 


என் ராசி ஒனக்கு தெரியாதே,
அது என்னமோ, எப்ப ப்ரேக்கப் ஆனாலும்
கரெக்டா அந்த டைம்ல அவளுக மாதிரியே இருக்க
 models or actress தான் வைரலாவுங்க


நாமளே இதயம் இடிஞ்சு ரெகவராக முடியாம இருப்போம்

இதுல எங்க போனாலும் அவளுகள ஞாபகப்படுத்தறாப்லயே இருக்கும்

ஒன்னு அவளுக சாயல்ல இல்லன்னா அவளுக பேருல


PAM, ஸ்வதிஸ்தா, சிவஸ்ரீ சுகந்தபிரசாத், மிர்ணாலினி, 

திவ்யா தொரைசாமி, ஷெரின், ராணி முகர்ஜி அனுஷ்கானு.

இந்த சோபனாவெல்லாம் எத்தன வருசமா கூழூத்துது.

எப்பயாச்சும் லைம்லைட்டுக்கு வந்துருக்கா?

கரக்டா நமக்கு ஒருத்தி பௌ காட்டிட்டுப்போனா

அடுத்த நாளே யங் & டெண்டர் சோபனானு 

அந்தம்மாவோட HD ரீல்ஸ் பம்பார்டிங்காவுச்சு. 

அது ஒரு தொட்டுத்தொடரும் பாரம்பரியம்

பெரும் பாரம்-பரியம்


சோசியல் மீடியா காஜிதடியனுக வேற சும்மா இருக்க மாட்டானுக

எப்பிடி ரசிக்கிறேம்பாருன்னு எதயாச்சும் உருட்டிட்டிருப்பானுக

டாக் பெற்ற கோகோநட் மாதிரி

இவனுகளால எல்லா ஆப்லயும் அவ மூஞ்சியேதான் திரும்பத்திரும்ப வரும்


எல்லாவனும் அவளுகள ரசிப்பானுக

நமக்கு இவளுக ஞாபகம் படுத்தியெடுத்து

அவளுகள ரசிக்கக் குடுத்து வெக்காம வலிதான் மிஞ்சும்



Baader–Meinhof phenomenon

என்னது?

இந்த ஒரே சாயல்ல தெரியற இல்யூஷனுக்குப்பேரு. 

when you are driving on road, எதிர்ல 

நாம வச்சிருக்க மாதிரியே இருக்க கார்ங்களா 

வராப்ல தெரியும். அதேதான் இங்கயும். 


இவள் கொண்ட சாயல் யுகம் யுகமாய் பரிச்சயமெனக்குனு 

இன்னொருத்திட்ட பிட்டு போடுவீங்க 

எல்லாம் டொக்கு போட ஒரு tactics



ஒரு பவித்திரன தப்பா பேசுற நீ.


You knowwhat?

In fact ஒம்பேரு ரேரா இருந்தது எவ்ளோ பெரிய ரிலீஃப் தெரியுமா எனக்கு?

சப்போஸ் நம்மள்து புட்டுகினாலும் ஒம்பேர்ல எவளும் வர வாய்ப்பில்ல

so we are safeநுனு தோணுச்சு


wait... நம்மள்து புட்டுகினாவா

நாம எப்ப ஒட்டிகிணோம் புட்டுக்கறதுக்கு?



ஒரு ஃப்லோல வரதுதான். கண்டுக்காத.


நறுக்கிருவேன்.


நறுக்கிக்கோனு எடுத்து கைல குடுத்துருவேன்


Also I did notice 'அவளுக இவளுக' plurals

வாழ்ந்துருக்காண்டா ஒருத்தன்..

அட அதெல்லாம் ஒரு தொகையறாவுக்கு...

︶꒦꒷♡꒷꒦︶


வயிற்றில் பூனைமுடி
சற்று முன் சரிந்த ஆப்பிள் தொப்பை
கேப்பிடல் எஸ்ஸை மேலும் கீழும் இழுத்தாற்போன்ற இடைவளைவு
ஒளிரும் கோதுமைநிறத் தோல்
ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப் துழாவி எடுத்ததுபோல் தொப்புள்
மென்கஸ்தூரிவாசம்
இது அத்தனையும் கொண்ட நீ.

❤️

துவர்ப்பே இல்லாம முழுக்க இனிக்கிற இளநீர்
உன் உமிழ்நீர்
அவ்விளநீரில் அப்பள பருமனில் இருக்கும் வழுக்கையின் விதுவிதுப்பு
உன் tender இதழ்


எதச்சொன்னாலும் ஒரு சாப்பாட்டு ரெஃபரன்ஸ்
சரியான சாப்பாட்டு ராமண்டா நீ


நா உன் சாப்பாட்டு ராமன்
நீ நான் சாப்பிடும் ramen









                       

◇─◇──◇─────◇──◇─◇

Hu Li Jing: If you ever see villager corpses lying around with their hearts dug out, there’s likely a fox demon among the midst! Fox demons often take on the appearance of beautiful, seductive women. They often seduce men and then eat their hearts (or livers) to maintain their beautiful appearances and immortality, or sometimes to become human themselves. The Chinese phrase for “fox demon” has sometimes been used to describe beautiful women with ambiguous morals. Not all fox demons are bad! Some Chinese legends tell stories of kind and generous fox spirits.

🕸

La Llorona: Known as "The Weeping Woman" in Latin American folklore, La Llorona is a ghostly figure who is said to roam near bodies of water, mourning the loss of her children. Legend has it that she drowned her own children in a fit of rage and despair, and she is often depicted as a woman in white.

🕸

Churel: A creature from South Asian folklore, the churel is a female ghost or vampire-like entity that is believed to be the spirit of a woman who died during childbirth or while being mistreated. Churels are said to have long, unkempt hair, a backwards-facing feet, and they often appear as beautiful women to attract victims.

🕸

Comments