ₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒ


🌘


நிஷாகந்தி.

😱😱😱

எப்பிடி அந்தப்பூவத்தான் கேக்கப்போறேன்னு ஒனக்கு தெரிஞ்சது?


:)

அந்தப்பூவப்பத்தி ஒனக்குத் தெரியுமா? 

எனக்கேட்டு, அவன் பதிலுக்குக்காத்திராது சொல்லத்துவங்கினாள் ஹவ்வா.

நிஷாகந்திப்பூ யட்சிங்களுக்கு மிகப்பிரியமான பூ. இல்லேன்னா ராத்திரி மட்டுமே பூத்து விடியற்காலைல வாடுற பூ ஒண்ணு எதுக்கு பூமில உண்டாகணும்னு யோசிச்சுப்பாரு. அது அவங்களுக்கான பூ.


யட்சிகள் இந்த பூ பூக்குற பெளர்ணமி ராத்திரி வருவாங்க. இத கேக்க அர்த்தமில்லாத புரட்டு மாதிரி தோணலாம். ஆனா அவங்க கண்டிப்பா வருவாங்க. ஒரு பௌர்ணமிக்கு இல்லேன்னாலும், அடுத்த பெளர்ணமிக்கு. இல்லேனா எப்பவாவது ஒரு நாள். இந்த பிரதேசத்துல ஊர்கள், வீடுகள், மக்கள்னு யாரும் இல்லாம இருந்தப்ப அவங்களோட வருகை தினம் தினம் நிகழ்ந்துச்சு.


அது ராத்திரி மட்டும்தான் பூக்கும். நடுராத்திரி பூத்து காலைல வாடிடும். தினமும் பூக்காது. அதுக்கு தோணுறப்ப பூக்கும். வருஷத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை பூத்துட்டா பெரிய விஷயம்.


அதோட பேரு “டச்மேன்’ஸ் பைப்” (Dutchman’s pipe)  பொட்டானிகல் நேம் – எபிஃபைலம் ஆக்ஸிபெட்டலம் (Ephiphyllum Oxypetalum)”


Hey you know what?

It feels surreal. I don't know how to explain you this. 

நீ அந்தப்பூவப் பத்தி சொல்றது ஒரு Déjà vu effect குடுத்துது. 

I've been in this conversation before. 

அச்சுப்பிசகாம இதே செண்டன்ஸ ஏற்கனவே கேட்டுருக்கேன். 

எப்போன்னு தெர்ல. I've lived in this moment already. 

ஞாபகச் சலனம் மாதிரி இருக்கு.


போன ஜென்மத்துலயாருக்கும். 

அது இருக்கட்டும். ஏன் இந்தப் பூவப் பத்தி கேட்ட?


Somehow அந்தப்பூவோட நா சம்மந்தப்பட்டுருக்க மாதிரி தோணும். 

எதோ என்னைய பின் தொடர்ந்து வராப்ல.

இப்ப உங்கிட்ட சொல்ல வந்தது கூட அதப்பத்திதான். 

அதுக்கு எத்தனையோ பேர் இருக்கலாம். 

கரெக்டா இந்த ஊர் ரெஃபரன்ஸ்ல டச்மேன் பைப்னு இருக்கு பாரு. 

Out of all the names, நான் இருக்குற நாட்டோட பேர்ல. 


யுகம் யுகமா ஒன்ன ஃபாலோ பண்ணிட்டு வருதோ என்னமோ.


நீ எப்பிடி அந்தப்பூவ கேக்கறதுக்கு முன்ன 

கெஸ் பண்ணினன்றதே எனக்கு இன்னும் புடிபடல. 

அப்பறம் எதோ அந்தப்பூ உன் கூடப்பொறந்த தங்கச்சி 

மாதிரி அதோட கதைய மடமடனு சொல்ற. 

அந்தக்கதைய ஆல்ரெடி கேட்ட மாதிரி வேற இருக்கு. 

நா இன்னக்கி எந்த லாகிரி வஸ்துவும் எடுத்துக்கவும் இல்ல. 

I'm like brain fucked.


இன்னும் எவ்ளவோ பாக்க வேண்டி இருக்கு. 

அந்தப்பூவுக்கு டச்மேன் பைப்னு பேர் வந்தது ரீசண்ட்டாதான். 

17th centuryல. 

எதேச்சையாதான் இந்தப்பூவ பாத்திருக்காங்க. 

டச்சுகள் யூஸ் பண்ண ஸ்மோக்கிங் பைப் மாதிரி இருந்ததால  அந்தப்பேர வச்சுட்டாங்க. 

நெதர்லாந்துல மட்டுமில்ல, அமெரிக்காஸ், ஏஷியா, ஆஸ்திரேலியான்னு எல்லாக்கண்டத்துலையும் இந்தப் பூ வசிக்குது. 

இது பூக்குற அந்த நேரத்துலதான் சில சீக்ரெட் கம்யூனிட்டி ரகசியமா கூடி அவங்களோட ரிச்சுவல்ஸ செய்வாங்கன்றதும் ஒரு ஐதீகம். 

இந்தப் பூ என்ன பண்ணும் தெரியுமா? அதோட வாசனையால பூச்சிகள ஈர்க்கும். அந்தப் பூவோட luringல மதிமயங்குற பூச்சிகள் அதுகிட்ட வந்ததும் அதோட குழாய்ல சிக்கிக்கிடும். அங்கருந்து அதுக்கப்பறம் பூச்சிகளால தப்பிக்கவே முடியாது. அதுங்க அங்கயே கெடந்து செத்துப்போயி செதஞ்சுடும். அப்புறம் அந்த சிதைவே இந்தப்பூவுக்கு ஊட்டச்சத்தா மாறிடும். 

செம்மல்ல 😉


ஏ...அய்யா!

எனக்கு திகிலோன்னு இருக்கு.

நீ எனக்கு மெசேஜ் தான் அனுப்பற. 

ஆனா நீ மேல சொன்னது எல்லாமே எனக்கு ஒரு பொண்ணு 

பக்கத்துல உக்காந்து ஹஸ்கி வாய்சுல சொல்ற மாதிரி கேக்குது. 

இது மனப்பிராந்தியான்னும் தெரியல. 

நாம வேற டாப்பிக் பேசுவோம்.

நான் சொன்னது பூ & இசை. 

இதுல ஒரு பாதி தான பேசிருக்கோம். 

இசை இன்னும் மிச்சமிருக்கே. 


நீ பூவப்பத்தி சொன்னதே எனக்கு லேசா வயித்தக்கலக்குது. 


அவன் சொன்ன எதுவும் ஹவ்வாவை நிறுத்தவில்லை. தான் சொல்வதைத் தொடர்ந்தாள். 

 

பூ மாதிரியே இசையும் யுனீக்.


இசையே பிடிக்காதவன்கூட இசை கேக்கறப்ப

தாளத்துக்கு ஏத்தமாதிரி காலையோ தலையையோ ஆட்டறான்ல?

அது அவன மீறி நடக்குதுல்ல? அது எப்பிடி?

இசை எங்கருந்து வருதுங்கறத விடு, அது ஒருத்தர எங்க கூட்டிட்டுப் போகுதுன்னு கவனி.


யட்சிகள பூமிக்கு வர வெக்கறது மலர்கள்.

அவங்கள திரும்பிப் போக வெக்கறது இசை.

அல்லது மரணம்.

பூமிக்கு வர்ற யட்சிகளுக்கு இசை இருந்தா சந்தோஷமாவும்

மரணம் நிகழ்ந்தா மனிதர்களால விளங்கிக்க முடியாத

ஒரு உணர்வோடயும் திரும்புவாங்க. 


மனுசங்களால புரிஞ்சுக்க முடியாத உணர்வுன்னா?


அது சூட்சும உலகத்துக்கான உணர்வு.

இந்த ஒலகத்துல மனிதர்கள் observe பண்ண முடியற spectrumமையும் தாண்டின

ஒலிஒளிகள் இருக்குல்ல. அது மாதிரி.

இங்க இருக்கவங்களால அத உணரவே முடியாது.

சோகம் - கோபம் - தாபம் - தாகம் இப்பிடி தனிச்சு சொல்ல முடியாத உணர்வு.

வானவில்லோட இந்த நிறந்தான் வானவில்னு சொல்ல முடியாதுல்ல? அப்பிடி ஒண்ணு.

 

சிவா..

மணம் மலர்களின் இசை.

இசை மனங்களின் மலர்.

இதெல்லாம் ஒனக்கு எப்பிடி தெரியும்?

தெரியும்.


அதான் எப்புடி? என அவன் மீண்டும் கேட்ட மெசேஜ் டெலிவரி ஆவதற்குள் அவள் ஆஃப்லைன் சென்றுவிட்டாள். விடியலுக்குத் தயாராகிய வானம் கருக்கல் நீங்கி வெளுக்கத் துவங்கியிருந்தது.


▁▂▃▄▅▆▇▆▅▄▃▂▁

On the way back, Van Beek, the farmer, took a shortcut through the forest, the mist began to curl up between the trees. Three ghostly figures began to materialize from the mist and approached the farmer. The farmer watched as the forms of three women began to take shape and, still filled with drunk courage, stormed up to the apparitions and grabbed one by the arm. “Dance with me!” he shrieked, as he began to twirl the figure in his arms. Gert’s glee soon turned to panic as the woman unexpectedly pulled him in tighter and began to spin the farmer around and around. The farmer frantically tried to pull away but he no longer had control of his body and was forced to dance all night long with the ghastly spirit. The next day, his body was found in the forest by the townsfolk. He had died from exhaustion after being forced to dance all night.




Comments