🌘
· ꕥ ·
White Buffalo Calf Woman is a sacred woman of supernatural origin, central to the Lakota religion as the primary cultural prophet. Oral traditions relate that she brought the "Seven Sacred Rites" to the Lakota people. She taught the Lakota seven sacred ceremonies to protect the Mother Earth and gave them the čhaŋnúŋpa, the sacred ceremonial pipe.
The seven ceremonies are:
Inípi (purification lodge)
Haŋbléčheyapi (crying for vision)
Wiwáŋyaŋg Wačhípi (Sun Dance)
Huŋkalowaŋpi (making of relatives)
Išnáthi Awíčhalowaŋpi (female puberty ceremony)
Tȟápa Waŋkáyeyapi (throwing of the ball)
Wanáǧi Yuhápi (soul keeping)
Each part of the čhaŋnúŋpa (stem, bowl, tobacco, breath, and smoke) is symbolic of the relationships of the natural world, the elements, humans and the spiritual beings that maintain the cycle of the universe.
✼ ✼ ✼ ✧┉┉┉┉┉❋ ❋ ❋┉┉┉┉┉✧ ✼ ✼ ✼
ஹவ்.
ம்ம்.
ஒனக்கு எது ரொம்ப புடிக்கும்?
Like ரொம்ப ரொம்ப புடிச்சது.
மலர்கள் & இசை.
These two are the most fascinating things in all the worlds.
பூவும் ம்யூசிக்குமா?
சம்மந்தமே இல்லாத ஐட்டங்களா இருக்குதே.
இருக்கு. யுனிவர்ஸ்களுக்குள்ள ஊடுபாவ wormholes ஒரு ரகசிய வழின்னு சொல்லுவாங்கல்ல... அதே மாதிரிதான் பூவும் இசையும். அதுங்க தான் சூட்சும உலகத்துக்கும் இந்த உலகத்துக்கும் இடைல இருக்கிற தொடர்பு, திறப்பு.
யோசிச்சுப்பாரு. மனுசனோட உச்சபட்ச மகிழ்ச்சியான தருணத்துலயும் சோகமான சூழல்லயும் இது ரெண்டுமோ ரெண்டுல ஒன்னோ இருக்கும்.
பூவும் இசையும் ரொம்ப யுனீக். சாப்பாட்ட உன்னால ஒரு அளவுக்கு மேல சாப்புட முடியாதுல்ல. ஆனா வருஷக்கணக்கா இசைய கேட்கலாம் பூவ நுகரலாம். டயர்டே ஆக மாட்டோம், ஃபுல்லா நிரம்பிடுச்சு இதுக்கு மேல எடுத்துக்க முடியாதுன்னு காதோ கண்ணோ மூக்கோ சொல்லவும் சொல்லாது.
I'm all ears (eyes).
❤️
ஒரு பூ பூக்குறது வெறும் பூக்குறதா? அது ஒரு அறிவிப்பு இல்லையா? பூவோட இருப்பும் இன்மையும் எதையோ குறிப்புணர்த்தலையா?
ஒரு பூவத்தேடி பல்லாயிரக்கணக்கான மைல் பறந்து வருமாம் தேனீ. இதுக்குள்ள ஒரு ரகசியம் இருக்கறத உன்னால உணர முடியுதா?
[ஏனைய நாட்களாக இருந்திருந்தால் இன்னேரம்...
தேனீன்னு சொன்னதும் எனக்கு ஒரு தகவல் ஞாபகம் வருது.
என்னது?
எல்லா beesசும் தேன் தான குடுக்கும்,
குறிப்பிட்ட ஒரு வகை bees பால் குடுக்கும் தெரியுமா?
நெஜமாவா?
ஆமா. அதோட பேரு தெரியுமா?
இல்லியே சொல்லு.
boobies. buhahahaha
போடாங்ங்ங். சீரியசா பேசிட்டிருக்கப்ப.
இது முக்கியமானதுதான்.
இந்த வருஷம் க்ரூப் 1 எக்சாம்ல கேட்டாங்களாம்.
... எனக்கூறி இருப்பான். அன்று எதோ சத்தியத்திற்குக் கட்டுப்பட்டதுபோல் மறுபேச்செதுவும் பேசாமல் அவள் சொல்வனவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தான்.]
ஒலகத்துல எல்லாத்துக்குமே எக்ஸ்பயரி இருக்குல்ல. மிக மிகக்கம்மியான ஆயுள் இருக்குற மலர்கள்லருந்து உருவாகற தேனுக்கு மட்டும் எக்ஸ்பயரின்னு ஒன்னு இல்லவே இல்ல பாத்தியா? Did you notice the முரண் in this?
இதுலாம் எதனாலனு யோசிச்சிருக்கியா?
யாருமே இல்லாத காட்டுல ஒரு பூ பூக்குதுல்ல? பாக்க யாருமே இல்லாட்டா அந்தப் பூ யாருக்காக பூக்கணும்? சூரியன் வர்றப்ப மலர்ற பூக்கள் இருக்கு. நிலா வர்றப்ப மலர்ற பூக்களும் இருக்கு. அப்ப காட்டுக்குள்ள மலர்ற பூக்கள் யார் வர்றப்ப பூக்குது?
There is gravity and hence objects are pulled towards it.
As bible says, God said, let there be light and there was light.
உலகத்துல எல்லாமே actions and அதுக்கான reactions தான?
அப்டின்னா வனப்பூக்கள் மலர்றது எதுக்கான ரியாக்ஷன்?
What do you think of flowers?
எனக்கு வாசனை புடிக்குங்கறதால பொதுவாவே பூவ புடிக்கும்.
சில rareரான பூ இருக்குதுல்ல அதுங்களப் பத்தி தேடிப்படிக்கறதுண்டு.
I exactly remember since when I started going behind flowers,
It is after reading this line "you can cut all the flowers but you cannot stop the spring".
It took me days for me to process this.
Pablo Neruda.
Yeah.
சில ரேராப் பூக்கற பூ இருக்குல்ல? like குறிஞ்சி மலர்.
அது எந்த கேலண்டர வச்சு இப்பிடி சரியாப்பூக்குது.
12 வருஷமா யாருக்காக காத்திருக்குது?
நம்ம lifespanனுக்குள்ள நடந்துடுறதால குறிஞ்சிப்பூவப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கோம்.
இதே மாதிரி நூற்றாண்டுகளா மலரக் காத்திருக்க பூ எதுவும் இருக்குதா?
அத யாரும் பாத்துருக்காங்களா?
Folklores மாதிரி ஒவ்வொரு நாட்டுக்கும் இப்பிடி ஒரு அரிய பூ இருக்குதா?
இல்ல, நாட்டுப்புறக் கதைகள் கொஞ்ச கொஞ்ச மாற்றங்களோட
ஒவ்வொரு நாட்டுலையும் சொல்லப்படுற மாதிரி
இந்த அரிய பூக்களும் தங்கள கொஞ்சம் மாத்தி
ஒவ்வொரு நாட்டுக்கு ஏத்த மாதிரி பூத்துக்குதா?
I think I've opened a can of worms.
Do you know about the Penis plant that bloomed recently in the Netherlands?
Amorphophallus decus-silvae.
yeah, அது கடைசியா மலர்ந்தது 90sலையாம்.
இத்தன வருஷம் காத்திருந்து இப்ப இங்க திடீர்னு மலர்ந்திருக்காம்.
I know.
:) ஒனக்காகத்தான் பூத்துருக்கு.
But ஆள விட பெருசா வளந்த அந்தப்பூ
ஏன் அழுகின பொணம் நாத்தம் அடிக்கிதுன்றதுதான் புரியல
இத்துணூண்டு பூவெல்லாம் மணமணக்குறப்ப
இது ஏன் இப்பிடின்னு ஆச்சரிய மர்மமா இருக்கு.
அதே ஃபேமிலில Amorphophallus titanumனு ஒரு பூ கேள்விப்பட்டுருக்கியா?
இல்ல.
அதுக்குப்பேரே corpse flower தான். அதுவும் இப்பிடிதான் நாறும்.
அந்தப் பூவோடு சேர்ந்த நாரும் நாறும்.
ஏன் அப்பிடி?
அழுகுற மாமிச வாடைக்கு காட்டுப்பூச்சிகள்லாம்
அதத்தேடி வரும், thinking it is a dead animal.
அதுகள வச்சு மகரந்த சேர்க்கை நடந்துரும்.
தன்னோட வரலாறு தொடர இப்பிடிப்பட்ட
'விட்டில்' பூச்சிகள ஈர்க்குறது பூக்களோட இயல்பு 😉
ஒரு செடில மூனு பூதான் பூக்குது.
அதுவும் வெறும் 24 மணி நேரத்துல செத்துப்போயிடுது.
எங்கியோ காட்டுக்கு நடூல பூத்து, அதத்தேடி பூச்சிகள வரவச்சு
அதுக்குள்ள இத்தன வேல பாக்குது பாரேன்.
செத்துப்போகுதுன்னு சொல்லாத. வாடிடுதுனு சொல்லு.
சரி வாடிடுது. அப்புடி என்ன அவசரம்னு தெரியல.
மூனு நாள் மட்டும் பூத்து மறுபடியும் ஆண்டுக்கணக்கா தூங்கப்போயிடுது.
அது தூங்கப்போகல.
தன் வருகைக்கான வேலை முடிஞ்சப்பறம் Stealth modeடுக்குப்போயிடுது
அதுக்கான தேவை மறுபடியும் உண்டாகறவரை காத்திருக்க ஆரமிச்சிடும்.
Btw, ஒரு செடியில எத்தன பூ பூக்குதுனு சொன்ன?
3
ஒரே நேரத்துலையா?
இல்ல, அடுத்தடுத்த நாள். ஒன்னு வாடினதும் அடுத்தது மலருது.
as if they were all waiting for some உச்ச நிகழ்வு to happen.
சினிமா ஃபைட் சீன்ல ஒவ்வொருத்தனா வந்து அடிப்பானுகளே, அப்பிடி.
When was the last time you looked up in to the sky?
during last பௌர்ணமி. நிலா பாக்க.
மாசம் முழுக்க நிலா வானத்துலதான இருக்கும்.
What made you to look into the sky?
பௌர்ணமி அப்பதான நிலா பெருசா முழுசா இருக்கும்.
அந்த பௌர்ணமி phase எத்தன நாள் தெரியும்?
2?
No 3 days.
😱😱😱
:)
அப்போ இதெல்லாமே interlinkedடுனு சொல்றியா?
May be. That's upto you to find it.
முதுகு சிலிர்க்குது எனக்கு.
IKR.
சரி இந்தப்பூவப்பத்தி இவ்ளோ சொல்றியே,
எனக்கு ஒரு பூவப்பத்தி தெரியணும்.
ம்ம்.
"Do you know about the Queen of the Night?" என அவன் டைப் செய்துகொண்டிருக்கும்போதே அவளிடமிருந்து மெசேஜ் வந்தது.
நிஷாகந்தி.
˗˗˗ˋˏ மலர்வாள் ˎˊ˗˗˗
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⠿⠟⠋⠉⠉⠁⠀⠀⠀⠀⠀⠉⠉⠙⠛⠿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⠟⠋⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠉⠻⢿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⡿⠋⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠙⠿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⠋⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠙⢿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⡿⠁⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⢀⣤⣿⣦⠀⠀⠀⠀⠀⠀⠻⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⡿⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⣠⣶⣿⣿⣿⡿⠀⠀⠀⠀⠀⠀⠀⠹⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⠁⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⢀⣠⣴⣶⣶⣿⣿⣿⣿⣿⢛⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⢻⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⡇⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⢀⣴⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⢁⣼⣷⣷⠀⠀⠀⠀⠀⠀⠀⠘⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⠃⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⢀⣠⣴⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⠃⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⣀⣤⣾⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⠃⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⡆⠀⠀⠀⠀⠀⠀⠀⠘⢿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⡇⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⣠⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⡀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⢠⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⡀⠀⠀⠀⠀⠀⢠⣾⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⡏⠓⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⣼⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣧⠀⠀⠀⢀⣠⣾⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⡇⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⣰⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣷⡀⣈⣭⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⡀⠀⠀⠀⠀⠀⠀⣴⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⡿⣧⡀⠀⠀⠀⢀⣾⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣷⡀⠀⠀⢀⣴⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣷⣤⣾⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment
Pass a comment here...