முன்குறிப்பு:
இதில் வரும் சம்பவம், பெயர், கதை யாவும்
கற்பனையே உயிரோடிருப்பவரையோ இறந்தவரையோ இனி பிறக்கப்போபவரையோ குறிப்பிடுவன
அல்ல.
பின்முன்குறிப்பு:
இதுல சிலருக்கு டபுள் ,ட்ரிபுள் & எக்கச்சக்க
ரோல்
விஸாம்
கஸ்மீரியை உமர் பாய் குடோனுக்குள்
அழைத்துச்சென்றார். அப்போது அங்கே நோயாளி
போல் தோற்றமளித்த சிலர் இருந்தனர்.
"இவங்களுக்கெல்லாம்
என்ன?"என விஸாம் கேட்க,
"வாதம்,
தீவிர வாதம். டீரிட்மென்ட் குடுக்க
டாக்டர கூட்டிட்டு வர சொன்னா அப்சல்
இப்படி சொதப்பிட்டான், அதான் உங்கள கூப்டேன்."என்றார் உமர்.
" ஏன்
என்ன ஆச்சு?" என்று விஸாம் கேட்டுக்கொண்டே
உள் குடோனுக்குள் நுழைய,
"....ண்ணா"
என்றொரு அபலக்குரல் கேட்டது.
"தளபதி...
நீங்க என்ன இங்க?"
"ஒருத்தர்
வந்து இந்த ஜில்லால யார்
டாக்டர்னு கேட்டாரு. என் நெஞ்சில் குடியிருக்கும்
ரசிகர்களே சொல்லிட்டாங்க... அது நான்தான்னு சொன்னேன்.
கட் பண்ணி பாத்தா என்ன
இங்க கட்டிப்போட்டு வெச்சிருக்காங்க, நீங்க தான் காப்பாத்தனும்.
அப்போது
உமர் பாய், ”விஸாம் தும்கே
இந்த ஆத்மீ மாலுமே க்யா?”என்றார்.
"ஹான்
உமர் பாய்.. மாலும் மாலும்,
டாக்டரின் கால் டாக்டர் அறியும்.
நல்ல மனுஷன் கயித்த கழடி
விடுங்க."
"ஓ!
விஸாம், இந்த டாக்டரும் உன்னைப்போல்
ஒருவன்னு தெரிஞ்சிருந்தா இப்படி பண்ணியிருக்க மாட்டேன்.
மாப் கீஜீயே, மாப் கீஜீயே"
"யோவ்
ஜில்லா டாக்டர் உன்ன திரும்பவும்
கார்ல கொண்டு போய் விட
முடியது, நீயே ஓடிடு...”- உமர்.
"ண்ணா...
கட்ட அவுத்து விட்டு மட்டும்
உடுங்க, கில்லி மாதிரி எப்படி
ஓடுறேன்னு பாருங்க..”
"சரி
சரி... காலைல இங்க வந்ததுலருந்து
இப்ப வரைக்கும் இடைல நடந்தது எதையும்
பாத்ததா வெளிய போயி சொல்லக்கூடாது..சம்ஜே?”
"ண்ணா...
சிஸ்டர் ஜெனி கூட 2000ல
ஒரு சின்ன டிஸ்ப்யூட் வந்ததுலருந்து
இடைல இருக்க எதையும் உற்று
நோக்குறது இல்லங்ணா... இப்ப கூட பாருங்க,
உங்ககிட்ட தான் பேசுறேன் ஆனா
கண்ணு விட்டத்துலருந்து சொட்டிட்டிருக்க தண்ணியதான் பாக்குது. ஹீ ஹீ ஹீ!”
அப்போது
அங்கே ஒருவர் ஒற்றைக்காலால் குதித்தபடியே
வர,
"பாய்,
இவரென்ன? காலத்துக்கி கழுத்துகிட்ட வெச்சிருக்காரு?”
"கால்ல
ஆணியாம் விசாம்”.
"அதுக்குன்னு
இப்படியா..?”
“கொஞ்சம்
பெரிய ஆணி, மதுரை கோச்சடைலருந்து
வந்துருக்காரு.
நம்ம இயக்கம்தான், ஜக்குபாயோட ரிலிஸ் ஆகியிருக்கனும். ஜாமின்
கெடைக்க லேட்டாகிடுச்சு"
“ராணா ஜீ, ஆப்கா ப்ராப்ளம்
போலியே !! ” என்றார் உமர்.
விஸாம்
அவரை நெருங்கி ”என்னாச்சுங்க?”
“சிகரெட்
விஸாம்.” - ராணா
“சாரிங்க
நான் சிகரெட் புடிக்கிறதில்ல” - விஸாம்
“நான்
புடிப்பேங்க” - ராணா
“அதான்
நீங்க சிகரெட் கேக்குறதுலேயே தெரியுதே”
- விஸாம்
“அதில்ல
விஸாம், நான் ஸ்டைலா நெறையா
சிகரெட் புடிப்பேன்.
பஞ்ச்சு
பேசிட்டு, வில்லன்ஸ் மேல பஞ்ச்சு வெச்சு சிகரெட்ட
கீழ போட்டு நசுக்கி நசுக்கி,
கால் வெந்து புண்ணாகிடுச்சு.”
"அப்புறம்?”
"என்
ஃப்ரெண்ட் செந்தில்ன்னு ஒருத்தர். அவர் வீட்ட காட்ட
ஊருக்கு வர சொன்னார்.
வீட்டுக்கு
வரும்முந்தி ஒரு ஃபைட் சீக்வென்ஸ்
இருக்கும்னாரு. ரெண்டு பாக்கெட் சிகரெட்
வாங்கி வச்சுகிட்டேன்."
"என்னை
அரசியலுக்கு வரவைக்க துடிக்கும் நண்பன்
மணிஅன்புன்னு ஒருத்தர், நீங்க சிகரெட் புடிச்சா
எங்க ஆபிஸ் ரூம் வரைக்கும்
வந்துப்போக வேண்டியிருக்கும் சிவாஜின்னார்.”
"அன்புக்கு
கட்டுப்படாதவன் அரசியலுக்கு கட்டுபடுவான். அரசியலுக்கே கூட கட்டுப்படாதவன் அம்மாவுக்கு
கட்டுப்படுவான்."
"நான்
அம்மாவுக்கும் அன்புக்கும் கட்டுப்பட்டு பபுள்கம் வாங்கிட்டேன்."
“ஃபைட்டப்போ
ஒன்னுக்கு ரெண்டா பபுள்கம் போட்டு,
ஃபைட் முடிஞ்சப்புறம் கீழத்துப்பி பழக்க தோசத்துல நான்
அத நசுக்க, அது என்
கால்ல ஒட்ட, நான் அத
எடுக்க கைய வைக்க, அதுவும்
ஒட்ட, இப்ப எல்லாமே இப்டீ
நட்டுக்குச்சு..”
"செந்தில
பாக்க போகும்போது சந்திரமுகி கட்டிங் அடிச்சிட்டு போனேன்.
இப்ப பாருங்க மண்ட மேல
கொண்டயெல்லம் மொளச்சு.....
எதாச்சும்
செய்யுங்க டாக்டர்."
அவருக்கு
தன் கட்டிப்புடி வைத்தியத்தை செய்து, விஸாம் தேற்றி
அங்கிருந்து நகர்ந்து செல்ல
“இவர் யார் உமர் பாய்?”
"இவர்
தான் “வாக்கர் செல். தூக்கத்துல(யும்) நடக்குற வியாதி
இருக்கு. பாம் எங்க வைக்கனும்னாலும்
சரி, just like that னு வெச்சுட்டு வந்துருவார்.
துபாய்
bank managerஆ ஆள் மாறாட்டம் பண்ணி
customer care வேலயெல்லம் பாப்பாருனா பாத்துக்கோங்களேன்."
"மத்தவங்க
மாதிரி கார்லாம் கேக்குறது இல்ல... ducati bike, இல்லனா பொடிநடை."
“இவருக்கு
என்ன problem?”
Cost Cuttingகாக
சில இடத்துல dirty bomb கணக்கா dummy bomb வெச்சு black mail பண்ணி காசு புடுங்குவோம்.
ஒரு தடவ talking bomனு ஒண்ணு வெச்சு
ஒருத்தர மெரட்டும் பொது என் fuse போச்சுனு
சொல்லி அது தானாவே diffuse ஆகிடுச்சு.
அப்போ இவர புடிச்சு கால்லயே
போட்டாங்க. பாவம் நடக்க முடியாம
போச்சு. தரமில்லாத dirty bombஆ குடுத்து தீவிரவாதியோட
walk &வாழ்க்கையோட வெளாட்றீங்களேடான்னு ஆரம்பிச்சுட்டாரு.
அதோட
bomb வெச்சு black mail
call பண்ண சொன்னா, signature மாதிரி “டொக்கு டொக்குனு"
sound குடுத்து வெச்சுடுறார்.
தீவிரவாத
தடுப்பு police தென்னவனும் policerecord.avi
fileஅ windows media
playerல பாத்துட்டு யாரோ நடந்துட்டே இருக்க
தீவிர வியாதி உள்ள திவிரவாதினு
ஈசியா இவர புடிச்சிடுறாங்க.
அப்போது
அப்சல், “பாய் தென்னவன் election commissioner, தீவிரவாத போலிஸ் இல்ல” என
சொல்ல,
"அரே
அப்ரன்டீஸ் டெரரிஸ்ட், windows media player ல டெரரிஸ்ட் லிஸ்ட்
வரும்னா
election commissioner police ஏட்டையாவாகலாம்."
“கோபப்படாதீங்க
உமர் பாய்” இப்போ நான்
என்ன செய்யனும்?" - விஸாம்.
“படுத்தணும்,
எல்லாரையும் குணப்படுத்தணும். இவங்க எல்லாரும் திரும்ப
பழய சத்தியமூர்த்தியா
வர வரைக்கும், படுத்தணும்" - உமர்.
“சரி அதுக்கு முன்னாடி நான்
பிரேயர் பண்ணணும்."
“ரொம்ப
டைம் எடுக்காதீங்க"
“விஸாம்
”ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன்
வஃபில் ஆகிரதி ஹசனதன் வகினா
அதா பன்னார்” என ஓதி முடிகவும்..
"Raghavan, Stay in the process.... கற்க கற்க" என
BGM ஓடவும் சரியாய் இருந்தது..
ROFL Awesome post. இவ்வளவு நகைச்சுவையா எழுதுவீங்கன்னு தெரியாது. கலக்குறீங்க :-)
ReplyDelete,amas32
nice :) keep writing
ReplyDelete
ReplyDelete“ஃபைட்டப்போ ஒன்னுக்கு ரெண்டா பபுள்கம் போட்டு, ஃபைட் முடிஞ்சப்புறம் கீழத்துப்பி பழக்க தோசத்துல நான் அத நசுக்க, அது என் கால்ல ஒட்ட, நான் அத எடுக்க கைய வைக்க, அதுவும் ஒட்ட, இப்ப எல்லாமே இப்டீ நட்டுக்குச்சு///
கலக்கல்...
ஹா ஹா ஹா நல்ல கற்பனை நகைச்சுவை கலந்து நல்லா இருக்கு..
ReplyDelete