எச்டிஎப்சி கார்ட எதோ ஒரு சைட்டுல என்னத்தயோ வாங்கறதுக்கு குடுத்துருக்கேன் போல. அத எவனோ மூக்குல உறிஞ்சி கடத்தெருவுல பர்ச்சேசிங் எறங்கிட்டாம்போல. வரீசையா ஓடீபி வருதேன்னு கார்ட ப்லாக் பண்ணப்போனா, ஏன் ப்லாக் பண்றோம்னு ரீசன் தரனுமாம். அப்பிடி தரப்ப அதுல பெசல் கேரக்டர் இருக்கப்படாதாம். புல்ஸ்டாப் கமாலாம் இல்லாம இங்க என்ன மண்ணில் இந்த காதலன்றி பாட்டாடா பாடிட்டிருக்கோம் புண்டாமனே என கெட்ட வார்த்தைகளால் திட்டத்தோன்றுகிறது. ஆனால் தவறான வார்த்தைகள் பிரயோகித்துப் பழக்கமில்லாததால் தவிர்த்துக்கொள்கிறேன்.
இது அடுத்து. இப்படிக் கண்ட மேனிக்கி ஸ்கேம், ஸ்பேம் வகைதொகையில்லாமல் இறங்குகிறது. நாடும் அதன் மக்களும் எப்படி இதுகாறும் தப்பிப்பிழைத்துள்ளனர் என்பதே ஒரு ஆச்சரியக்குறியாக உள்ளது.
---------------------------------------
a must watch. and the silicon valley's POV of social media. Bingo!
---------------------------------------
புது வருச துவக்கங்கள்ல ஒரு புது அப்லிகேசன் ஃபார்ம் ஃபில்லிங் ஃபீல்ட கேள்விப்பட்டுருப்பீங்க. ஜெண்டர் அப்டிங்கற எடத்துல (அது செக்சு இல்லியாம் ஜெண்டர்னுதான் சொல்ணுமாம்) முன்னல்லாம் என்ன இருக்கும், மேல், பீமேல்னு இருக்கும்ல. அதுக்கப்பறம் அதுல அதர்ஸுனு வந்துச்சு. அப்பறம் அத தர்ட் ஜெண்டர்னு சொன்னாங்க. அப்பறம் ட்ரான்ஸ் ஜெண்டராச்சு. பிற்போக்குத்தனமும் குழப்பங்களும் இருந்ததால இப்பிடி ட்ரையலண்ட் எரர்ல ஒரு மாதிரி எவால்வாகியாச்சு. இதெல்லாம் ஓகேதான்.
அப்பறம் ஒரு குபீர்ப்பாய்ச்சலா நௌன், ப்ரோனௌன், ஆக்சிலரி வர்ப்ஸுன்னு வந்ததும்தான் கும்க்கான்னு ஆச்சு. மொதல்ல அது ஹிஹிம் ஷிஹர் தேதெம்னு இருந்துது. அப்பறம் இட்புட் முழுநிலவு குப்பத்தொட்டி கக்குஸ்ஜக்குன்னு ஓக்குகள் கையில் போனதும்தான் திருவிளையாட்டு ஆரமிச்சுது. இப்பலாம் அது மண்ணெண்ணெய்ல ஓடுதா க்ரஷ்ணாயில்ல ஓடுதானு அதுக்கே தெரியல.
ஆனா இந்த ப்ரோநௌன் செட்டிங்லாம் விழைவுநர்ட்டருந்து தொடங்காம விளிப்புநர்ட்டருந்துதான் தொடங்கிருக்கும்னு நெனைக்கிறேன். அப்பறந்தான் அது பேசன் ஸ்டேட்மெண்ட்டாகி மௌ ப்ரொநௌன்ஸ் ஆர் தீஸ்னு ஆகிருக்கணும்.
ஒரு இண்டர்நேசனல் கடையில பொட்டணம் மடிச்சிட்டிருந்தப்ப ஒரு கஸ்டமர் இஷூ காலிருந்துச்சு. அந்த எக்சிகுடிவ் கிட்ட அர மணி நேரம் பேசியாச்சு. அது பத்தின டிஸ்கசன் மீட்டிங் நம்ம பாஸ்ட்ட இருந்துச்சு. என்ன கொடுமைனா, அந்த எக்சிகுடிவோட பேரு ஆம்பளயா பொம்பளயானு தெரியல. அது ஆளு பாக்கவும் ஆரி பாட்டர்ல வர பசங்க மாதிரியே இருந்துச்சு. இது என்ன பாலர்னே கண்டுபுடிக்க முடியல.
ஆம்பள பையனாருந்தாலும் கொரல் ஒடயுற வரைக்கும் அவனுக்கும் லைட்டா லேடிஸ் வாய்ஸ்தான இருக்கும். அந்த மாதிரி வாய்சுலயும் கண்டுபுடிக்க முடியல. ஆளு நல்லா பதினேழு வயசு ஆரிபாட்டராட்டம் இருந்தாப்ல.
என் பாஸ்ட்ட பேசுறப்ப மொதல்ல குறிக்க எக்சிகுடிவ் பேர சொல்லிட்டேன். எத்தன செண்டன்ஸ்லதான் பேர்லியே ஓட்றது, அடுத்தடுத்த செண்டன்ஸ்ல ஹி,ஷிக்கு மாறனும்ல. தோராயமா ஹின்னு சொன்னேன். கண்டுக்கல. சரி அப்ப அதான் சரி போலனு போல்டா ஹினு சொல்ல, பாஸ் பேசுனப்ப ஷினு ரெஃபர் பண்ணி சொல்றாப்ல. அடங்கொய்யாலக்கனு ஆகிப்போச்சு. டக்குனு எப்பிடி ஹி-லருந்து ஷி-க்கு மாறுறது? அதனால அடுத்து சொல்றப்ப தே-ன்னு சொன்னேன். அதுக்கடுத்து நைசா ஷி-ல லேண்டானேன்.
நல்ல வேளையா அந்தாளு எதும் சொல்லல. அந்தப்பொண்ணுட்டயும் சொல்லிருக்க மாட்டாப்லனு நெனைக்கிறேன். அந்தக்கடைல சேந்த ஒரு மாசத்துல நடந்த கூத்து. வேலைக்கி ஒலையாயிருக்கும்.
அப்பறம் சமீபத்துல lidlலோ jumboவோ, எங்கயோ சுத்திட்டிருந்தப்ப ஒரு நபர். அந்தக்கடைல வேல பாக்கற ஸ்டாஃப். வேற யாரோ எதையோ கேக்க, அத எடுத்துக்குடுக்க வந்தாப்ல. அச்சு அசல் அம்பது பர்சண்ட் அடிச்சு சொல்லுவேன் அது ஆம்பளதான். முகச்சாயல் அகச்சாயல் எல்லாமே அப்பிடிதான் இருந்துது. சட்ட பேண்ட்ட டக்கின் பண்ணி வந்தாப்ல. கடசில பாத்தா லேடிசு. நல்ல வேள நமக்கு எதுவும் அவங்கட்ட கேக்கற தேவை ஏற்படல. இல்லன்னா Meneerனு விளிச்சு ரசவாதம் ஆகிருக்கும்.
இதுக்குத்தான் நண்பர்களே ஐதிங் பண்றேன், இப்பிடி பலர் ஏகப்பட்ட தடவ பட்டிருக்கணும். ஹென்ஸ் ஒருத்தர்ட்ட பேசப்போறப்பவே ஒங்கள எப்பிடி விளிக்கணும், ஹிஷியா தேதெம்மா இட்டது பட்டானால்னு கேட்டுர்றானுகனு நெனைக்கிறேன். அது பாலினத் தோற்றக்குழப்பத்துனாலனு சொன்னா ருத்ரா பாய்கராஜ் கௌதமி மாதிரி எசகு பிசகாகிரும்னு. ஜெண்டர் சாய்ஸ் இஸ் அ பர்சனல் சாய்சுனு புரட்சி சாயம் பூசி வித்துப்புட்டானுக. ஓக்குகளும் நல்லா மடக்கு மடக்குனு குடிச்சு ஏப்பம் உட்டுடுத்துக.
Comments
Post a Comment
Pass a comment here...