இன்னா

 


இசுலாத்தின் பிலாசபிகளில் மிகவும் ஆழமான, பட்டவர்த்தனமான, அண்டப்பொதுத் தத்துவம் இது. இதற்கு ஜிகினாப்பூசி ஸ்டிக்கர் லெவலுக்கு கொண்டு வந்து விட்டிருக்கும் வாட்சப்வாயர்களுக்கு இது இசுலாத்தின் ரூல்புக்படி சரியா தவறா என்பது ஒரு புறமிருக்கட்டும், இப்படி இறப்புச் செய்தி வருகையில் ஸ்டிக்கரெடுத்து ஒட்டுவது இறந்தவருக்குச் செய்யும் அவமதிப்பு என்பதுகூட உறைக்காத அளவுக்கு கெட்டிதட்டிப் போயிருப்பதுதான் பாய்களின் காமன் அறிவு.





------------------------------------------------------------------------


gist of my life, basically




------------------------------------------------------------------------




------------------------------------------------------------------------

மழைக்குருவி

 நமக்கு நிரம்ப புடிச்சதுன்னா அது பெங்ளூர் வெதர் தான். சுரீர்னுமில்லாம ஜில்லோன்னுமில்லாம மப்பும் மந்தாரமுமா இருக்கும். முழுக்க மேக மூட்டமா இருந்தாலே ஒரு ஏஸ்தடிக் லுக் வந்துரும் கவனிச்சிருக்கீங்களா? அது லைட்டிங்னாலயாருக்கும். 

ஆலந்தூர்ல இருக்க ப்ரச்சன என்னனா இங்க காத்தும் அடிக்கும் மழையும் பெய்யும். மழ எவ்ளோ வேணா பேஞ்சுக்கட்டும், காத்து எம்புட்டும் அடிச்சுக்கட்டும். ஆனா ரெண்டு பேரும் பின்னிப் பெணஞ்சு இல்லாம தனித்தனியா செய்யிங்கன்றதுதான் நம்ம கோரிக்கை. 

ரெண்டும் சேந்தாப்ல வரப்ப கொடையும் புடிக்க முடியாது. சொழட்டி அடிக்கும். மழையும் இன்ன ஏங்கில்னு இல்லாம நனச்சு உட்டுரும். ஆன் டாப்பாஃப்ஃபிட் குளிர் வேற. 

ஆனா இங்கருக்கவனுக அது பத்திலாம் கவலப்பட மாட்றானுக, என்ன செய்றது இது ஆலந்துன்னுட்டு சைக்கில எடுத்துட்டு கெபிர்றானுக வேலைக்கி. டேய் இவ்ளோ மழ பேயிதே எப்பிட்ரா சமாளிக்கிறீங்கன்னு கேட்டா, வருத்தமா இருந்தாலும் வருத்தமாத்தான் இருக்குன்னுர்ரானுக. 

இங்க சிஸ்டம், வாழ்வியல் எல்லாமே ஓரளவு வசதி வாய்ப்புகளா இருக்குது. பிரச்சனைகள பேசித் தீத்துக்கலாம்னு நம்பறானுக. அதனால கவலப்படவோ ரேண்ட்டிங் செய்யவோ ஒரு டாபிக்கே இல்ல இவனுகட்ட. அதனாலயோ என்னவோ மழை அல்லது வெயில் டாப்பிக்க எப்பவும் லவ்ஹேட்லியே வச்சிருக்கானுக. எதாச்சும் பொலம்பனும்னா இந்த வெதர் இருக்கிறதேன்னு தாம் பேசுவானுக. (இப்ப சமீபமா இந்தியர்களோட சிவிக் சென்ஸ் இங்க(யும்) பரவலான எரிச்சல்கள கெளப்பறத கண்கூடா பாக்க முடியுது). அதனால அதுவும் ஒரு டாப்பிக் ஆகலாம். 

வருசம் பூராவுமே எதாவது ஒரு வகையில இயற்கை சவால் குடுத்துட்டே இருக்கனால அத எதிர்த்து பெர்சவரன்ச வளத்துக்கிட்டானுக. என்ன தடங்கல் வந்தாலும் கன் மாதிரி வேலைய முடிச்சிர்னும்னு இருக்கானுக. நாமதான் கொஞ்சம் சிலுசிலுனு காத்தடிச்சாலே பேபி மேக் பண்ண கெளம்பிர்றோம். தூத்தல் கீத்தல் போட்டுட்டா பஜ்ஜி மேல பாஞ்சு ராஜா சார ப்லேலிஸ்ட் போட்டு உட்டுர்றோம். உருப்படுங்கடே.


------------------------------------------------------------------------

இப்படியாகவும் முடிந்த பக்கங்கள். 


------------------------------------------------------------------------

when you see 'it'



------------------------------------------------------------------------




----

dies irae படம் முழுவதும் மோகன்லாலின் மகன்லால்...




Comments