முகங்கள கவனிக்கறது நமக்குப் புடிச்ச ஆபி. என்ன ஒன்னு, கிரீப்பியா இருக்குன்னு பொதுஜனம் நெனச்சுக்கும். இதுக்குன்னே ரகசியமா நோட்டம் உடுறதக்கூட நிறுத்திக்கிட்டாச்சு இப்பல்லாம். போனமா வந்தமா பொழப்பப்பாத்தமா பொங்கித்தின்னமான்னே இருந்துக்கிடுறது பங்ளாவுக்கு வெள்ளையடிக்கப்போன கோபாலு.
மேக்கப் அப்டிங்கறது ஒரு வெஸ்டன் இன்னொவேசன் அப்டிங்கறது ஆயம்மாக்குக்கூட தெரியும்தான். அது ஏன் வந்துருக்கும்னு ஒரு அகஸ்மாத்தா தியரி கண்டுபுடிச்சிருக்கேன்.
வெள்ளக்கார முகங்கள்ல பலருக்கு ஒரு மாதிரி (செம்)புள்ளிப் புள்ளியா இருக்கு மூஞ்சி முழுக்க. அது அசிங்கமால்லாம் இல்லன்னாலும் ஏனைய முகங்கள் பளிச்சுன்னு ரத்த நாளம் தெரிய இருக்கப்ப சிலருக்கு மட்டும் இப்பிடி பான்பராக் போட்டு துப்புனாப்ல இருக்கறது பலருக்கு அன்னீசியா இருந்துருக்கலாம். ஆகவே அந்த செம்புள்ளிகள மறைக்க ஒரு லேயராட்டம் மேக்கப் வஸ்துக்கள் வந்துருக்கலாம். அப்பறம் அதையே எல்லா மூஞ்சிகளும் வாங்கி இழுவ ஆரமிச்சு அதுக்குள்ள பில்லியன் டாலர் பிசினஸ்
இருக்கறத மோப்பமிட்ட கேபிடலிஸ்ட்ஸ் இவளுக மண்டைய கழுவறது ஈசின்னு எறங்கி அடிச்சிருக்கானுக.
ஒரு மகான் சொல்லிருக்காப்ல, பொண்ண ஏமாத்துறது கஸ்டம், ஆனா பொண்ணுகள ஏமாத்துறது ஈசி. ஆண்கள ஏமாத்துறது கஸ்டம், ஆண ஏமாத்துறது ஈசின்னு.
சின்ன சைக்காலஜிகல், ஈகோ, பியர் ப்ரெஷர தூண்டி உட்டாப்போதும். முழுசும் புலுப்புலுனு விரிச்ச வலைல விழுந்துரும்க. கிழக்காசிய பெண்கள் முகத்தப்பாருங்க, தட் கொரியன்சுலாம் சாதரணமாவே எதோ ரேடியம்ல செஞ்ச மூஞ்சாட்டம் ஒளிருதுக. அப்பிடிப்பட்ட முகத்துலயே இவனுக பகுடர பூசி அசிங்கமாக்கி வச்சிருக்கானுக எவ்ளோ ஈசியா இதுகள டுஸ்ட் பண்ணலாம்னு பாருங்க.
நம்மூர் புள்ளைகளுக்கோ ஆப்பிரிக்க புள்ளைகளுக்கோ அப்பிடி மூஞ்சில தழும்புகளோ பொரிபொரியாவோ இருந்து பாத்ததில்ல. அண்டில் 90ஸ் வரைக்கும் லிப்ஸ்டிக் பூசி கூட பாத்ததில்ல பொதுமக்கள். பாண்ட்ஸ் பூசும்க அதிக பட்சம். இன்னக்கி ப்ரெசீலியன் வாக்சிங்ல வந்து நிக்கிது.
இதெல்லாம் ஒரு கணம் நின்னு நிதானிச்சு யோசிச்சா குருவி மூளைக்குக்கூட வெளங்கும். ஆனா இந்த அகம்புடிச்ச கழுதைகளுக்கு இதுலாம் ஒரைக்குமா? ம்ம்ம்ஹூம்.
------------------------------------------------------------------------------------------------
Husband husbanding!
----------------------------------------------------------------------------------------------------
resume vs reality பரிதாவங்கள்
Comments
Post a Comment
Pass a comment here...