யாரெனத் தெரிகிறதா?
படங்கள்ல வர்ற மிஸ்டேக்குகள கேச் பண்ணி ஹெஹ்ஹெஹ்ஹேனு சிரிக்கிற வழக்கம் சைக்கோக்களுக்கு உண்டு. எனக்கும். இப்ப அப்பிடி போடுறதுலாம் ட்ரெண்டாகி கூடக்கொஞ்சம் பாப்புலாரிட்டியும் இன்புலுயன்சராருந்தா காசும் கெடைக்குமாதலால் நல்ல யாவாரமா போயிட்டிருக்கு. இப்பிடி சுகிரீன்சாட்டெடுத்து போட்டா அதுல நாலு எஸ்ட்டா ஹிட்ஸ் கெடைச்சிடாதான்னு வேணுக்குன்னே மிஸ்டேக்கும் ஈஸ்டர் முட்டைகளும் இடுற வழக்கங்களும் ஆங்காங்கே தெம்படுது. அந்த ஜானர்ல ஈசியா சிலிப்பாகக்கூடிய இடங்கள் இவை. உஸ்குல் படிக்கிறப்ப மரம் பூமியோட இருக்கும். அதனால கொடிப்பச்ச கீழ வரும்னு ஒரு லாஜிக் வச்சு கொடியக்குத்திட்டு போறது.
இந்திய சினிமாவுல கூட்டமா கொடிய தூக்கிட்டு போற சீனாருந்தா கண்டிப்பா சொல்லலாம், அங்க எதாச்சும் ஒரு கொடி தலகீழா இருக்கும்னு. அந்தளவுக்கு ப்ரொடக்சன் & ஆர்ட் டிப்பார்ட்மண்ட் நம்பகத்தன்மையோட இருக்குது. நாம மொதல்ல கவனிச்சது ரெண்டாவதா போட்டுருக்க பாட்டுலதான். அப்பறந்தான் நம்ம தியரிய செக் பண்ண கொடிகள் இருக்கற வேற பாட்டு எதுனு தேடுறப்ப ஆசினி மேடத்தோட படம் சிக்குச்சு. நம் தியரிய மெய்ப்பிக்கும் வகையில அதுலயும் இப்பிடி கொடிஸ்லிப் நடந்துருக்கு. பாட்டுல சில நொடியில கடந்து போற ஷாட்டுகள்னாலும் அன்னிக்கி லொகேசன்ல அத்தன மணி நேரம் இதெல்லாம் இருந்துருக்குமே செட்டுல ஒருத்தனுக்கு கூடவா இது கண்ண உறுத்தல? ஆச்சரிய வுட்!
செஸ் சாம்பியன்ச கூப்ட்டு கூட வெள்ளாண்டுட்டே அவிங்யள டிஸ்ட்ராக்ட் பண்ணி அவனுகள தோக்கடிக்கிற வெள்ளாட்டு வெள்ளாடுதுக இந்த ரெண்டு அக்காதங்கச்சி வெள்ளாடுகளும். ஒருத்தி வெளாட வெளாட இன்னொருத்தி கேள்வி கேட்டு டிஸ்டாக்ட் பண்றதுதான் கான்சப்ட்டாம். ஆனா பாருங்க வெளாடுற வெள்ளாடே கொஞ்சம் இன்னங்கொஞ்சம் தணிஞ்சு குனிஞ்சா மொத்தமா டிஸ்டாக்ட் ஆகிடுவனுக பசங்க. கேள்வியே கேக்க வேணாம். ஐடியா இல்லாத புள்ளைக. அதே சமயம் அந்த பசங்களோட கூர் நோக்கும், மனோ திடத்தையும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.
-----------------
Comments
Post a Comment
Pass a comment here...