துணுக்கும் இசை

இங்கருக்க துருக்கிப் பள்ளியிலதான் அவ்வப்போது ஆண்டவர பாக்கப்போறது. அப்ப தொழுகை முடிஞ்சு இத ஓது (பாடு?)வாங்க துருக்கியர்கள். கேக்க நல்லாருக்கேன்னு கேக்கறப்ப, இத எங்கயோ கேட்டுருக்கமேன்னும் தோணும். அந்த ட்யூனு மட்டும் புரியும் ஆனா இத எங்க கேட்டுருக்கோம்னு புடிபடவே இல்ல. 




இந்தளவுக்கு ஆத்தெண்டிக்கா காப்பி பேஸ்ட் பண்றது யார்ராருக்கும்னு யோசிச்சப்ப அட நம்ம ஆழ்வார்ப்பேட்ட ஆண்டகைனு ஒரு நாள் ஃப்லாஷ் அடிச்சுது. ஆனா உண்மையிலயே நல்ல எஃபர்ட் ஐ'ட் ஸே...




-=-


உயிர அறுக்கும்னு சொல்லுவாங்கல்ல, தட் இசை இந்த பிஜிஎம் துணுக்குல கேட்கக்கிடக்குது மகிழுங்கள். இங்கருந்துதான் அறியாத வயசு பாட்டுல வர ஃப்லூட் இண்டர்லூட சுட்டுருக்கு ப்ரேம்ஜி. ஒவ்வொரு வாட்டி கேக்குறப்பவும், எத்தன தடவ கேட்டாலும் ஒரு மாதிரி காது அடச்சு, ஒடம்பு கனமாகி திக்குன்னு ஃபீல் கட்டிப்போவும் ஒடம்புல. ராஜா நீ வாழி! 




Comments