வாழ்க்கையில் பெரும்பகுதி நீர்ப்பற்றாக்குறை மிகுந்த புவியியலிலேயே வசித்ததாலோ என்னவோ மூளைக்குள் எப்போதும் ஒரு சரடு, உப்புநீரை நன்னீராக்கும் வித்தையைக் குறித்தே யோசித்துக்கொண்டிருக்கும். அயல்நாட்டிற்கு வந்தபின், இங்கே பைப்பைத் திறந்தால் மளமளவென நீர் பெருகியோடுவதே ஒரு மாதிரி கில்ட்டைத் தரும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம்.
ஆண்டாண்டு காலமாக சைன்ஸ் பெருமக்களின் ஃபெட்டிஷ் ஃபேண்டசி ஒரு பெர்ப்பச்சுவல் மிசினைக் கண்டுபிடித்துவிடவேண்டுமென்பது. ஆனால் தெர்மோடைனமிக்சின் விதிகள் அதற்கு ஒத்துழைக்க மறுப்பதால் அது பகற்கனவாகவே நிகழ்கிறது.
நமக்கு என்ன ஆச்சரியமென்றால், இயல்பிலேயே கொட்டிக்கிடக்கும் பெர்ப்பச்சுவல் எனர்ஜி மற்றும் ஃபோர்ஸ், அதிலும் குறிப்பாக, லக்காக அமைந்த ஜியாக்ரபியின் காரணத்தால் இந்தியாவில் போதும் போதுமெனுமளவுக்கு பரந்து விரிந்து கிடந்தும் அதை ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே.
ஒரு துண்டான மிசின் எப்போதும் சுற்றிக்கொண்டிருப்பது மட்டுமா பெர்ப்பச்சுவல்?
எப்போதும் ஒளிர்விடும் உதயசூரியன் மற்றும் அனுதினமும் அலையாடும் கடலலைகள். இந்த ரெண்டு காம்போவையும் சரிவிகித சமானத்தில் பயன்படுத்தினால் என்ன?
நாம் புறப்பட்டு வந்த மாவட்டத்தில் தண்ணீர் கிடைப்பதே அபூர்வம், கிடைக்கும் தண்ணீரும் உப்பும், சுண்ணாம்பும் நீக்கமற நிறைந்திருக்கும். எத்தனை குடித்தாலும் தண்ணீர்த்தாகம் போகாது. அதற்கு மேலாக, ஊரில் பாதிப்பேருக்கு கிட்னிக்கல் கிடக்கும். நாட்பட நாட்பட, பக்கெட் முதல் தண்ணீர் புழங்கும் எல்லா இடத்திலும் வில்லை வில்லையாகச் சுண்ணாம்பும் இன்ன பிற உப்பும் படர்ந்திருக்கும்.
அந்தத் தண்ணீரை தலையில் ஊற்றி ஒரு பாட்டில் முழுவதுமான சேம்ப்பூவை ஊற்றினாலும் சேம்ப்பூ பூக்காது, ஐ மீன் நுரைக்காது. நம் மனத்திருப்திக்காக நாலு தேய் தேய்த்துவிட்டு தண்ணீரூற்றிக்கழுகவேண்டிதான்.
இப்படியாக போய்க்கொண்டிருக்கும் தருணத்திலேதான் டீசேலினேசன் ப்லாண்ட்டுகளும் குடிநீரைப் பெருக்குவதற்குமான திட்டங்களும் நம் கவனத்தை பெருவாரி ஈர்த்தன. மழை நீர் சேகரிக்கும் திட்டத்தை தமிழ் நாடு முழுவதிலும் ஒவ்வொரு கட்டடத்திலும் கட்டாயமாக்கிச் சட்டம் கொண்டு வர வேண்டும். அது பெருமளவு நீராதாரத்தைப் பெருக்கும்.
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் மனது எனும் மூளை, குடிநீருக்கு டீசலைன் செய்வது சற்று காஸ்ட்லி, அட்லீஸ்ட் புழங்குவதற்காவது சல்லிசாக உப்பு நீக்கப்பட்ட நீரைப் பெறும் வழி ஏதும் உள்ளதா என யோசித்துக்கொண்டே இருக்கும்.
மோட்டரி ஆக்சனுக்கு அலை இருக்கிறது, சூடு பரப்பி தண்ணியைக் காய வைக்கச் சூரியன் இருக்கிறது. இந்த ப்ராசசுக்குத் தேவையான ரெண்டுமே தேவைக்கு அதிகமாகவே ஓசிக்கி இருக்கையில் இதை ஏன் மக்கள் ஆரெண்டி செய்து காஸ்ட் எஃபக்டிவ், ஸ்கேலபில் மிசின்களைக் கண்டுபிடிக்க மாட்டிங்கிறர் என்பது உள்ளபடியே வருத்தம் தருகிறது.
பின்னிரவுகளில் தூக்கங்கள் வராத பொழுது, அந்த மிசினை டிசைன் செய்ய மண்டை யோசித்துக்கொண்டே இருக்கும்.
ஒரு அடிச்சட்டி, அலையடித்து அதில் நீர் சேர, சட்டிக்கு மேலே கண்ணாடி லென்சு (சூரியனைக் கூர்மைப்படுத்தி குறிப்பிட்ட இடத்தில் சூட்டைத் தர (லென்சு வைத்து பேப்பர், தீக்குச்சியைப் பொருத்துவார்களே, அந்த லாஜிக்)), வெப்பத்தில் ஆவியாகும் நீராவியைப் பிடித்து, குளிர்வித்து, மீண்டும் நீராக்கித் தர ஒரு நீண்ட குழாய், அடிச்சட்டியில் தேங்கும் உப்பை கழுவி நீக்க மேலும் அலைகள். இப்படி எஸ்டா பவர் ஏதுமே எடுக்காமல் செல்ஃப் சஸ்டைனிங்காக, வெட்-க்ரைண்டரளவில் மிதக்கும் மிசின்களை நம் கடல்புறத்தில் விட்டு, அதிலுண்டாகும் நீரை, பண்ட பாத்திரம் கழுவ, செடிக்கூத்த, குளிக்கக்கழுவ பல் துலக்க இப்படி பயன்படுத்தினால், குடிநீரின் தேவை கொஞ்சம் குறையுமல்லவா? தற்போது குடிநீரைத்தானே எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறார்கள் பெரும்பாலர். அப்படி இல்லாமல் OOPS கான்சப்ட்டை அப்லை செய்து, பணி பிரித்துப் பயன்படுத்தலாம்.
ஏஅய்யிடம் அப்படி ஒரு மிசினை டிசைன் செய்து கொடு என்று கேட்டால் அல்மோஸ்ட் எல்லாமே ஒரே மாதிரி படங்கள் தந்தன தந்தன தைமாசம். பார்ப்போம் நம் மேனிபெஸ்டேசன் கேட்டு அப்படி யாரும் டிசைன்கிறார்களாவென்று.
டிட்பிட்:
Comments
Post a Comment
Pass a comment here...