வடக்கு பான்பராக் வாயன்களின் இந்தி திணிப்புதானே கேள்விப்பட்டிருக்கிறீர்கள், இன்னொரு வகைமை இருக்கிறது நண்பர்களே, அது பரவலாகப் பேசப்படாததால் வெளித் தெரிவதில்லை. உங்களில் சிலர் இதைக் கடந்து வந்திருக்கக் கூடும். பாயாக இருந்தாலே அவர் இந்தி அல்லது உருது பேசுவார் என அஷ்யூம் செய்து கொள்ளும் இழிநிலை இங்கிருக்கிறது. இல்லை எனக்கு இந்தியோ உருதோ தெரியாது, நான் தமிழ் பேசும் முஸ்லிம் எனச்சொன்னால் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பது இந்துக்களோ ஏதியிஸ்களோ கிறுத்துவர்களோ அல்ல. பாய்மார்களே. குறிப்பாக உருது பேசும் பாய்கள். எப்படி முஸ்லிமாய் இருந்துகொண்டு உருது / இந்தி தெரியாமல் இருக்கிறாய் என்பது அவர்களால் நம்பவே முடியாத விஷயமாய் இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை பாயென்றால் குஞ்சிக்கல்யாணம் செய்திருக்க வேண்டும், மேலும் உருது பேச வேண்டும். அவர்களின் அறியாமையை எண்ணினால் ஒரு பக்கம் சிரிப்பு வரும், மறு பக்கம் இவ்ளோ லூஸ்கூவியாய் இருக்கிறாயே டேய் எனவும் தோணும். நாம் கல்லூரி படிக்கையில் இப்படியான வாய்த்தகராறுகள் வந்திருக்கின்றன. பாயா இருந்துகொண்டு உருது ஏன் பேசத்தெரியவில்லை என ஒருவன் கேட்க, ஒரு அழகிய திருக் கெட்டவார்த்தை சொல்லி, அட்லீஸ்ட் அரபி ஏன் தெரியலன்னு கேட்டாலாச்சும் ஒரு வகையில ஒத்துக்கலாம், உருது எதுக்குடா தெரியனும் புண்டாபேட்டா எனக் கேட்டதும் அந்த நண்பர் சற்று திடுக்கிட்டார் என்றே சொல்ல வேண்டும். மேலும் தொடர்ந்து, ஜப்பான்ல சைனால இருக்குற முஸ்லிம்சுலாம் என்னடா பேசுவாங்க படுவா பெத்த புடுவா என்றதும் தான் ஓ ராணிப்பெட் பள்ளிகொண்டாவையும் தாண்டி உலகம் விரிந்திருக்கிறது போல எனும் திறப்பு அந்த நண்பருக்கு ஏற்பட்டது.
சமீபத்தில் இன்ஸ்டாவில் பொறுக்கிக்கொண்டிருந்த போது ஒரு பாய் புள்ள லைவ் கண்ணில் பட்டது. அது தமிழ்பேசும் பாய்புள்ள போல. அங்கும் ஒரு தற்குறி வந்து உருதுவோ இந்தியோ பேசாவிட்டால் நீ முஸ்லிமே இல்லை என பத்துவா கொடுத்துக்கொண்டிருந்தான். மொதல்ல அன்னியப் பெண்களின் லைவுக்கு வந்த ஒங்குண்டிலதாண்டா அல்லா லத்திய வுட்டு ஆட்டுவாரு என கமண்ட் செய்யும் ஆப்சனை மாற்க்கு வழங்கவில்லையாதலால் சொல்ல முடியாமல் போயிற்று.
பார்த்துவிட்டீர்களா? அந்த வித்தியாசத்தை உணர்ந்தீர்களா?
அப்போது இந்திய பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலையிலிருந்தேன், அங்கே டெஸ்டிங்குக்காக ஒரு மாபெரும் ஐமேக் இருக்கும். எங்கள் ப்ராஜக்ட் பல ப்ரௌசர்களிலும் பல ஓயெஸ்களிலும் டெஸ்ட் செய்யப்பட வேண்டுமென்பதால் அக்கௌண்ட்டில் வாங்கப்பட்ட iMac அது. அனுஷ்கா மற்றும் கேயார்விஜயா போல பிரம்மாண்டமாகவும் பேரழகோடும் இருக்கும். அதன் ஒலித்தரம் இருக்கிறதே, அப்பப்பா! செடக்டிவ் காதலியின் ஓமைகாட் முனகல் போலக் கேட்கக் கேட்கக் காதுகள் ஆர்கஸமிக்கும். அப்போதெல்லாம் நிரந்தர டிப்ரசனில் இருந்ததால் நள்ளிரவு தாண்டியும் ஓடிசி எனப்படும் வொர்க்ஸ்டேசனிலேயே இருப்பேன். ஆளே இல்லாத சீல் அடைக்கப்பட்ட ஃப்லோரில் தனியாக இருந்து இதை ஃபுல் வால்யூமில் அலறவிட்டுக் கேட்பது அலாதியின்பம். அப்போது இப்போதிருப்பது போன்ற பொதுவான அறிவு குறைவாதலால் அந்த வயலின்காரர் தான் ஆன்ஸ் ஜிம்மர் என நினைத்திருந்தேன். லாவகமாக அவர் வாசிப்பதும் அந்த ஷோமேன்ஷிப்பும் அசத்தும். கிட்டத்தட்ட அய்ந்தாறு வருடங்களாக இதைக் காணவே இல்லை. சமீபத்தில் நடு இரவில் ஆய்ந்து கொண்டிருந்தபோது, அடடே வெகு நாளாச்சே எனத் திரும்பக் கேட்டதில் நாஸ்டால்ஜியா மின்னல் ஒரு முறை அடித்துச் சென்றது.
அந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்காதவர்கள் மீண்டுமொருமுறை கண்டுவிட்டு வரவும். இந்த முறையாவது கண்டுபிடிக்கிறீர்களா என்று பாருங்கள்.
ஆச்சா? இந்த லைவ் கான்சர்ட் மொபைல் போன்கள் (சுமார்ட் போன்கள் குறிப்பாக) பரவலாவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வு. எப்படி அத்தனை பேரும் கோய்ந்தா கோய்ந்தா என கரமுயர்த்தி போட்டோக்கள் எடுக்காமல் அந்த நிகழ்வை, அந்த நொடியின் துய்த்து இன்புற்றிருக்கின்றனர் எனக் கவனியுங்கள். போட்டோ எடுக்கும் சிலரும் கேமரா கொண்டு, தேவைக்கு நாலு கிலிக் செய்துகொண்டிருக்கின்றனர். இதே கான்சர்ட் இப்போது நிகழ்ந்தால், அரீனாவில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளைவிட போன் கேமிரா ஃப்லாஷுகள் நூறு மடங்கு அதிகரித்தும், கலந்து கொண்ட எவரும் அந்த உன்னத நிமிடங்களை அனுபவிக்காமல், சோமீயில் ஸ்டோரீஸ் டயரியாக்கொட்ட ரிக்கார்டு செய்துகொண்டிருப்பர். Gone are the days!
குபீர்:
Comments
Post a Comment
Pass a comment here...