எலக்சன் கலக்சன்

 Psychoக்கள் எனப்படும் பிசிக்கோக்கள் எவிரிவேர்!


எதேச்சையாக ஏதோ ஒரு கிறுக்கன் செய்த கிறுக்கல் எனக் கண்டுக் கடக்கையில் கவனத்தை ஈர்த்தது இந்த லிப்டுப்புரட்சி! 





லிப்ட்டு என்றதும் நினைவுக்கு வருகிறது. பொதுவாக எல்லா லிப்டிலும் அதன் மேக்சிமம் ஆக்குபன்சியைக் குறிக்கையில், இத்தனை பேர் மற்றும் இத்தனை கிலோ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதெப்படி இத்தனை பேர் இத்தனை கிலோவாகத்தான் இருக்க வேண்டும் என நீ வற்புறுத்தலாம் என எப்படி வோக்குகள் இன்னும் கேன்சல் கல்ச்சரைக் கையிலெடுக்கவில்லை என்பது உள்ளபடியே ஆச்சரியமூட்டுகிறது!


*-*


ஒரு அறிஞர் சொன்னபடி இவர்கள் ஓட்டிங் மிசினை டேம்ப்பர் செய்யவில்லை, எலக்சனையே உடைத்துவிட்டனர். திடீரென நமக்கு இப்படி ஒரு மெசேஜ். எவன் எங்கே நம் ஒட்டிங் கார்டை மாத்தியிருக்கிறானோ தெரியவில்லை. சமீபத்தில் அதிகப்படியான போலி வாக்காளர்களை வடக்கில் சேர்த்த விடயமும் நினைவு வருகிறது. போலவே ஒரே வாக்காளர் எண்ணுக்கு இரண்டு கார்டுகள் இருந்ததும் மறக்க வேண்டாம். 



-=-=-

இனிவரும் இந்தியப் பயணங்கள் எந்தெந்த இடங்களில் என்னென்ன ஐட்டங்கள் சாப்பிட வேண்டும் என்பதோடு குறுகிப்போய்விடும் என்றுதான் தோன்றுகிறது. புகழ்பெரும் எழுத்தாளர் ஒருவரோடு உணவருந்திய தருணம்! 





Comments