செல்லமுத்து நன்னாரி

 முயல்... தெரிகிறதா? முயல். 







-=-=-
ஊர்ப்பக்கம் நோம்புகளை செல்லமுத்து சர்பத் (கலோக்கியலாக சருவத்து) இல்லாமல் யோசிக்கவே முடியாது. கண்ணாடி அல்லது ஸ்டீல் குவளைகளுக்குள் ரெண்டு ஸ்பூன் செல்லமுத்து நன்னாரி சர்பத்தை ஊற்றி, பின் இரண்டு நெல்லிக்காயளவு எலுமிச்சைகளைப் பிஸ்க் பிஸ்க் எனப் பிழிந்து, பின் சக்கரைகளை அள்ளித்தட்டி, நான்கைந்து ஐஸ்கட்டிகளைக் கலந்து, மிச்ச இடத்தை நீரால் றெப்பி, ஸ்பூனால் டம்ளரை கிலிங்கிலிங்கிலிங் என ஒரு கலக்கு கலக்கி எடுத்துக் குடித்தால் அந்தச் சுவை இருக்கிறதே சுவை... அள்ளிப்பருக வேண்டிய அமிர்தமடா அது!


அவனவன் வெளிநாடுகளுக்கு எதை எதையோ எடுத்துக்கொண்டு போவான். நாம் நாஸ்டால்ஜியாவுக்காக செல்லமுத்து நன்னாரியைத் தான் கொணர வேண்டி உள்ளது. பைதவே, ஏன் செமுநச எல்லாம் இண்டர்நேசனல் ப்ராண்டாக ஆகி ஆலோவர் தி வேர்ல்டு சேல்சுகள் நடைபெறுவதில்லை? நாம் சிறு வயதிலிருந்த போதே அப்போதிருந்த பெருசுகள் அவர்கள் சிறுவயதாக இருந்தபொழுதிலிருந்து செல்லமுத்து நன்னாரியைப் பருகுவதாகச் சொல்லுவர். இப்படி அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாறிருந்தும் ஏன் கடல் கடக்கவில்லை செல்லமுத்து? 


-=-=-

குபீர்!

எப்போது பார்த்தாலும்!

எத்தனை முறை பார்த்தாலும்!





Comments